US Winter Storm: அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்.. கடும் குளிரால் 60 பேர் இதுவரை உயிரிழப்பா? என்ன நடக்கிறது?
<p> கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லூசியானா மாநிலங்கள் வரையிலான பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரான இந்த காலநிலையை எதிர்ப்பதே அமெரிக்க மக்களுக்கு பெரும் சவாலாக தற்போது மாறிவருகிறது.</p> <p>அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் கண்மூடித்தனமான பனிப்பொழிவு, பனிக்கட்டி மழை மற்றும் பலத்த காற்று தொடங்கியது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும்…
