PoK To Be Integrated Into India In 2025, PM Modi Going Through Mangal Mahadasha, Claims Astrologer Who Predicted Russia-Ukraine War Lok Sabha Election 2024 | Astrologer on PM Modi: அடுத்த மோடிதான்; அவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார்


18-வது மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புகழ் பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பரதாப் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்தைத் தெரிவித்துள்ளார். 
அதில், “ஜோதிட ரீதியாக, பிரதமர் மோடி தற்போது செவ்வாய் மஹாதிசையில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நிலம் தொடர்பான விஷயங்கள் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK), ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரை இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படலாம். மேலும், 2024 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமையும்” என தெரிவித்துள்ளார்.  

Astrologically, Prime Minister Modi is currently going through his Mars Mahadasha. It is speculated that land-related matters will be a significant focus during this period. Pakistan-occupied Kashmir (POK), might potentially be integrated into India between April 2025 – September… pic.twitter.com/OgsewOFrzF
— Rudra Karan Partaap🇮🇳 (@Karanpartap01) April 6, 2024

ஜோதிடர் ருத்ர கரண் பரதாபின் இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இவர் வரவிருக்கும் ஆந்திர பிரதேச பொதுத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும், 2027-ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தனது ஜோதிட கணிப்புகள் மூலம் கூறியுள்ளார். 

மேலும் காண

Source link