காலமானர் டேனியல் பாலாஜி:
தனித்துவமான வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சாமானிய மக்களால் பாராட்டப்படும் மனிதராக டேனியல் பாலாஜி இருந்திருக்கிறார்.
சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த நடிகர். தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார் டேனியல் பாலாஜி.
பின்னர், வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார். இந்த நிலையில், இவரது மரணம் தமிழ் திரையுலாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை டேனியில் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலத்தி வருகின்றனர். இந்த நிலையில், பத்து தள இயக்குநர் கிருஷ்ணா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
“கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை”
இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “டேனியல் பாலாஜி உயிரிழந்தது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. நான் மின்னலே படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, அவர் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். இந்த படத்தில் இருந்தே டேனியில் பாலாஜியுடன் எனக்கு நெருக்கமான உறவு இருந்தது. அதற்கு பிறகு, ’காக்க காக்க’ படத்தில் வேலை பார்க்கும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவரோட சிந்தனை எல்லாமே சினிமா..சினிமா..தான் இருக்கும்.
சினிமாவை தவிற வேறு எதையும் அவர் யோசிக்கவில்லை. அவர் மனசுக்கு எது சரி என்று நினைக்கிறாரோ அதை தான் செய்வார். அது நிறைய பேருக்கு புரியாது. அதனால், அவரை தவறாக நினைப்பார்கள். ஆனால், தன் மனதிற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்த மனிதர் டேனியல் பாலாஜி.
என்னோட நெடுஞ்சாலை மற்றும் பத்து தள படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால், எதுவும் கைகூடவில்லை. டேனியில் பாலாஜியின் ஒரே ஒரு ஆசை இயக்குநர் ஆகுறது. ஆனால், அது கடைசிவரை நிறைவேறவில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு. டேனியல் பாலாஜியை புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால், புரிந்துகொண்டால், இவரை விட நல்ல மனிதர் யாரும் இல்லை” என்று மனமுடைந்து பேசினார் இயக்குநர் கிருஷ்ணா.
மேலும் படிக்க
The Boys Review: கொரோனா காலத்தின் தாக்கத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததா ”தி பாய்ஸ்” – படத்தின் விமர்சனம்!
மேலும் காண