Hollywood Actor will smith shares behind the scenes pictures from the karate kid movie on Jackie Chan’s birthday | Jackie Chan: ஜாக்கி சானுடன் செலவிட்ட அந்த நேரங்கள்!


தி கராத்தே கிட் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.
ஜாக்கி சான்
90 ஸ் கிட்ஸ்களின் சாகச நாயகன் ஜாக்கி சான் ஏப்ரல் 7 ஆம் தேதி தனது 70 வயதை எட்டினார். நடிகர் , இயக்குநர், பாடகர், ஸ்டண்ட் மாஸ்டர் என பல வித்தைகளை காட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு மனிதன் வாழும் காலத்திலேயே அவரை வைத்து கார்ட்டூன் வந்திருக்கிறது என்றால் அது ஜாக்கி சான் தான். தன் படங்களில் வரும் ஸ்டண்ட் காட்சிகளை தானே செய்வது, ஆக்‌ஷன் காட்சிகளில் நகைச்சுவையை சேர்ப்பது என ஜாக்கி சானின் சாகசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒவ்வொரு படத்திற்கும் தன் உயிரை பணயம் வைத்து அக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதால் அவருக்கு மருத்துவ காப்பீடு வழங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தனக்கு ஏற்படும் விபத்துகளுக்கு தனது சொந்த செலவில்தான் இதுவரை மருத்துவம் பார்த்து வருகிறார் ஜாக்கி சான். தற்போது ஜாக்கி சான் தனது 70 வயதில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நரைத்த வெள்ளை முடியுடன் காணப்பட்டதை கண்டு தங்கள் சிறு வயது நாயகனுக்கு வயதாவதை கண்டு ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். தான் நடித்து வரும் படத்திற்காக தான் இந்த கெட் அப்பில் இருப்பதாகவும் ரசிகர்கள் வருத்தமடைய வேண்டாம் என்றும் ஜாக்கி சான்  ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்னார். 
தி கராத்தே கிட் (The Karate Kid)
பெரும்பாலும் ஆக்‌ஷன் படங்களில் நடித்த ஜாக்கி சான் கொஞ்சம் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த படம் தி கராத்தே கிட். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித் நடித்திருந்தார். இப்படத்தில் ஜேடன் ஸ்மித் மற்றும் ஜாக்கி சான் இடையிலான குரு சிஷ்யன் உறவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் வெற்றி ஜேடன் ஸ்மித்தை ஒரு தேர்ந்த நடிகராகவும் அடையாளம் காட்டியது.

ஜாக்கி சானின் பிற்ந்தநாளை ஒட்டி நடிகர் வில் ஸ்மித் படப்பிடிப்பின் போது ஜாக்கி சானுடன் எடுத்த நெகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் போது ஜாக்கி சானுடன் செலவிட்ட நேரம் தன் குடும்பத்தினரிடம் என்றென்றைக்குமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக வில் ஸ்மித் கூறியுள்ளார். வில் ஸ்மித் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு தங்கள் இளமைப் பருவத்தின் பல நினைவுகளை கிளரிவிட்டுள்ளன.
 

மேலும் காண

Source link