IND vs ENG: இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் இல்லை! சதத்திற்காக காத்திருக்கும் தர்மசாலா..!

இந்தியா – இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. இந்திய அணிக்காக பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இரு அணிகளும் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலா ஸ்டேடியத்தில் வருகின்ற மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது. இதுவரை, தர்மசாலா ஸ்டேடியத்தில்  ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆனால் இதுவரை தர்மசாலா ஸ்டேடியத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் சதம் அடித்ததில்லை.  இந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த வீரர்கள்தான் அதிக ரன்கள்:

தர்மசாலா ஸ்டேடியத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் கே.எல்.ராகுல் 111 ரன்களுடன் முதலிடத்திலும், அஜிங்க்யா ரஹானே 84 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 63 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தர்மசாலா ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மட்டுமே.

அதிக விக்கெட்டில் உமேஷ் யாதவ்:

தரம்சாலா ஸ்டேடியத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் உமேஷ் யாதவ். டெஸ்ட் போட்டியில் விளையாடி உமேஷ் யாதவ் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் முழு உடற்தகுதியுடன் இல்லாததால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா ஓய்வுக்கு பிறகு மீண்டும் திரும்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஜத் படிதார் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படலாம். கடைசி டெஸ்ட் போட்டியின் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில் நம்பர் 2 மகுடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்திய அணி விரும்புகிறது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 64.58 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 60 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 59.09 சதவீத புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

IND vs ENG 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல் , ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

IND vs ENG டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஷோயிப் பஷீர், சாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டான் லாரன்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.

Source link