கரூரில் தனியார் விடுதி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
கரூர் – கோவை சாலையில் உள்ள தனியார் விடுதி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டாதே, தலைக்கவசம் அணிவதன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறு வையாபுரி நகரில் உள்ள விடுதியில் இருந்து தொடங்கிய பேரணி 80 அடி சாலை என்னப்பா கார்னர் பேருந்து நிலையம் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் விடுதியை வந்தடைந்தது விழிப்புணர்வு பேரணியை கரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல், குளித்தலையில் சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது
கரூர் மாவட்டம் குளித்தலையில் குளித்தலை உட்கோட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து வாகன விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.
காவல்துறையினர் அனைவரும் ஹெல்மெட் அணிந்தும், டூவீலர்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம் அடங்கிய பதாகை உடன் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியானது பெரிய பாலம், பஜனைமட தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து குளித்தலை சுங்க கேட்டில் நிறைவடைந்தது. இந்நிகழ்வின் போது காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மகாலட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் காவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.