“என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.!” – விராட் கோலி ஆதரவு குறித்து ரஜத் படிதார்! | Rajat Patidar shares about Virat kohli support during captaincy


தன்னை கேப்டனாக நியமித்த முடிவுக்கு கோலி ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்ததை பின்னர் தான் தெரிந்துகொண்டதாகவும் படிதார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “ஆர்சிபி போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியின் கேப்டன் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது எளிதான முடிவாக இருக்காது. என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அணியில் ஒரு வீரராக அவரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்திருக்கிறது” என்று படிதார் தெரிவித்துள்ளார்.

“நான் முன்மாதிரியாக நினைக்கும் ஒருவர் எனக்கு ஆதரவாக இருக்கும்போது, அதைவிட வேறு என்ன வேண்டும்? வேறு யாருடைய ஆதரவும் எனக்குத் தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Virat Kohli - Rajat Patidar

Virat Kohli – Rajat Patidar

கோலியின் நம்பிக்கைக்கு படிதார் கொடுத்த பதிலும் சாதாரணமானதல்ல. 2025-ல் ஆர்சிபி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. அடுத்த ஆண்டும் அதே வேகத்தைத் தொடர்ந்த ஆர்சிபி, 2026-லும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இப்போது இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோப்பைகள் என்ற சாதனையுடன் நிற்கும் ஆர்சிபி, 2027-ல் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முதல் அணியாக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

ஒரு காலத்தில் “கோப்பை எப்போது? என்ற கேள்வியை எதிர்கொண்ட ஆர்சிபி, இன்று “ஹாட்ரிக் கோப்பை அடிக்குமா?” என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதுதான் அந்த அணியின் மிகப்பெரிய மாற்றம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Для длинных линий: калькулятор потерь напряжения в кабеле считает падение по длине линии, сечению и нагрузке. Нужен для проводки на…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed