திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.குனால் கோஷ் காரை சுற்றிவளைத்து முட்டை, கற்கள் வீசி தாக்குதல் | Trinamool Congress MLA Kunal Ghosh's car surrounded and attacked with eggs and stones.

 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு அக்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

முட்டை மற்றும் கற்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த அதிகமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அணி மாறிவிட்ட நிலையில் இத்தாக்குதல்கள் மம்தா பானர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இத்தாக்குதல்களை பா.ஜ.கவினர் பொதுமக்களைத் தூண்டிவிட்டு செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அது போன்ற ஒரு தாக்குதல் மீண்டும் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த மற்றொரு முட்டை தாக்குதலில், ஹூக்ளியில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ குணால் கோஷின் கார் மீது கற்கள் மற்றும் முட்டைகள் ஒரு கும்பலால் வீசப்பட்டன.

எம்.எல்.ஏ குணால் கோஷின் கார்
எம்.எல்.ஏ குணால் கோஷின் கார்

குனால் கோஷ் மம்தா பானர்ஜியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றபோது இச்சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக வெளியான காணொலியில், ஆத்திரமடைந்த கும்பல் எம்எல்ஏவின் காரை நிறுத்தி முட்டைகளை வீசுவதைக் காணலாம். அந்தக் காணொலியில் குணால் கோஷ் காரில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

அப்போது கும்பல் காரில் மோதி, முட்டை மற்றும் கற்களை வீசி, “குனால் கோஷ் திரும்பிச் செல்லுங்கள்” என்று கோஷம் எழுப்பியது. எம்.எல்.ஏ.வின் காரின் பின்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. கார் சேதம் அடைந்ததைத் தொடர்ந்து குனால் கோஷ் கொல்கத்தா நோக்கி திரும்பச் சென்றார்.

இது குறித்து குனால் கோஷ் கூறுகையில், “‘இது காட்டாட்சி. அவர்கள் எனது காரை கற்கள் மற்றும் முட்டைகளால் தாக்கி சாலையை மறித்தனர். அங்கு போலீசார் யாரும் இல்லை. நான் இப்போது கொல்கத்தா திரும்புகிறேன். இது பா.ஜ.கவின் செயல்” என்றார்.

இந்தத் தாக்குதல் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், பாஜக மீது குற்றம் சாட்டியதுடன், ஆளும் கட்சி தனது பேரணிக்கு வருவதைத் தடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் ஸ்ரீராம்பூரில் நடக்கும் கூட்டத்திற்கு எங்கள் கட்சியினரை வரவிடாமல் போலீஸாரும் தடுக்கின்றனர். இது போன்ற விஷயங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நடக்காது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இது பொதுமக்களின் செயல் எனப் பா.ஜ.க தெரிவித்துள்ளது.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed