VCK Manifesto: மக்களவை தேர்தல் 2024: வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியீடு.. சிறப்பம்சம் என்ன?
மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் படிக்க
Latest Gold Silver Rate: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 53,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,670 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க
நான் பெற்று வந்த திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர் – அன்புமணி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். முனைவர் சௌமியாவை பார்த்து வாக்களியுங்கள். சின்னத்தை பார்த்து வாக்களித்தீர், சாதி, கட்சி பாரத்து வாக்களித்தீர்கள். ஆனால் வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள். கடந்த தேர்தலில் நீங்கள் செந்தில்குமாரை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் அவர் எந்த திட்டத்தையும் இந்த தொகுதிக்கு கொண்டு வரவில்லை. நான் கொண்டு வந்த திட்டங்களுக்கு, அவர் ஸ்டிக்கர் ஓட்டுகிறார்”. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.மேலும் படிக்க
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச்சாலையாக மாறும் – கி.வீரமணி
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து நடைபெற்ற பாஜகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உறையாற்றிய கீ. வீரமணி பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பது தீவிர சிகிச்சை பிரிவில் சென்றுவிட்டதாகவும், பாஜகவை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ற திரிசூலத்தின் மூலமாக பழிவாங்கி வருவதாக குற்றம் சாட்டினார்.மேலும் படிக்க
பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் மனைவி – புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி
புதுச்சேரியின் பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் மனைவி பதமாவதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மர்டர் மணிகண்டன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த கொலை சம்பவத்தால் கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஏனாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க
மேலும் காண