மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் சின்னங்களில் வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றன.
மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டத்திலே தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தும், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மேலும், பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். – காரணம் என்ன?
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், உதயசூரியன், இரட்டை இலை மற்றும் தாமரை ஆகிய 3 சின்னங்களில் நேரடியாக 9 தொகுதிகளில் மோதும் வேட்பாளர் யார் என்பது குறித்தும், 9 தொகுதிகள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தொகுதிகள்
திமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர்
பாஜக வேட்பாளர்
1
வடக்கு சென்னை
கலாநிதி வீரசாமி
மனோ
பால் தினகரன்
2
தென் சென்னை
தமிழச்சி தங்கபாண்டியன்
ஜெயவர்தன்
தமிழிசை சௌந்தரராஜன்
3
வேலூர்
கதிர் ஆன்ந்த்
பசுபதி
ஏ.சி.சண்முகம்
4
திருவண்ணாமலை
சி.என்.அண்ணாதுரை
கலியபெருமாள்
அஸ்வத்தமன்
5
நாமக்கல்
மாதேஸ்வரன்
தமிழ்மணி
கே.பி.ராமலிங்கம்
6
நீலகிரி
ஆ. ராசா
லோகேஷ்
எல்.முருகன்
7
பொள்ளாச்சி
ஈஸ்வரசாமி
கார்த்திகேயன்
வசந்தராஜன்
8
கோவை
கணபதி பி. ராஜ்குமார்
சிங்கை ராமச்சந்திரன்
அண்ணாமலை
9
பெரம்பலூர்
அருண் நேரு
சந்திரமோகன்
பாரி வேந்தர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 9 தொகுதிகளில் திமுக , அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகள் நேரடியாக களம் காணவுள்ளதால், மிகவும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆளும் கட்சியாக திமுக உள்ளதால், ஏற்கனவே செல்வாக்கு உடைய கட்சியாக உள்ளது. இதற்கு முன்னதாக ஆட்சியிலிருந்த அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல் முறை நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. பாஜக கட்சியானது, இந்த முறை வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாகவும் கூறுகிறது. ஆகையால், இந்த 9 தொகுதிகளில் எந்த சின்னம் பலத்தை காண்பிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.