Karur Head Post Office AIADMK protest | வருங்கால தலைமுறையை காப்பாற்றுவது அதிமுகவின் கடமை


தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் என கலந்து கொண்டுள்ளனர். ஆளும் திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”பொம்மை முதலமைச்சராகவும், கையாளாகாத முதலமைச்சராகவும் ஸ்டாலின் தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ளார். போதை பொருள் நடமாட்டம் தொடர்பாக  ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி வருகிறார். 
 

கஞ்சாவை விட 0.5 கிராம் எல்.எஸ்.சியை பயன்படுத்தினால் 24 மணி நேரமும் போதையில் இருக்கிறார்கள். இதனை பயன்படுத்தினால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதை நாக்கில் ஒட்டிக் கொண்டால் 24 மணி நேரமும் போதை இருக்கும் என பத்திரிக்கையில் வருகிறது. 360 கோடி ரூபாய் போதை பொருளை இலங்கைக்கு கடத்து கிறார்கள் திமுகவினர் என செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் இதை தான் தினமும் வெளியிட்டு வருகிறார்கள்.
 
திமுகவை சார்ந்த ஜாபர் சாதிக் உள்ளிட்ட சகோதர்கள் 2000 கோடி போதை பொருள் ஏற்றுமதி செய்தது தான் திமுகவின் 2 ஆண்டு சாதனை. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து உணவுப் பொருட்களுடன் போதைப் பொருளும் வருவதாக அமெரிக்கா எச்சரிக்கரிக்கிறது. ஆனால், திமுகவினர் இது தொட்பாக தெரியாது என்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இளைய சமுதாயம் பாதிக்கப்படும், சீரழிக்கப்படும். உதயநிதி ஸ்டாலினின் மனைவி எடுக்கும் படத்தை தயாரித்தவர் ஜாபர் சாதிக் தான். ஆனால், அவர்களுக்கு தொடர்பு இல்லை என்கிறார்கள். சைலேந்திரா பாபு இருந்த போது கஞ்சா ஆப்ரேசன் என்றார். முதல் நாள் ஆப்ரேசனில் 2007 பேர் கைது என்றார்.
 

ஆனால், பல ஆப்ரேசன் செய்தும் அவை ஒழிக்கப்படவில்லை. ஒரு விரல் புரட்சி என்பது போல் உங்கள் ஓட்டை வைத்து அவர்களுக்கு ஆப்ரேசன் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையில் எளிதாக போதைப் பொருட்கள் கிடைக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி ஒரு சொட்டு கூட மது இருக்காது என்றால் ஸ்டாலின். தற்போது என்ன நிலை. இளம் விதவைகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம் என்றார் கனிமொழி. மது ஆலைகள் முழுவதும் மூடப்படும் என்றார்கள். ஆலைகளை நடத்துவதே அவர்கள் தான். ஓட்டு கேட்கும் போது ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு பேசுவது தான் இவர்கள் சாதனை. மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக பார் திறந்தது தான் இவர்கள் சாதனை. 
 
விளையாட்டு மைதானம், திருமண மண்டபம், மால்களில் மது விற்கும் அனுமதியை கொடுத்தது நம்ம ஊரில் அமைச்சராக இருந்தவர் தான். சட்டம் ஒழுங்கு சந்து சிரிக்கிறது. எல்லாத்தையும் மூடி மறைக்கிறார்கள். போதைப் பொருள் விற்பனை செய்யும் கட்சியா திமுக உள்ளது. Drugs mafia kazhagam என்று சோலியல் மீடியாவில் பரவி வருகிறது. நம்ம ஊர் மந்திரிக்கு பிறகு முத்துச்சாமி வந்திருக்கிறார். நல்ல மனுசன் தான். காலை 7 மணிக்கு குவாட்டர் குடிப்பவர்களை குடிகாரன் என்று அழைக்க கூடாது என்கிறார். 
 

 
மின்கட்டணம் 54% ஏற்றி இருக்கிறார்கள். ஆண்டுக்கு 6% ஆட்டோமெட்டிக்கா ஏறிவிடும். 2 கோடிக்கும் மேல் உள்ள பெண்களில் 1 கோடி 6 லட்சம் கோடி பெண்களுக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார்கள். வேலை வாய்ப்பு இல்லை, தொழில்கள் எல்லாம் நசிந்து விட்டது. அதனால் தான் போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்கிறார்கள் திமுகவினர். பாராளுமன்ற தேர்தல் அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதன் மூலம் தான் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும்” என்றார்.

மேலும் காண

Source link