தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் ஒரு தொடர் ‘மெட்டி ஒலி’. அந்த அளவுக்கு அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொடரை இயக்கியதோடு அதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திருமுருகன். சின்னத்திரையில் தனது முத்திரையை ஆழமாக பதித்த திருமுருகன் வெள்ளித்திரையில் ‘எம் மகன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.

பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்த ‘எம் மகன்’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மிகவும் கண்டிப்பான அப்பாவாக நாசரும் அப்பாவுக்கு பயந்து நடுங்கும் மகனாக இருந்தாலும் அவர் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் அன்பும் கொண்ட மகனாக நடிகர் பரத் நடித்திருந்தார்.

தந்தை – மகன் இடையே இருக்கும் உறவை அன்றாடம் அனைத்து குடும்பங்களில் காணப்படும் சூழலை மிகவும் யதார்த்தமான வெளிப்படுத்தியது ‘எம் மகன்’ திரைப்படம். இப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் மிக சிறப்பாக அந்த கேரக்டர்களாக வாழ்ந்து இருந்தனர். அதுவே படத்தின் வெற்றி உறுதி செய்தது.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நாசர் ‘எம் மகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

"எத்தனையோ படங்களில் நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என சொல்லி பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுவார்கள். ஆனால் ‘எம் மகன்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு நூறு பேர் போன் பண்ணி இருந்தாங்க என்றால் அதில் தொண்ணூறு பேர் என்னோட நடிப்பை பற்றியே பேசவில்லை. அதில் ஒன்று இரண்டு பேர் அழுது கூட பேசி இருந்தார்கள். என்னோட அப்பாவை ஞாபகப்படுத்திட்டீங்க சார், எங்க அப்பாவ ஞாபகப்படுத்திட்டீங்க சார், எங்க அப்பாவ அப்படியே பாக்குற மாதிரி இருந்துது சார், உங்கள நான் என்னோட அப்பாவா பாக்குறேன் சார் அப்படின்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தாங்க.

நடிப்பு இல்லாம இது வேற மாதிரியான ஒரு பாராட்டு. இதில் பெரும்பாலான பாராட்டுக்கள் அனைத்தும் திருமுருகனை தான் சேர வேண்டும். நான் நன்றாக நடித்திருந்தேன் அதனால் தான் இந்த பாராட்டு கிடைத்தது என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். திருமுருகன் அந்த அளவுக்கு ஆழமாக அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதால் தான் அது அப்படியே பார்வையாளர்களின் மனதில் போய் பதிக்கிறது. அதுக்கு நான் கிரெடிட் எதுக்கு கொள்ள மாட்டேன். பல எமோஷனல் கேரக்டரில் நான் நடித்து இருந்தாலும் அன்னியோன்யமான ஒரு குடும்பத்தில் என்னை ஒருத்தனாக்கிய ஒரு படமாக தான் நான் இப்படத்தை பார்க்கிறேன்" என உணர்ச்சி ததும்ப பேசி இருந்தார் நடிகர் நாசர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Интересно, эффективны ли курсы по управлению медицинскими учреждениями? Планирую изучить принципы бережливой поликлиники. Может, посоветуете хорошие программы? переподготовка по организации…
Медикаментозное кодирование препаратом назначается после обследования. В зависимости от выбранной схемы препарат может вводиться путем внутримышечной или внутривенной инъекции, использоваться…
Useful reading material, the kind I can hand off to someone newer to the topic without worrying about confusing them,…
Worth recognising that this site does not chase the daily news cycle, and a stop at alpineharborvendorstudio confirmed the longer…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘பெண்களை மதிக்கும் பாஜக’: டெல்லி அடக்குமுறையின் போது துன்புறுத்தப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள அகிலேஷ் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஆளுமை உரிமைகள்: தீர்வு தோல்வியடைந்தால் ஆஜராகுமாறு அமிதாப் பச்சனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எஸ்ஐஆர் பரபரப்பு: டெல்லியில் ‘காஷ்மீர் மாதிரி’, எமர்ஜென்சி போன்ற சூழல், எதிர்க்கட்சிகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பார்லிமென்ட், தெருக்கள் அல்ல, நாட்டை ஆளும்: பா.ஜ.,; அரசாங்கம் திக்குமுக்காடுகிறது, என்கிறார் oppn | இந்தியா செய்திகள் | ACTPnews.com

கட்டுப்படுத்தப்பட்டது, தடுத்து வைக்கப்பட்டது, அடங்கியுள்ளது: கிளாம்டவுன் படலங்கள் கிளறுகின்றன, ஆயிரக்கணக்கானோர் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர், வழியில் கைது செய்யப்பட்டனர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Коллеги, кто уже проходил обучение по менеджменту в здравоохранении? Хотелось бы обсудить по управлению процессами в мед. управление процессами в…