cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்



Ilayaraja: பாலுமகேந்திராவே இளையராஜாவுக்கு கேமரா வழங்கியது ஏன்? ரங்கராஜ் பாண்டே சொன்ன ரகசியம்!

இளையராஜாவின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இயக்குநர் பாலு மகேந்திரா தனது கேமராவை அவருக்கு வழங்கியதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

AR Rahman – Prabhu deva: கலக்கப்போகும் முக்காபுலா கேங்! 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இணையும் 6வது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபு தேவா கூட்டணி 1994ஆம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். இதனைத் தொடர்ந்து, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு உள்ளிட்ட 5 படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.  

Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா? – ரசிகர்கள் ஆச்சர்யம்!

நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்துக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது.

Gautham Vasudev Menon: இந்தி படமே வேண்டாம்.. ஓடி வந்த கௌதம் மேனன்.. என்ன காரணம்?

இந்தியில் படம் பண்ணுவது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம் என நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.  எனக்கு காமெடி என்றால் ரொம்ப பிடிக்கும். எல்லா படமும் எடுத்து பார்த்தால் காட்சிகளில் ஒரு சிரிப்பு இருக்கும். நான் ஒரு படத்தை 65 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை எடுத்துக் கொள்வேன். என்னுடைய படங்களில் அதிக நாட்கள் எடுத்த படம் வாரணம் ஆயிரம் தான். அதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்ததால் தாமதமாகி விட்டது” என தெரிவித்துள்ளார். 

Vetrimaaran: பொல்லாதவன் முதல் அசுரன் வரை.. தன்னுடைய படங்கள் மீதே சுயவிமர்சனம் வைத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்ட ஒரு சில தருணங்களைப் பார்க்கலாம்.பொல்லாதவன் படம் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன்  கிட்டதட்ட நிராகரிக்கும் மனநிலையில் ஒருமுறை பேசியிருக்கிறார். இந்தப் படத்தில் தனக்கு விருப்பம் இல்லாமல் தான் ஒரு சில காட்சிகளையும் பாடல்களையும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தனது மைல்ஸ் டூ கோ தொடரில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
 
 

மேலும் காண

Source link