Crime: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! வாலிபர் மீது பாய்ந்த போக்சோ!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டில் புதுமனை புகுவிழாவிற்காக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதி மாமண்டூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்யாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வந்திருந்தார்.

கர்ப்பமான சிறுமி:

புதுமனை புகுவிழா முடிந்த பின் இரவு அங்கே தங்கியுள்ளனர். அப்போது தூங்கிக்கொண்டிருந்த மாணவியை மிரட்டி சின்ராசு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் மாணவி யாரிடமும் எதுவும் கூறாமல் வீட்டிற்கு திரும்பியுள்ளார். சில நாட்களுக்கு பின் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் சிறுமியை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கருவுற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போக்சோ வழக்கு:

பின்னர் சிறுமியை விசாரித்த போது நடந்ததை கூறியுள்ளார். விஷயத்தை தெரிந்துக்கொண்ட பெற்றோர்கள் உடனடியாக செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சின்ராசுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சின்ராசு மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link