தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக சாடியிருந்தார்.
‘முதல்வர் விஜய் பேசியதாவது, ‘ஆட்சியமைத்த 100 நாள்களில் மாநில அளவில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.
2026 தேர்தலில் மக்களெல்லாம் தவெகவுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, இன்னமும் நாம்தான் முதல்வராக இருக்கிறோம். நம்முடைய குடும்பம் அதிகாரத்தில் இருக்கிறது என நினைக்கும் மன்னராட்சி மனப்பான்மை நமக்கு கிடையாது.

அண்ணாவையும் மறந்துவிட்டு அவர் ஆரம்பத்த கட்சியையும் மறந்துவிட்டு திமுகவுடன் சுயநலமாக கூட்டு சேர்ந்து சுற்றுபவர்களும் நாம் கிடையாது.
யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாமில்லை எனக் கூறித்தான் அரசியலுக்கே வந்தோம். அதனால்தான் நம் கூட்டணியின் பெயர் மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி.
நாம் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்வோம். கிறிஸ்துமஸூக்கும் பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்வோம். திமுக மாதிரி பம்மி பதுங்கி வேடம் போட்டு இருக்க மாட்டோம்.
அண்ணா காலத்தில் சாதாரண ஆட்களை நிறுத்தித்தான் அப்போதைய மன்னர்களை தோற்கடித்ததாக திமுக பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அண்ணா காலத்திலும் அதுதான் நடந்தது. எம்.ஜி.ஆர் காலத்திலும் அதுதான் நடந்தது. இப்போதும் அதுதான் நடக்கிறது. திமுக பொதுச்செயலாளருக்கு தலைமையோடு என்ன பிரச்னையோ… திமுக தலைமையின் மண்டையில் குட்டுவதைப் போலவே பேசியிருக்கிறார்.

திமுக தலைவர் கொளத்தூர் மக்கள் தனக்கு வாக்களிக்காததற்காக நன்றி கூறுகிறார். என்ன ஒரு பெர்பார்மென்ஸ் பாருங்க. ஷூட்டிங் போய்தான் நடிப்பார்கள். இவர் மேடையில் பேசி பேசியே நடிக்க பழகிவிட்டார் போல.
அதற்கும் விஜய்தான் காரணமென நம்மை ஒருமையில் `அவன்… இவன்’ எனப் பேசுகிறார். உங்களின் பரம்பரை சொத்து ஆபாசநதியை விட்டும் பேச விடுங்கள். நீங்கள் தரம் தாழ்த்திப் பேசப் பேச மக்கள் நம் தரத்தை உயர்த்திக் கொண்டே இருப்பார்கள்” என்றார்.
திமுகவுக்கும் மற்றும் பலரும் ஒன்றுதான். இருவருக்குமே ஒரே ஓனர்தான். நீங்கள் என்ன சதிவேலை செய்தாலும் மக்கள் எங்களோடு இருக்கும் வரை ஒன்றும் செய்யாது.

எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்தார்? ஜெயலலிதா மேடம் யாரை எதிர்த்தார்? தீய சக்தி திமுகவை. அந்த தீயசக்தி திமுகவுடன் கூட்டணி சேர நினைத்தால் எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கு வலிக்காதா? அதனால்தான் சத்யபாமா பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தார். உடனே அந்தப் பேரம் இந்தப் பேரம் என்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சர்காரியா கமிஷனை பற்றி பேசினேன். ஜெயலலிதா மேடம் அதைப் பற்றி பேசுவாரே அதேமாதிரி நாமும் பேசுவோம் எனப் பேசினேன். திமுக கோபப்பட்டார்கள், கூட சேர்ந்து மற்றும் பலருக்கும் கோபப்படுகிறார்கள். திமுகவை எதிர்த்த எம்.ஜி.ஆரோடும் ஜெயலலிதா மேடமோடும் சாதி பார்க்காமல் நின்ற மக்கள் இந்த கொங்கு மக்கள். தீயசக்தி திமுகவுக்கும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மேடமுக்கு துரோகம் செய்த மற்றும் பலருக்கும் ஓட்டு போடமாட்டேன் என உறுதி கொடுங்கள்.” என்றார்.

























Once I trust a site this much I tend to read everything they publish and that is the trajectory I…