Lok Sabha Election 2024 VCk candidate Ravikumar says Parliamentary election is the country’s second freedom struggle – TNN | Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்


விழுப்புரம்: இந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என விசிக வேட்பாளர் ரவிகுமார் பேசியுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் து.ரவிக்குமார் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு குப்பம், அனுமந்தை, ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”இது நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று நாட்டை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்.
ஏனெனில் இந்தியாவின் பன்முகத்தன்மையை உறுதி செய்கிற அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க பாஜக முற்படுகிறது. இனி பாஜக ஆட்சி அமைத்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஆபத்தாகும். நாட்டில் அதிபர் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே ஜனநாயகத்தை மீட்டு நமது உரிமைகளை காக்க பாசிச பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.
மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் போன்ற நலத்திட்டங்கள் இன்னும் அதிகமாக நமக்கு கிடைப்பதற்கு இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள். திமுக தலைமையிலான அரசு 1000 ரூபாய் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பொறுப்பு ஏற்றதும் நிறைவேற்றியது. அதேபோல காங்கிரஸும் மகளிருக்கு வருடம் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளது. உங்களுக்கு எல்லாம் வருடம் 1,00,000 ரூபாய் கிடைத்திட காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் இன்னும் பல நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெற்றி பெற செய்யுங்கள். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் விசிக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் எனக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள்” என வாக்கு சேகரித்தார்.
 

மேலும் காண

Source link