புதுச்சேரி: புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது என தமிழிசை உருக்கமாக பேசினார்.
மூன்று ஆண்டு முழுமையான சேவை
புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தார்கள். அன்பு எப்போதும் தொடரும், சில நேரங்களில் கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது. தமிழில் பதவி பிரமானம் எடுத்தது புதுச்சேரியில் தான் மூன்று ஆண்டுகள் முழுமையாக இந்த புதுச்சேரிக்கு சேவை செய்துள்ளேன். மிக மிக மகிழ்வான தருணம்,
புதுச்சேரியை விட்டு செல்வது சிரமமாக உள்ளது
மாணவர்கள் மீது அதிக அக்கரை எடுத்தேன். அதனால் புத்தகம் இல்லாத நாள், வாட்டர் பெல், ஊட்டச்சத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது மகிழ்வேன். ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது. மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு சென்றுள்ளேன். எனக்கு மக்கள் சேவை அதிகளவு நேரிடையாக சந்திக்கவேண்டும். தமிழ் மகள் நான், என்னை அன்னிய மாநிலத்தவள் என்று பார்க்காதீர்கள்.
பாஜக அலுவலகம் செல்லும் தமிழிசை
நாளை பாஜக அலுவலகம் செல்கின்றேன் அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதன்படி செய்வேன். என் பலம் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை, எதிர்வினைகளை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது என தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் பேட்டியளித்தார்.
மேலும் காண