விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜ் முன்னாள் அமைச்சர் சிவி.சன்முகத்துடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாக்யராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்று காலை விழுப்புரம் நகரத்துக்குட்பட்ட வீரவாழியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனியிடம் வேட்புமனுவை வழங்கினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, தேமுதிக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இந்த தேர்தலை சந்திக்கிறோம். அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக ஒரு கட்சியை அல்ல என்ற பொன்முடி விமர்சனத்திற்கு பதில் அளித்த சி.வி.சண்முகம். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்குள் பொன்முடி வெளியே இருப்பாரா, சிறையில் இருப்பாரா என்பது தெரிய வரும் என தெரிவித்தார்.
மேலும் காண