PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” – நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி


<p>18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.&nbsp;</p>
<p>அப்போது அவர் பேசுகையில், சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரயிலானல் இந்த பகுதி அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெற்கிலும் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது. தமிழகத்தின் புராதான சின்னங்கள் உலகப் புகழ் பெறும். தமிழ்நாட்டின் மகளிர் மோடிக்கு ஆதரவளிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றனர். மோடிக்கு பெண்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவு இருப்பதைப் பார்த்து ஆய்வாளர்களே ஆச்சரியப்படுகின்றனர். திருவள்ளுவர் கலச்சார மையம் உலகம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது.&nbsp;</p>
<p>தமிழ்நாட்டு பெண்களின் சிரமத்தை உணர்ந்து அதனை துடைக்கும் செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். தேசத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை தி.மு.க தொடர்ந்து அவமதித்துக் கொண்டு உள்ளது. காமராஜரை தி.மு.க.,வும் காங்கிரஸ் கட்சியும் அவமதித்துக் கொண்டு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் நரேந்திர மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.&nbsp;</p>
<p>40 ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் திரை மறைவில் செய்ததை வெளிச்சம் போட்டுக்காட்டியது பா.ஜ.க தான். கச்சாத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது யார்? உங்கள் ஆசிர்வாதத்தால் ஊழல்வாதிகளுடன் சேர்ந்து பேதைப் பொருள் கடத்தல் காரர்களையும் எதிர்ப்பேன்&rdquo; என பேசினார்.&nbsp;</p>

Source link