குஜராத்தில் பிரதமர் மோடி:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

அந்த வகையில், இன்று தனது சொந்த மாநிலமான  குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைத்தார்.

ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம்,  புகழ்பெற்ற துவாரகதீஷ் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பார்க்கப்படுகிறது.

துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி:

சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, துவாரகை நகரத்தில் கடலுக்கு அடியில் பூஜை செய்து வழிபட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "நீரில் மூழ்கியிருக்கும் துவாரகை நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. இந்தியாவின் ஆன்மீக மற்றும் வரலாற்று வேர்களுடன் ஒரு அரிய மற்றும் ஆழமான தொடர்பை வழங்கியது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” என்று பதிவிட்டிருந்தார்.

Source link

Latest News

View All

1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed