CSK vs RCB: அச்சச்சோ…ஆம்புலன்ஸில் தூக்கி செல்லப்பட்ட சி.எஸ்.கே வீரர்! காயத்தால் விலகும் 3 பேர்!

ஐபிஎல் 2024:

ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை இரு அணியினரும் தொடங்கியுள்ளனர்.

ஆனால் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில சிரமங்களை சந்திக்க உள்ளது. அந்த வகையில் அந்த அணியில் மூன்று வீரர்கள் காயாம் அடைந்து இருக்கின்றனர். அதாவது டெவோன் கான்வே, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மதிஷா பத்திரனா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

டெவோன் கான்வே (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டெவோன் கான்வேயை ரூ.1 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. அவர் 2022 முதல் அணியில் இருக்கிறார். இவர் கடந்த  2023 இல் சிறப்பாக செயல்பட்டார். அந்தவகையில், 16 போட்டிகளில் 672 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சீசனில் அவர் 6 அரை சதங்கள் அடித்தார்.

அதேபோல் இவரது சிறந்த ஸ்கோராக 92 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்தது பார்க்கப்படுகிறது. இச்சூழலில் தான் கான்வேயின் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவர் காயமடைந்தார். இதானல் அவர் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)

வங்கதேசம் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பல சந்தர்ப்பங்களில் அற்புதமாக பந்து வீசியுள்ளார். இவரை 2 கோடிக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. இவர் இதற்கு முன்பு டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இதனிடையே வங்கதேஷ் பிரீமியர் லீக் 2024 இன் போது அவர் காயமடைந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முஸ்தாபிசூரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த சீசனில் இவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

மதிஷா பத்திரன (இலங்கை)

வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனாவை 2022 இல் CSK வாங்கியது. அதன் பிறகு அவர் 2023 இல் தக்கவைக்கப்பட்டார். பத்திரன கடந்த சீசனில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பத்திரன 2022 இல் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த காலகட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி 20 தொடரின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதானல் இந்த சீசனில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட மாட்டார்.

Source link