இதுபோன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைப் பலர் பார்ப்பதில்லை. இதை எடுப்பது கடினமாக இருந்தது. அதை ரிலீஸ் செய்வது இன்னும் கடினமாக இருந்தது.
அத்தனை சவால்களையும் தாண்டி வந்த பிறகு, இது இப்படி முடிவடைவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. உலக சினிமா வரலாற்றில் முதலில் வெளியானபோது ஏற்றுக்கொள்ளப்படாமல், பின்னாளில் கொண்டாடப்பட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் மட்டுமே இப்போது எனக்குச் சற்று ஆறுதல் அளிக்கிறது.
நேற்று, ஒரு இயக்குநர் என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். அது என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. அவர், “ஒரு படத்தின் வெற்றி, அதற்குள் இருப்பதைவிட, வெளியேதான் அதிகமாக இருக்கிறது” என்றார்.
அதாவது, ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பெரும்பாலும் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை விட, அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.






















