பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி, கே.பாலு ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்… தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்கு வருந்துகிறேன்.

தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்தது போல் வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை நிகழ்த்தப்போகிறது. வேலூரில் நடக்கும் எழுச்சிமிகு கூட்டத்தை டெல்லியில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக நல்ல இந்தியாவுக்கான அடித்தளத்தை வளர்த்து வைத்துள்ளோம். உலக அளவில் இந்தியா பலமிகு நாடாக உள்ளது. அதில் தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. சென்னை பெங்களூர் தொழில்துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கிறது. வேலூர் மக்களின் எதிர்ப்பார்ப்பை கருத்தில் கொண்டு வேலூரில் விரைவில் விமான நிலையம் நிறுவப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் அரசியல் செய்கிறது. திமுக என்பது குடும்ப நிறுவனத்தை போன்றது. தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறது. திமுக குடும்ப அரசியலால் இளைஞர்கள் முன்னேறாமல் இருக்கின்றனர். ஒட்டுமொத்த திமுகவும் ஒரே ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. கொள்ளையடிப்பதிலும் ஊழல் செய்வதிலும் காப்பி ரைட் வைத்துள்ளது திமுக.

குடும்ப அரசியல், ஊழலால் திமுக தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. தமிழகத்தை திமுக குடும்பம் கொள்ளை அடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக. திமுக பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. அம்மா ஜெயலலிதாவை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களை திமுக இழிவுபடுத்துகிறது. இந்தியா கூட்டணியினர் பெண்கலை புறக்கணிக்கின்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி பாஜகவினருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. ” எனத் தெரிவித்தார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
is online casino $20 min deposit (Tegan) gambling banned in australia, online gambling usa law and whats the largest casino…
nexus darknet url nexus darkweb link
Продукты мелким оптом с доставкой https://wholesale-food.ru
abacus darknet url dark matter darknet market
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்! | ACTPnews.com

“மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர் | ACTPnews.com

‘பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?’ – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி! | ACTPnews.com

‘மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் முடக்கம்!’ – திமுகவை சாடிய ஆதவ் |“Joining hands with religious extremists, the All-Caste Priest Scheme has been stalled!” – Aadhav slams DMK | ACTPnews.com

copa del rey 2025 apuestas – https://Www.Agmemorabilia.com/, octavos eurocopa