விழுப்புரம் : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள மிகப்பெரிய கட்சியான (தேமுதிக) ஒருத்தர் சாவினை சொல்லி ஓட்டு வாங்கி விடலாம் என நினைப்பதாகவும் , ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயல்வதாக, விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, கொளதமசிகாமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சர்வாதிகாரி மோடி:

திமுகவை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கடந்த மூன்றாண்டுகளில் செய்த சாதனை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டுமென வலியுறுத்தினார். பத்தாண்டுகளில் பாஜக எதையும் செய்யாத நிலையில் மூன்றாண்டுகளில் சொன்னதை செய்த முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயல்வதாகவும், சர்வாதிகாரியாக ஆக வேண்டுமென்று மோடி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழன் தமிழன் என்று தமிழகம் வந்தால் பேசும் பிரதமர் மோடி குடியுரிமை சட்டம் கொண்டு வந்து இலங்கையிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாத செயலை தான் அவர் செய்வதாகவும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே மார்ச் 19 ஆம் தேதியே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் அவர் பதவி பிரமாணம் செய்யவில்லை ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கபடாத ஒரு நபராக ஆளுநர் உள்ளதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதி பதவிபிரமாணம் செய்யவில்லை என்றால் ஆளுநர் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதை தொடர்ந்து தான் பதவி பிரமாணம் செய்ததாக தெரிவித்தார்.

ஆளுநருக்கு என் மேல பாசம் அதிகம்:

ஆளுநருக்கு என்மேல் பாசம் ரொம்ப அதிகம், நான் சமத்துவம், பகுத்தறிவு கொள்கை அதிகம் பேசுகிறவன், மற்ற அமைச்சர்களை காட்டிலும் நான் எல்லாவற்றிலும் தொடர்பு உடையவன், அதனால் அவருக்கு என்மேல பாசம், பற்று அதிகம் என கூறினார்.

மேலும், அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள் தான் பாஜக அரசு என்றும் அமலாக்க துறை அனுப்பி தான் பாஜகவிற்கு 2500 கோடி நிதி பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதை தான் அதிமுக காப்பி அடித்து வந்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளதாகவும், கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போது கூட நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள மிகப்பெரிய கட்சியான தே.மு.தி.க. சாவினை சொல்லி ஓட்டு வாங்கி விடலாம் என நினைப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.