karthigai deepam serial today 8th march zee tamil written update | Karthigai Deepam: மாமனாரின் ஆசையை நிறைவேற்ற கார்த்திக் எடுத்த முடிவு


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோகிலாவின் ஏற்பாட்டின் படி இருவர் வந்த தர்மலிங்கத்தை அவமானப்படுத்திய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது இதை எல்லாம் நினைத்துப் பார்த்த தர்மலிங்கம் மிகுந்த மனவேதனையில் இருக்க, மைதிலி அவருக்கு ஆறுதல் சொல்ல தீபாவின் அம்மா ஜோதி பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார். 
இன்னொரு பக்கம் ரக்சன் தீபாவுக்கு போன் செய்து பாடக் கூப்பிட்டு இருந்த நிலையில், இங்கே தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்க்க, தீபாவின் அம்மா கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார். 
கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி ஹாஸ்பிடல் வந்து பார்க்க, தர்மலிங்கம் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். படுக்கையில் கிடைக்கும் தர்மலிங்கம் கார்த்தியைக் கூப்பிட்டு “என் பொண்ணு எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்ள” என்று கெஞ்ச இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வேண்டாம் என்று கார்த்திக் தர்மலிங்கம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வீட்டுக்கு கிளம்பி வருகிறான். 
தனது வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தைச் சொல்லி தீபாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் “அண்ணி உங்ககிட்ட ரெடக்வெஸ்ட்டா கேட்டுக்குறேன் இந்த முறையாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்று சொல்கிறான்.  இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண

Source link