Captain Miller OTT Release: கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் பல கோடிகளை கொட்டி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் கேப்டன் மில்லர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேறும்படி பீரியட் ஜானரில் ஆக்‌ஷனில் மிரட்டலாக வெளிவந்து இருக்கும் கேப்டன் மில்லர் படம் தனுஷூக்கு கம்பேக் கொடுத்துள்ளது. 
படத்தில் 3 கெட்டப்களில் நடித்துள்ள தனுஷ் கேப்டன் மில்லராக நடித்து அசத்தி இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் படத்தின் எதார்த்தம் சறுக்கினாலும், பெரும்பாலானோரின் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருப்பதால் முதல் நாள் வசூலில் ரூ.30 கோடியை எடுத்து சக்சஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வசூலை அள்ள வாய்ப்புள்ளது. 
இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதால் கேப்டன் மில்லர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அந்நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன. எனினும், அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.50 கோடிக்கு கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய  ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல்,  சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார். மொத்த படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு கதைக்கு எத்தகைய உழைப்பு தேவைப்படும் என்பதை உணர முடிகிறது. படத்தின் பெரும்பலம் என்று பார்த்தால் சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையும் தான். குறிப்பாக இடைவேளை காட்சி அருமையாக படமாக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க: Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
KH237: கமல் நடிக்கும் KH237 படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள் : மாஸ் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்..
 

Source link


Latest News

View All

  1. Телесериал в интернете сверхъестественное сезон на русском с хорошей картинкой доступно на сайте. Все сезоны и серии можно смотреть онлайн.…

  2. Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru предлагает широкий выбор для охоты, путешествий и outdoor-активностей. В каталоге собраны охотничья экипировка, одежда, обувь,…

  3. Заказать быстро заказать букет с доставкой можно в онлайн-каталоге. Заказывайте авторские букеты к любому празднику. На сайте доступны букеты из…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed