Idhayam Zee Tamil Serial 22nd January Written Episode Update | Idhayam Serial: தமிழுக்காக ஆதி செய்த விஷயம்.. பதறும் பாரதி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 
சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆபீஸ் வந்த பாரதியை தமிழ் சரியாகும் வரை லீவு எடுத்து அவளை கவனித்துக் கொள்ளுமாறு ஆதி வீட்டுக்கு அனுப்பி வைத்தான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது ஆதி பாரதியை கூப்பிட்டு எல்லோருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனசாக போடுமாறு கூறுகிறான். பிறகு கேசவை அழைத்து பாலத்தின் மீது வைத்திருக்கும் காதலையும் தமிழ் தன்னை அப்பா எனக் கூப்பிடும்போது உணர்ந்த உணர்வையும் பற்றி சொல்லி கண் கலங்குகிறான். “அவங்க ரெண்டு பேரும் என் கூட சேரனும் என்பது தான் இந்த ஜென்மத்தோட விதி” என சொல்கிறான். 
கேசவ் “அதான் தமிழ் உன்னை அப்பாவை ஏத்துக்கிட்டாளே.. உடனே பாரதி கிட்ட பேசி அவளோட முடிவு என்னன்னு கேளு” என்று சொல்ல, “அவளுக்காக நான் காத்திருப்பேன், இப்போ உடனே கேட்டா அவ கஷ்டப்படுவா” என்று சொல்கிறான். 
அடுத்து தமிழ் ஸ்கூல் கிளம்ப, ரத்தினம் “இன்னைக்கு வேணா நாளைக்கு போகலாம்” என்று சொல்ல, “இல்லை டிராயிங் போட்டி இருக்கு, நான் கண்டிப்பா போவேன்” என்று அடம்பிடித்து ஸ்கூல் வருகிறாள். இங்கே ஸ்கூலில் டிராயிங் போட்டி தொடங்க, தமிழ் பயப்பட, அங்கு வந்த ஆதி ஜன்னல் வழியாக தமிழை கூல் செய்து டிராயிங் நல்லபடியாக வரைய ஊக்கப்படுத்துகிறான். 
மறுபக்கம் ஆபீஸில் பாரதி தமிழ் ஸ்கூலில் ட்ராயிங் போட்டி நடப்பதால் பர்மிஷன் கேட்பதற்காக ஆதியைத் தேட, ஆதி இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் பதறுகிறாள். இங்கே தமிழ் தாத்தா, பாட்டி, அம்மா என எல்லோரும் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை வரைந்து இருக்கிறாள். அதில் ஆதியும் இருப்பது போல வரைந்து அதை ஆதியிடம் காட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Source link