தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்யாண வீட்டில் அபிராமி அவமானப்பட்ட விஷயத்தையும் புடவை மாறிய விஷயத்தையும் கார்த்தியின் பெரியம்மா போன் செய்து கூறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது இந்த விஷயம் அறிந்து கார்த்திக் ஆபிசில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது வழியில் ஆனந்த் காரைப் பார்க்க, அதில் அவன் அந்தப் பெண்ணுடன் சென்று கொண்டிருக்கிறான். அந்தப் பெண் டிரஸ் எடுக்க வேண்டும் என்று அவனை ஒரு கடைக்கு அழைத்துச் செல்கிறாள்.

இதே கடைக்கு மீனாட்சியும் தனது கல்யாண நாளுக்காக துணி எடுக்க வந்திருக்கிறாள். அந்தப் பெண் ட்ரெஸ் எடுக்க ஆனந்தையும் கூப்பிட, முதலில் தயங்கும் அவன், பிறகு கடைக்குள் வருகிறான். இங்கே மீனாட்சி அவனுக்காக ஒரு ஷர்ட் எடுத்து, அதை போட்டோ எடுத்து அனுப்பி ஓகேவா என்று கேட்கிறாள். ஆனந்த் அதைப் பார்த்து ஓகே என்று சொல்ல, இதே ட்ரெஸ்ஸை ஆனந்தத்துடன் வந்த பெண் எடுத்து விட, அவளுக்கும் மீனாட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஆனந்த் மீனாட்சி இங்கு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதனால் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்ய, பின் தொடர்ந்து வந்த கார்த்திக் இந்தக் கடைக்குள் நுழைய, ஆனந்த் மேலும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன, ஆனந்த் கார்த்திக், மீனாட்சியிடம் சிக்கிக் கொள்வானா என பல கேள்விகளுடன் பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: GOAT Movie Leaked: இணையத்தில் லீக் ஆன “கோட்” படக்காட்சி: விஜய் – பிரசாந்த் இடையே மோதல்: அதிர்ச்சியில் படக்குழு!

Famous Oscar Speech: இதற்கு மேலும் தாமதிக்காதீங்க: லியோனர்டோ டிகாப்ரியோவின் புகழ்பெற்ற ஆஸ்கர் உரை!