மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பகத் ஃபாசில். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

பகத் ஃபாசில்

வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் பகத் ஃபாசில். விக்ரம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்து மாமன்னன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக வில்லனாக நடித்தார். தற்போது வடிவேலுவுடன் இரண்டாவது முறையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆவேஷம்

மலையாளத்தில் தற்போது ‘ஆவேஷம்’ படத்தில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். கடந்த ஆண்டு ரொமான்ச்சம் படத்தை இயக்கிய ஜீது மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கும்பலங்கி நைட்ஸ் , மாலிக் , மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அன்வர் ரஷீத் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

Annan randum kalpichannu👿💥💥
Ranga annan loading 🥵💥🥵👿#fafa ❤️ #fahadhfaasil pic.twitter.com/R31pYUQ4hW

— Abhijith palliyath (@Abhijithpalli18) March 26, 2024

கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம்

சமீபத்தில் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்ட ஃபகத் ஃபாசில் மாணவர்களுடன் இணைந்து குத்துப்பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.