DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?


<p>மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது.</p>
<p>இந்த நிலையில் வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் அவர் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார். அன்றைய தினம் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>

Source link