Heated Clash in TN Assembly After TVK MLA's Comment Angers DMK MLAs | 'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' - அவையில் கடும் அமளி!


சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கையில் ஒரு வார்த்தையை பயன்படுத்த, திமுக எம்.எல்.ஏக்கள் அதற்காக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மதார் முஸ்தபா பேசுகையில் தவெகவையும் முதல்வர் விஜய்யையும் புகழ்ந்து பேசிவிட்டு, திமுகவை விமர்சிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

அந்த வார்த்தைக்கு ஆட்சேபனை தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் பர்வேஸ், தாஹிரா எம்.எல்.ஏ போன்றோரும் அதே விஷயத்தை குறிப்பிட்டு திமுகவை விமர்சிக்க, திமுக எம்.எல்.ஏக்கள் இன்னும் கடுப்பாகினர். அதனால் அவையின் முன்பக்கம் வந்து அமளியில் ஈடுபட்டனர்.

உடனே எழுந்த அமைச்சர் ராஜ்மோகன், ” வசந்தம் கார்த்திகேயனும் பூண்டி கலைவாணனும் அடிக்க பாய்கிறார்கள்’ எனக் குற்றஞ்சாட்டினார். திமுக சார்பில் எ.வ.வேலுவும் தமீமுன் அன்சாரியும் அவர்களை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். பூண்டி கலைவாணன் மட்டும் சபாநாயகரின் இருக்கைக்கே சென்று முறையிட்டுவிட்டு வந்தார்.

திமுக சார்பில் எழுந்து பேசிய கோவி செழியனும் தமீமுன் அன்சாரியும் ‘அவையில் பேசும் விஷயங்கள் வெளியில் அமைதியை குலைத்துவிடக் கூடாது’ என எடுத்துக் கூறி நிலைமையை சரிப்படுத்தினார்.

இதன்பின்னரும் மதார் கண்ணீர் விட்டு சில ஆவேசமான கருத்துகளை பகிர, சபாநாயகர் அதைப் பற்றி பேச வேண்டாம் என கறாராக கூறினார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed