பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் தேசிய தலைவர் டி.எம்.ஓங்கர் கரூரில் பேட்டியளித்தார்.
கரூர் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்குபாளையம் பகுதியில் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் எம்.ஏ.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனத் தலைவர் டி.எம். ஓங்கர் கலந்துகொண்டு மாநில தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், தேச சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் தமிழகம் முழுவதும் கிளைகளை துவக்கி, பொது மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், பணியாற்றி வருகிறது. அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத் தருவதில், முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக, சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் முனைப்பு காட்டி வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, நிர்வாக தலைவர் சந்தீப் ராஜ்வாடி, தென்மாநில தலைவர் டாக்டர்.டி.நல்லதம்பி, கரூர் மாவட்டத்தலைவர் தனபால், ஸ்ரீரிதர், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் காண