சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கடந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதனை மீறி சில இடங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. சமீபத்தில் நடந்துள்ளது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனை விரைவில் கிடைக்கும் என்றார். புதுவை சிறுமி மரணம் குறித்த கேள்விக்கு, சிறுமிக்கு நடந்தது மிக மிக தவறு. ஒரு குழந்தையை இது போன்று செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். கண்டிப்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு “குட் டச், பேட் டச்” என்று சொல்வதைப் போல “டோன்ட் டச்” என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பல பெற்றோர்கள் இதனை சொல்லிக் கொடுத்து விளக்கின்றனர். அதை மீறியும் சில தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஈவு இரக்கமற்ற சில மனிதர்கள் இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது குறித்த கேள்விக்கு, கட்சி, அரசியல் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நடிகர் விஜய் உச்சத்தில் உள்ள ஒரு நடிகர். நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட், அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.
நடிகர் அஜித் உடல்நலம் குறித்த கேள்விக்கு, நடிகர் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். தலைக்கு நிகர் தல மட்டும்தான். அவருக்கு எதுவும் ஆகாது, வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். விடாமுயற்சி மூலமாக தல மீண்டும் வருவார் என்றார்.
மேலும் காண