2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
மக்களவை தேர்தல்:
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ( மார்ச் 24 ) திருச்சியில் அதிமுக -தேமுதிக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான , வேட்பாளர்கள் அறிமுக செய்யும் கூட்டம் நடைபெற்றது.
இந்த மேடையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 5 வேட்பாளர்களும், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர்.
Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். – காரணம் என்ன?
தேமுதிக வேட்பாளர்கள்:
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., நல்லதம்பி, கடலூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பு – 2024 பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் – 22.03.2024#dmdkofficial#dmdkparty pic.twitter.com/hWglSHexRg
— DMDK Party (@dmdkparty2005) March 22, 2024
”வெற்றி கூட்டணி”
கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த், 2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். 2 நாட்கள் வரை கூட்டணியில் இருப்பதாக சொன்னார்கள், ஆனால் வேண்டியது கிடைத்ததும் சென்றுவிட்டார்கள்.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக எதற்காக ஆட்சியில் இருக்கிறது. மேலும், தேர்தல் பத்திரங்களில் கட்சிகள் நிதி பெற்றதை வெளிக்கொண்டு வர உதவிய நீதிபதிகளுக்கு சல்யூட் என்றார்.