Marcus Stoinis has been dropped from Australia’s central contract list for 2024–25 | Marcus Stoinis: ஆஸ்திரேலிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டோனிஸ்


கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ் ஸ்டோனிஸ் பெயரை நீக்கியுள்ளது.
இந்தியாவில் பிசிசிஐ போன்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இது 2024-2025 க்கு மத்திய ஒப்பந்த பட்டியல் ஆகும். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் பெயர் இடம்பெறவில்லை. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
ஸ்டோனிஸ் இடம்பெறவில்லை: 
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ் ஸ்டோனிஸ் பெயரை நீக்கியுள்ளது. தற்போது மார்கஸ் ஸ்டோனிஸ் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்கஸ் ஸ்டோனிஸ் நீக்கப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் மொத்தம் 23 வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

#ICYMI, Marcus Stoinis has been dropped from Australia’s central contract list for 2024–25. pic.twitter.com/focvbhtriG
— CricTracker (@Cricketracker) March 28, 2024

ஆஸ்திரேலிய அணிக்காக கடைசியாக எப்போது விளையாடினார்? 
மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலிய அணிக்காக பல போட்டிகளில் களமிறங்கி வெற்றிபாதைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக மார்கஸ் ஸ்டோனிஸ் தனது கடைசி ஒருநாள் போட்டியை கடந்த 2023 நவம்பர் மாதம் விளையாடினார். அதேபோல், கடைசி டி20 போட்டியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விளையாடினார்.
இருப்பினும், மத்திய ஒப்பந்தத்தில் ஸ்டோனிஸுக்கு ஆஸ்திரேலியா இடம் கொடுக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா மத்திய ஒப்பந்தத்தில் நாதன் எல்லிஸ், மாட் ஷார்ட் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோரது பெயர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. 
9.20 கோடிக்கு ஸ்டோனிஸை வாங்கிய லக்னோ: 
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு முதல் ஸ்டோனிஸ் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ல் ஸ்டோனியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9.20 கோடிக்கு வாங்கியது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு இவரை மீண்டும் தக்கவைத்தது லக்னோ அணி. ஐபிஎல் தொடரில் ஸ்டோனிஸ் இதுவரை 83 போட்டிகளில் விளையாடி 1481 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது பந்துவீச்சு மூலம் 39 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஸ்டோனிஸ் ஒரு போட்டியில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது. 
ஸ்டோனிஸின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எப்படி..? 
ஸ்டோனிஸின் சர்வதேச வாழ்க்கையை பொறுத்தவரை, இதுவரை 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1487 ரன்கள் எடுத்துள்ளார். இதனுடன் 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்லார். மேலும், ஸ்டோனிஸ் 59 டி20 போட்டிகளில் 940 ரன்களுடன் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய மத்திய ஒப்பந்த வீரர்கள் 2024-25:
சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சனே, மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், டோட் மர்பி, ஜே ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா

மேலும் காண

Source link