நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. அதில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு கனிமொழியும், தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமைச்சர் கே.என். நேருவும் தலைமை தாங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குழு:
கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு – பொதுச் செயலாளர் திரு துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு! pic.twitter.com/mkNSnhmxcM
— DMK (@arivalayam) January 19, 2024
தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு: