Pakistan Imran Khan and His Wife’s 14-Year Jail Term Suspended In Toshakhana Corruption Case | Imran Khan: இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு


அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan), அவரது மனைவி புஷ்ரா பீவி (Bushra Bibi) இருவருக்கும் விதிக்கப்பட்ட  14 ஆண்டு கால சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
புஷ்ரா பீவி வழக்கு 
இம்ரான் கான் – புஷ்ரா பீவி இருவரும் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். 2017-ம் ஆண்டில் கவார் பிரீத்தும் புஷ்ரா பீவியும் விவாகரத்து பெற்றனர். இஸ்லாம் திருமண விதிகளின்படி கணவரை இழந்த அல்லது விவாகரத்து செய்த பெண் உடனடியாக மறுமணம் செய்யக்கூடாது என்றிருக்கிறது. ( சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்கான காலம் ) ஆனால், புஷ்ரா இந்த காலம் நிறைவதற்கு முன்பே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக புஷ்ராவின்  முன்னாள் கணவர் கவார் பிரீத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராயல்பிண்டி நீதிமன்றம் முஸ்லீன் திருமணம் விதிகளை மீறியதற்காக இம்ரான் கான், அவரது மணைவி புஷ்ரா பீவிக்கு இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைப்பு
திருமண விதிமுறைகளை மீறிய வழக்கின் விசாரணையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (Islamabad High Court (IHC) ) தலைமை நீதிபதி ஆமர் ஃபரூக் (Aamer Farooq) இருவரின் 14- ஆண்டுகால தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெருநாள் பண்டிகை விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதன் பிறகே, 14- ஆண்டுகால தண்டனை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபது தெரிவித்திருக்கிறார்.  
தோஷாகானா வழக்கு
இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். பிறகு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.  கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார்.  2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.
நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு,  கடும்  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.
இம்ரான் பதவிகாலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய  விலை உயர்ந்த  பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில்  விற்றது, அரசின் முக்கிய ஆவணங்களை கசிய விட்டது, அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு உள்ளிட்டவைகளுக்காக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. .இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு நிரூபணம் ஆகியுள்ளது. ஊழல் குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கு முன்பு, இம்ரான் கான் மீதான வழக்கில் தீர்வு வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு, ஐந்தாண்டு காலம் அரசியலில் ஈடுபடுவதற்கும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. 
இந்நிலையில், இஸ்லாம் திருமணம் விதிகள் மீறப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அவர் சிறையிலிருந்து வெளி வரமுடியாது. அவர்மீது சுமார் 200 வழக்குகள் இருப்பதாலும் மூன்று வழக்குகளில் அவருக்கு 31 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண

Source link