CM Stalin: ”பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” – நெல்லை பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!


<p>திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், &rdquo;வீரத்தின் விளை நிலமான நெல்லை சீமைக்கு வந்துள்ளேன். தற்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர் திருநெல்வேலிக்கு தற்போது வருகை தந்திருந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் எங்கே போயிருந்தார்?</p>
<p>வெள்ள பாதிப்பு நிதி அளித்தீர்களா? 2 இயற்கை பேரிடர்கள் வந்தபோதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளோம். பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.</p>
<p>தமிழர்களை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும். &nbsp;மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். அரசு செலவும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். மக்களாட்சியில் மக்களை அவமதித்த பாஜகவின் தோல்வி உறுயாகி விட்டது. &nbsp;</p>
<p>ஆட்சி, பதவி இருப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமென்றாலும் ஆணவமாக பேசுவார்களா? &nbsp;ஒரு மத்திய அமைச்சர் தமிழகர்கள் பிச்சைக்காரர்கள் என்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார். தமிழர்கள் என்றால் பாஜகவிற்கு ஏன் இவ்வளவு வன்மம்? பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.&nbsp;</p>

Source link