இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ…
கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியது#tanker #blast #accident #italypic.twitter.com/TpJuMICXLq
— Anbil ChinnaThambi (@AnbilChinna) December 24, 2025
Category: உலகம்
all world news including all countries

இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்து… ஷாக்கிங் வீடியோ…
இத்தாலியில் டேங்கர் வெடித்து பயங்கர விபத்துக்குள்ளான ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.இத்தாலியின் கசர்டா மாகணத்தில் உள்ள டியானோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் வெடித்து சிதறியதால், அங்கு இருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.#tanker #blast #accident #italy
நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…
நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…call of duty வீடியோ கேம் கிரியேட்டரான வின்ஸ் ஜாம்பிள்ளா, கோரமான கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.55 வயதான Vince Zampella, தெற்கு கலிஃபோர்னியாவில், தனது ஃபெர்ராரி காரில் பயணித்துக்கொண்டிருந்தார். மலைப்பகுதியின் குகையில் இருந்து அதிவேகமாக அவரது சிவப்பு நிற ஃபெர்ராரி கார் வந்தது.அப்போது, சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கார் சுக்கு நூறாக சிதைந்தது. இதை அங்கு இருந்தவர்கள் வீடியோவில் படம் பிடித்துள்ளனர்.நொடியில் சிதைந்த கார்… பறிபோன call of duty வடிவமைப்பாளரின் உயிர்… பதைபதைக்க வைக்கும் காட்சி…pic.twitter.com/rfrANlNFq3
— Anbil ChinnaThambi (@AnbilChinna) December 23, 2025
இந்த விபத்தில், Vince Zampella உடன் பயணித்த ஒருவர் உயிருடன் வெளியேறிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுபோதை அல்லது போதைமருந்து பயன்படுத்தியிருந்ததால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் விபத்துக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
call of duty, vince zampella, ferrari, accident, car crash, california news,

மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்து – 6 பேர் பலி – பரபரப்பு காட்சிகள்
மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று, சான் பெட்ரோ டோட்டல்டேபெக் மாவட்டத்தில் உள்ள டொலுகா விமான நிலையத்திற்கு சென்றது.
விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகில் உள்ள கிடங்கில் விழுந்து வெடித்து தீ பிடித்து சிதறியது.
இந்த விமானத்தில், 10 பேர் வரை பயணித்ததாக தெரிய வந்துள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் உள்ளூர் போலீசாருடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. தரையிறங்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
https://x.com/fl360aero/status/2000689428751130841?s=20
https://x.com/BNODesk/status/2000667442452832576?s=20
விபத்துக்கான காரணங்கள் குறித்து உரிய விசாரணைக்குப்பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் மாதிரி சரிந்து விபத்து
பிரேசிலில் உள்ள அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் மாதிரி சரிந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் நியூ யார்க் சிட்டியில் சுதந்திர தேவி சிலை உலக மக்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அந்த சிலையை காண பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். அதிலும், சிலையின் உள்பகுதியிலேயே சென்று தலையில் இருந்து நியூயார்க் நகரின் அழகை ரசிக்க முடியும்
அப்படிப்பட்ட அமெரிக்க சுதந்திர தேவியின் சிலை போன்றே, மாதிரி ரிப்ளிகா சிலையை பிரேசிலில் உள்ள போர்டோ அலிக்ரே மெட்ரோபொலிடன் நகரில் உள்ள கொய்பா பகுதியில் நிறுவியிருந்தார்கள்.
ஆனால், அங்கு பலத்த சூறாவளி காற்று வீசியதால், இந்த ரிப்ளிகா சிலை திடீரென ஒருபக்கமாக சாய்ந்தது. அப்படியே நின்றுவிடும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சூறாவளி காற்று சுழன்றடித்தது.
பலத்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சுதந்திர தேவியின் மாதிரி சிலை சரிந்து கீழே விழுந்தது. இதை அங்கு இருந்த மக்கள் அதிர்ச்சியுடன் செல்போன்களில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
https://x.com/BNODesk/status/2000670408018723177?s=20

இந்தோனேசியாவில் வெள்ளத்திற்கு 174 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவில் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
பெருவெள்ளம் வடியாத நிலையில், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், சுமத்திரா தீவில் மட்டும் இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரே, பாதிப்பு குறித்து முழு விவரம் தெரிய வரும் தெரிகிறது.

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் சீனா – புதிய ராக்கெட்டை ஏவியது…
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் வகையில், சீனா புதிய ராக்கெட்டை ஏவியுள்ளது.
உலகிலேயே முதல் நாடாக சொந்தமாக விண்வெளி ஆய்வு மையம் வைத்துள்ள சீனா, அடுத்தடுத்து ராக்கெட்டுகளை ஏவி, விண்வெளியில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறது.
அதிலும், எந்தவகையான செயற்கைக்கோள்களை ஏவுகிறது என்று மற்ற நாடுகளுக்கு தெரியாத வகையில், ரகசியமாக செயல்படுவதால், சீனாவை யாரும் தொட முடியாத இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஒரு ராக்கெட்டை, சாங்ஷி மாகாணத்தில் உள்ள தையூவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது. அதிகாலை 12.34 மணிக்கு, 3 தொகுதிகளைக் கொண்ட யோகன் -40 என்ற செயற்கைக்கோள்களை, மார்ச்-6 சென்ற ராக்கெட் மூலமாக விண்ணுக்கு செலுத்தியது.
இந்த செயற்கைக்கோள்கள், ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியவை ஆகும்.
https://x.com/globaltimesnews/status/1964493442475839935
அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் அனைத்தும், வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் புதுவித தாக்குதலால் அதிர்ந்த தென் கொரியா… அச்சத்தில் அமெரிக்கா…
வடகொரியா நடத்திய ஜிபிஎஸ் தாக்குதலால் பல கப்பல்கள், விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையே குலைநடுங்க வைக்கும் நாடாக வடகொரியா இருந்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளை மீறியும், ஐநா சபையில் தடையை மீறியும் அணுஆயுத சோதனையும் நடத்தி வருகிறது.
இது, அண்டை நாடான, தென் கொரியாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், வடகொரியா சோதனை நடத்தும் ஏவுகணைகள் அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்தவையாகவே உள்ளன. அவை அமெரிக்காவை வைப்பதற்காகவே தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, தென்கொரியாவுக்கு அமெரிக்க பல்வேறு ராணுவ உதவிகளையும் பயிற்சிகளையும் செய்து வருகிறது.
கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய சக்தி வாய்ந்த திட எரிபொருளால் ஆன ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா வெற்றி கண்டது. அதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டிருந்தார்.
இது உலக நாடுகளையும் குறிப்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்காவை கதிகலங்க வைத்தது. இதையடுத்து, வடகொரியா மீது கண்காணிப்பை அமெரிக்கா தீவிரப்படுத்தியதோடு, தென்கொரியாவுடன் சேர்ந்து பயிற்சியையும் அதிகப்படுத்தியது.
இந்நிலையில், மஞ்சள் கடலில் பயணித்த கப்பல்கள், விமானங்களை குறிவைத்து, வடகொரியா ஜிபிஎஸ் தாக்குதல் நடத்தியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது, தென்கொரியாவை ஒட்டிய வடகொரிய மாகாணங்களான ஹேஜூ மற்றும் கேசாங் பகுதிகளில் இருந்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும் நடத்தப்பட்ட ஜிபிஎஸ் தாக்குதலில் பல கப்பல்கள், பயணிகள் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, மஞ்சள் கடலில் போர்க்கப்பல்களை தயார் நிலையில் வைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் என்று, அதற்கு ஏற்ப விமானப்படை, கப்பற்படையை தென்கொரியா மற்றும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜிபிஎஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அமெரிக்காவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேலியர்களை காப்பாற்ற விமானம் அனுப்பிய நெதன்யாகு…
நெதர்லாந்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க விமானங்களை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுப்பியுள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், கால்பந்து ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில், இஸ்ரேலிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டுவர, அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, 2 மீட்பு விமானங்களை ஆம்ஸ்டர்டாம் நோக்கி அனுப்பியுள்ளார்.
வன்முறையாளர்கள் மீது டட்சு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெதன்யாகு, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தங்களுடைய நாட்டினர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் அறிந்ததும், அவர்களுக்காக மீட்பு விமானங்களையும் அனுப்பி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எடுத்திருப்பது பாராட்டக்கூடியதாக உள்ளது.

வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா திடீர் வேண்டுகோள்
ரஷ்யாவில் உள்ள படைகளை வட கொரியா திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது வடகொரிய ராணுவ வீரர்களை போரில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, வடகொரிய படைகளுக்கு ரஷயா பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.
இதன்மூலம், உக்ரைனில் ரஷ்ய படையுடன் இணைந்து வடகொரிய படைகளும் போரில் ஈடுபடும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், 10,000 வீரர்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து, வடகொரியாவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைனில் போரில் ஈடுபடுத்தப்படும் தங்களது வீரர்களை வடகொரியா திரும்பப் பெற வேண்டும் என்று தென்கொரியா மற்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வடகொரிய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டால், அது மிகப்பெரிய பாதிப்பையே உக்ரைனில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. மேலும், இப்போது ரஷ்யாவுக்காக வடகொரிய வீரர்கள் போரில் ஈடுபட்டால், எதிர்காலத்தில் தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா போர் நடத்தினால், அப்போது ரஷ்யா உதவி செய்யும் என்றும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா அஞ்சுகிறது.
இதன் காரணமாகவே அமெரிக்காவும், தென்கொரியாவும், தென்கொரிய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், வடகொரியாவோ, யாருடைய பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாகவே செயல்படும் நாடு என்பதால், இவர்களது கோரிக்கையை ஏற்காமல், போரில் தங்களது வீர்களை ஈடுபடுத்தும் என்றே தெரிகிறது.

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7.1 ரிக்டராக பதிவு…
தென் அமெரிக்க நாடான சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிலி, பொலிவியா, அர்ஜெண்டியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் 115 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி காலை 7.20 மணிக்கு 7.1 ரிக்டர் என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உக்ரைனில் பெலுகா திமிங்கலங்களை பாதுகாக்க செய்த செயல்… நெகிழ்ச்சி வீடியோ…
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, உக்ரைனில் இருந்து பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயினுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. கட்டுமானங்களை எல்லாம் சிதைத்து வருவதால், பொதுமக்கள் கட்டடங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை அங்கு கர்கிவ் நகரில் உள்ள அக்குவாரியமில் வளர்க்கப்படும் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை பாதுகாக்க உக்ரைன் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, ஸ்பெயினில் உள்ள வலென்சியா நகருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறிய தொட்டியில் 15 வயதான ப்ளோம்பிர் என்ற ஆண் பெலுகா திமிங்கலத்தையும், 14 வயதான மிராண்டா என்ற பெலுகா திமிங்கலத்தையு்ம ஏற்றிக்கொண்டு, தண்ணீர் குறையாமல் இருக்க, பெரிய டேங்குகளில் தண்ணீர் ஏற்றிக் கொண்டு விமானத்தில் ஏற்றினர்.
https://x.com/AFP/status/1803849293654299085
ஆபத்தான இந்த ஆபரேஷன் விமானம் மூலம் பாதுகாப்பாக நடத்தப்பட்டது. விமானத்தில் இருந்து இறக்கியதும், டிரக் மூலமாக, வெலன்சியாவில் உள்ள மையத்திற்கு பெலுகா திமிங்கலங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து, கிரேன் உதவியுடன் வெளியே எடுத்து தண்ணீரில் விடப்பட்டன.
ஆபத்தில் விளிம்பில் இருக்கும் இந்த அறியவகை திமிங்கலங்களை பாதுகாக்க, போர் காலகட்டத்திலும் உக்ரைன் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து… 13 பேர் படுகாயம்… பரபரப்பு…
இலங்கையில் கால்வாய்க்குள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையின் வராகபோலாவில் 7 பெற்றோர், குழந்தைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்ட நிலையில், விபத்து எப்படி எற்பட்டது? எதனால் ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி ; கொழும்பு கெசட்

இந்தியாவுக்கு நோ.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட்.. எலான் மஸ்க் போடும் மெகா திட்டம் என்ன?

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் தனது இந்திய பயணத்தை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த எலான் மஸ்க்:

டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. ரத்து செய்யப்பட்ட இந்திய பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், இந்திய பயணத்தை ரத்து செய்த ஒரே வாரத்தில் எலான் மஸ்க் சீனா சென்றுள்ளார். டெஸ்லா நிறுவன மின்சார வாகனங்களின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக உள்ள சீனாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசின் மூத்த தலைவர்களை சந்திக்க எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். சந்திப்பின்போது, சீனாவில் முழு சுய ஓட்டுநர் (FSD) மென்பொருளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இது தொடர்பாக சீனாவில் சேகரிப்பட்ட தகவல்களை வெளிநாட்டுக்கு பரிமாற்றம் செய்யப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெகா திட்டம் என்ன?

சீன வாடிக்கையாளர்களுக்கு முழு சுய ஓட்டுநர் (FSD) மென்பொருளானது விரைவில் கிடைக்க செய்யப்படும் என எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். எலான் மஸ்கின் சீன பயணம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், சீனக் கட்டுப்பாட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து தரவுகளையும் ஷாங்காயில் உள்ள உற்பத்தி தொழிற்சாலை மூலம் டெஸ்லா சேகரித்தது. ஆனால், அந்த தரவுகள் எதனையும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவில்லை.

டெஸ்லா தனது தன்னியக்க மென்பொருளான முழு சுய ஓட்டுநர் மென்பொருளை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், சீன வாடிக்கையாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த மென்பொருளை சீனாவில் இன்னும் கிடைக்கச் செய்யவில்லை.

டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரையில், தனது மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்க, சந்தையில் அடுத்து விலையில் பல்வேறு சலுகைகள் வழங்கின. ஆனாலும், அந்நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் தான், டெஸ்லாவில் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க: "மூச்சு விட முடியல" மீண்டும் ஒரு ஜார்ஜ் ப்ளாய்ட் சம்பவம்.. அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை!

Elon Musk Goes To Beijing On Surprise Visit After Skipping India Trip in tamil
Elon Musk: சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, எலான் மஸ்க் சீனா சென்றுள்ளார்.
சீனாவில் எலான் மஸ்க்:
சீனாவில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லாவின் தானாக இயங்கும் ஓட்டுநர் தொழில்நுட்பத்தை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திடீர் பயணமாக சீனா சென்றுள்ள அந்த நிறுவன தலைவரும், சர்வதேச தொழிலதிபரும் ஆன எலான் மஸ்க், சீனப் பிரதமர் லீ கியாங்கைச் சந்தித்து டெஸ்லா நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
ஆதரவு கரம் நீட்டும் சீனா:
சீனாவின் மிகப்பெரிய சந்தை எப்போதும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கு திறந்திருக்கும் என்று லி மஸ்க் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், ”அனைத்து நாடுகளின் நிறுவனங்களும் மன அமைதியுடன் சீனாவில் முதலீடு செய்யும் வகையில், சிறந்த வணிகச் சூழல் மற்றும் வலுவான ஆதரவுடன் வெளிநாட்டு நிதியுதவி நிறுவனங்களுக்கு வழங்க, சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், சேவைகளை மேம்படுத்தவும் சீனா கடுமையாக உழைக்கும். சீனாவில் டெஸ்லாவின் வளர்ச்சியை சீனா-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பின் வெற்றிகரமான உதாரணம் என்று குறிப்பிடலாம், சமமான ஒத்துழைப்பும் பரஸ்பர நன்மையும் இரு நாடுகளின் சிறந்த நலன்களில் உள்ளன என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன” என சீன பிரதமர் பேசியுள்ளார்.
எலான் மஸ்க் பெருமிதம்:
டெஸ்லாவின் ஷாங்காய் ஜிகாஃபாக்டரி டெஸ்லாவின் சிறந்த செயல்திறன் கொண்ட தொழிற்சாலை என்று மஸ்க் கூறினார். மேலும் இருதரப்புக்ளும் வெற்றி என்ற முடிவுகளை அடைய சீனாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும் பேசியுள்ளார். 2020 இல் ஷாங்காய் நகரில் ஏழு பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், தொழிற்சாலையை தொடங்கிய பிறகு டெஸ்லா சீனாவில் பிரபலமான EV ஆனது. ஆனால், உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களால் தற்போது கடும் போட்டியை சந்தித்து வருகிறது. இதனால், சீனாவில் தயாரித்த வாகனங்களின் விலைகளை ஆறு சதவீதம் வரை டெஸ்லா நிறுவனம் குறைத்துள்ளது.
இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க்:
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையைத் திறப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் எலான் மஸ்க் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் உள்நாட்டு நிறுவனங்களால் கடும் போட்டியை சந்தித்து வரும் சீனாவில், தனது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்க் அங்கு சென்றுள்ளார். இதனால், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை அமைப்பது மற்றும் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் மேலும் தாமதமாகியுள்ளன.மேலும் காண

Dubai set to build world’s largest airport with 400 terminal gates and much more! Cost, features all details you need to know
Worlds Largest Airport: 2.9 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் கட்டப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய விமான நிலையம்:
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 34.85 பில்லியன் டாலர் மதிப்பிலான (இந்திய மதிப்பில் ரூ.2.9 லட்சம் கோடி) அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையங்களுக்கான வடிவமைப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் 26 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய விமான நிலையம் இருக்கும் என்று ஷேக் முகமது பெருமிதம் பேசியுள்ளார்.
Today, we approved the designs for the new passenger terminals at Al Maktoum International Airport, and commencing construction of the building at a cost of AED 128 billion as part of Dubai Aviation Corporation’s strategy.Al Maktoum International Airport will enjoy the… pic.twitter.com/oG973DGRYX
— HH Sheikh Mohammed (@HHShkMohd) April 28, 2024விமான நிலையத்தின் வசதிகள் என்னென்ன?
புதிய விமான நிலையாமனது துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும். வரும் 10 ஆண்டுகளில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அல் மக்தூமுக்கு மாற்றப்படும். ஐந்து இணை ஓடுபாதைகளுடன், விமான நிலையம் 400 முனைய வாயில்களுக்கு இடமளிக்க உள்ளது. விமானத் துறையில் வேறு எங்கும் இல்லாத புதிய விமான தொழில்நுட்பங்கள் முதல் முறையாக இங்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்படும் இந்த விமான நிலையத்தில் இருந்து, ஆண்டுக்கு 120 மில்லியன் டன் எடையிலான சரக்குகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
கட்டமைக்கப்படும் புதிய நகரம்:
துறைமுகம், அதன் நகர்ப்புற மையம் மற்றும் அதன் புதிய உலகளாவிய வணிக மையம் ஆகியவற்றால், துபாயின் புதிய விமான நிலையம் உலகின் விமான நிலையமாக இருக்கும் என ஷேக் முகமது தெரிவித்துள்ளார். தெற்கு துபாய் விமான நிலையத்தைச் சுற்றி ஒரு முழு நகரம் உருவாக்கப்பட உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் அங்கு கட்டப்படும். உலகின் முன்னணி தளவாடங்கள் மற்றும் வான்வழி போக்குவரத்து சேவைகள் இங்கிருந்து செயல்படும் . எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறோம், எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறோம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது. துபாயை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் அனைத்து விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து, முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் பட்ஜெட் நிறுவனமான ஃப்ளைதுபாய்க்கான புதிய மையமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.மேலும் காண

Australian Beach Over 100 Pilot Whales Stranded Likely to dozens whales dead
ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித்தவித்த 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களைக் கடல் உயிரியலாளர்கள் காப்பாற்றினர்.
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்:
கடந்த வியாழக்கிழமை, ஆஸ்திரேலியா கடற்கரைக்கு கூட்டமாக நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கடற்கரை அருகே ஒதுங்கின. அதில் சுமார் 160 கடற்கரையில் காலை சிக்கித் தவித்தன. வனவிலங்கு அதிகாரிகள், கடல் விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் குழுவானது, சில திமிங்கலங்களை கடற்கரையிலிருந்து விலகி ஆழமான நீருக்குள் வழிநடத்த முயற்சித்தனர்.
Australian wildlife experts took measurements and samples from some 140 pilot whales that had beached on the shores of Western Australia, to determine the cause of the mass stranding event https://t.co/Ajg2SraEiQ pic.twitter.com/jxr9vfsGUu
— Reuters (@Reuters) April 25, 2024இதையடுத்து 100 க்கும் மேற்பட்ட திமிலங்களை கடலின் ஆழத்திற்குச் சென்றனர். இதனால், 100க்கும் மேற்பட்ட திமிலங்கள் உயிர் தப்பின. இச்சம்பவம் குறித்து, மேற்கு ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கையில், கடற்கரையில் இருந்த 26 திமிங்கலங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியது.
2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து கடற்கரையில் சுமார் 500 திமிங்கலங்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
திமிங்கலங்கள் ஏன் கூட்டமாக கரைக்கு வருகின்றன என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. .Published at : 27 Apr 2024 09:23 PM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

America police Pins Down Black Man Killing Him like george floyd Then Brags About Bar Fights
US Black Man: இந்தியாவில் சாதிய கொடுமை போல அமெரிக்காவில் இனவெறி பல நூற்றாண்டுகளாகவே பிரச்னையாக இருந்து வருகிறது. கறுப்பின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
கறுப்பினத்தவருக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகள்:
குறிப்பாக, காவல்துறையினரால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தாலும் அது ஏற்படுத்திய வலி நம் மனதில் இருந்து மறையாமல் வடுவாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா ஓஹியோ மாகாணத்தில் காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 18ஆம் தேதி நடந்தது.
மதுபான விடுதியில் கறுப்பினத்தவர் ஒருவரை தரையில் தள்ளி, அவருக்கு கைவிலங்கு போட்டுள்ளனர். அதோடு நிற்காமல் தங்களின் கால்களால் அவரின் கழுத்தை காவல்துறை அதிகாரிகள் நெரித்துள்ளனர். தன்னால் மூச்சு விட முடியவில்லை என அந்த இளைஞர் கதறியுள்ளார். இறுதியில், அவர் துடிதுடிக்க இறந்துள்ளார்.
மீண்டும் மீண்டும் கொல்லப்படும் ஜார்ஜ் பிளாய்ட்:
இந்த சம்பவம், ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்த அதே சம்பவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. மரணம் அடைந்த கறுப்பினத்தவர் ஃபிராங்க் டைசன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு வயது 53. டைசனுக்கு நடந்த கொடூர சம்பவம் அங்கிருந்து கேமராவில் பதிவாகியுள்ளது. அதை, ஓஹியோ காவல்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி, மின் கம்பத்தில் மோதி கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் மதுபான விடுதிக்கு தப்பி சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அருகில் உள்ள மதுபான விடுதிக்கு காவல்துறை அதிகாரிகள் செல்கின்றனர். அங்கு, நின்று கொண்டிருந்த டைசனிடம் காவல்துறை அதிகாரிகள் வாக்குவாதம் செய்கின்றனர். இதையடுத்து, அவரின் கைகளை மடக்கி பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முயல்கின்றனர்.
நடந்தது என்ன?
அப்போது, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அதிகாரிகளை அழைக்கும்படியும் டைசன் கத்துகிறார். அவரை தரையில் தள்ளி, அவரின் கைகளில் விலங்கு போடுகின்றனர். அதோடு நிற்காமல், காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னுடைய கால்களால் டைசனின் கழுத்தை நெரிக்கிறார்.
தன்னால் மூச்சு விட முடியவில்லை, கழுத்தில் இருந்து எழுந்திருங்கள் என டைசன் கதறியுள்ளார். “ஒன்றும் இல்லை, நீ நன்றாக இருக்கிறாய்” என அதிகாரி ஒருவர் கூறுகிறார். சிறிது நேரத்தில், தரையில் மூச்சு பேச்சின்றி டைசன் கிடக்கிறார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள், டைசனை பாரில் இருந்து ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்றனர். மருத்துவமனையில், அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காண

அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
வாம்பயர் ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. CDC அறிக்கையின் படி, நியூ மெக்சிகோ ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின் மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாம்பயர் ஃபேஷியல் எனப்படும் பிரபலமான ஒப்பனை செயல்முறை மூலம் எதிர்பாராத விதமாக எச்ஐவி பரவுவதை சமீபத்திய வழக்கு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம் முகத்தில் உள்ள வடுக்கள், முகப்பரு தழும்புகள், கோடுகள், பெரிய துளைகள் அவற்றை சரி செய்து சருமத்தின் பளபளப்பையும், நேர்த்தியையும் மேம்படுத்துகிறது.
தனது அழகை பராமரிக்கவும் மேம்படுத்தவும் பெரும்பாலானோர் இந்த வாம்பயர் ஃபேஷியல் பக்கம் திரும்பியுள்ளனர். பெரும்பாலும் பெண்களே இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தான் வாம்பயர் ஃபேஷியல் செய்துகொண்ட 3 பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பயன்படுத்தியதன் மூலம் இந்த தவறு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு உரிமம் பெறாத ஸ்பாவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்க சுகாதார நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மருத்துவம் மற்றும் அழகு சேவைகள் இரண்டையும் வழங்கும் கட்டுப்பாடற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய கடுமையான அபாயங்களை இது எடுத்துக்காட்டுகிறது.
முறையான உரிமங்கள் இல்லாமல் இயங்கியதற்காகவும், பாதுகாப்பான தொற்றுக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காகவும் இந்த ஸ்பா 2018 -ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்ததற்காக அதன் உரிமையாளர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின், 2018 ஆம் ஆண்டில் ஒரு முன்னாள் வாடிக்கையாளர் எச்.ஐ.வி.க்கு பாதிக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், சில வாடிக்கையாளர்கள் ஸ்பாவிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே எச்.ஐ.வி.க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மூலக் காரணிகள் எதுவும் தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது.
CDC மற்றும் சுகாதாரத் துறை விசாரணையில் 59 ஸ்பா வாடிக்கையாளர்கள் ஸ்பாவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதில், 20 பேர் வாம்பயர் ஸ்பாவைப் பெற்றனர், மீதமுள்ளவர்கள் போடோக்ஸ் போன்ற சேவைகளுக்காக ஊசிகளைப் பெற்றுள்ளனர்.Check out below Health Tools-Calculate Your Body Mass Index ( BMI )Calculate The Age Through Age Calculator
மேலும் காண
Houthi Attack: இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. செங்கடலில் பரபரப்பு..

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இதில் இஸ்ரேல், ஹமாஸ் காசாவில் இருக்கும் மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் சுரங்கம் அமைத்து செயல்பட்டு வருவதாக கூறி தாக்குதல் நடத்தியது. 6 மாதங்களுக்கு மேலாக தொடரும் போரை நிறுத்த பல நாடுகள் அழுத்தம் கொடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்து, உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி கிளச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளில் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக செங்கடலில் கடந்த சில மாதங்களாக வணிக கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கடலில் உள்ள ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா கொடியுடன் வந்து கொண்டிருந்த கப்பல் பிரிட்டன் நாட்டிற்கு சொந்தமானது என ஹவுதி கிளர்ச்சியாளர் குழு செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். இந்த டேங்கர் கப்பல் ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ப்ரிமோர்ஸ்கில் இருந்து குஜராத் மாநிலம் வந்துக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுபோல தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இப்படி வழக்கமான பாதை விட சுற்றி வருவதால் செலவுகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச வணிக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என உலக அளவில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

“I Can’t Breathe”: Black Man Dies After US Cops Pin Him Down, Kneel On Neck in tamil | Black Man Dies: அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்
Black Man Dies: போலீசாரால் கைது செய்யப்பட்ட பின் உயிரிழந்த நபர், என்னால் சுவாசிக்க முடியவில்லை என கூச்சலிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மீண்டும் ஒரு கருப்பர் மரணம்:
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் போலீசார், ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பர் ஒருவரை கைது செய்தனர். அப்போது, அவரை தரையில் தள்ளி அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். தன்னால் சுவாசிக்க முடியவில்லை என பலமுறை கூச்சலிட்டும், அவரது கழுத்தில் இருந்து போலீசார் காலை எடுக்கவில்லை. இதனால், ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுதிணறி உயிரிழந்தார். நிறவெறியால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதாக, சர்வதேச அரங்கில் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் தான், அமெரிக்காவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு கருப்பர், மூச்சு திணறலுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கைதிக்கு மூச்சு திணறல்:
ஏப்ரல் 18 அன்று கார் விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட, பிராங்க் டைசன் எனும் 53 வயதான நபரை பார் ஒன்றில் வைத்து கான்டன் போலீசார் கைது செய்ய முற்பட்டனர். ஆனால், அந்த நபர் தான் தவறிழைக்கவில்லை என கூறி முழக்கமிட தொடங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை குண்டுக்கட்டாக பாரில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். தொடர்ந்து அந்த நபரின் மார்புப் பகுதி தரையை நோக்கியாவாறு இரும்படி படுக்கச் செய்தனர். மேலும், அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி, கைகளில் விலங்கிட்டுள்ளனர். இதனிடையே, அந்த நபர் தன்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னால் முடியவில்லை என பல முறை கூக்குரலிட்டுள்ளார். அதனை சிறிதும் பொருட்படுத்தாத போலீசார், பிராங்க் டைசனின் கைகளில் விலங்கிட்டுள்ளனர். மேலும், நீங்கள் நன்றாக தான் இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர்.
Canton, OhioBodycam footage of Frank Tyson pic.twitter.com/RvpE4Meuib
— The Daily Sneed™ (@Tr00peRR) April 26, 2024சிகிச்சை பலனின்றி மரணம்:
கைது நடவடிக்கைக்குப் பின், பிராங்க் டைசன் தரையில் இருந்து எழ முடியாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு போலீசாரே அவருக்கு முதலுதவியும் அளித்துள்ளனர். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிராங்க் டைசன் உயிரிழந்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பான வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாக, ஒஹியோ காவல்துறையும் போலீசாரின் உடல் கேமராவில் பதிவான காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளன.
மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்..
கடந்த 2020ம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்ததே, பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற பெயரில் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பாணியில் மேலும் ஒரு கருப்பர் உயிரிழந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராங்க் டைசனை கைது செய்த காவல் துறை அதிகாரிகளான, பியூ ஸ்கோனெக் மற்றும் கேம்டன் புர்ச் ஆகியோர் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையையும் தொடங்கியுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில், 3 போலீசார் ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண

பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா? தீயாய் பரவும் பொய் செய்தி!
பாகிஸ்தானில் ஹனுமான் கோயில் ஒன்று பொது கழிவறையாக மாற்றப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா?
பாகிஸ்தான் லாகூர் நகரத்தில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க பசுலி ஹனுமான் கோயில். இந்த கோயிலுக்கு பசுலி மந்திர் என்ற பெயரும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பணக்கார இந்து குடும்பத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தளமாக விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக இந்த கோயில் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் 1947 இல் பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகான காலத்தில் இந்த கோயிலை சிலர் குறிவைத்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருவதாகவும் செய்திகள் உலா வருகிறது.
அதோடு நின்றுவிடாமல், சிதிலம் அடைந்த இந்த கோயிலை பொது கழிவறையாக மாற்றிவிட்டனர் என செய்திகள் உலா வருகிறது. ஆனால், இது பொய்யான செய்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்திய – பாகிஸ்தான் உறவு:
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, 2008 மும்பை தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு உறவில் உச்சக்கட்ட விரிசலை ஏற்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் பிரச்னையை மேலும் பெருதாக்கியது.
இயல்பான பேச்சுவார்த்தை கூட தடைப்பட்டது. இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடக்கும் ஐசிசி தொடர்களில் கூட இந்திய அணி விளையாட மறுத்து வருகிறது.
இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், பாகிஸ்தானில் இந்து கோயிலை அவமதித்துள்ளனர் என வெளியாகியுள்ள பொய் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், இம்மாதிரியான செய்திகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இம்மாதிரியான பொய் செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயத்தில், இம்மாதிரியான பொய் செய்திகளை களைவதில் சுதந்திரமான ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இதையும் படிக்க: Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல் – ஈரானிடம் காஷ்மீர் பிரச்னையை முன்வைத்த பாகிஸ்தான்மேலும் காண

Greece: ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.. பதறிய மக்கள்.. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாசாவின் விளக்கம்!

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. அட்டிக் சமவெளியில் அமைந்துள்ள இந்த நகரம் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. கிரேக்க சாம்ராஜ்யத்தின் மையப்புள்ளியாக விளங்கும் ஏதென்ஸ் நகரம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

நவீன ஒலிம்பிக் போட்டியின் தாயகமாக விளங்கும் கிரீஸ் நாட்டில் பல்வேறு சிறப்பு வாய்ந்த நினைவு சின்னங்களும், பண்டைய கால கட்டடங்களும் உள்ளது. இதனால் வெளிநாட்டினர் விரும்பி சுற்றுலா செல்ல விரும்பும் நகரமாக உள்ள ஏதென்ஸ் உள்ளது. இந்நிலையில் இந்த நகரில் உள்ள சிண்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்டஸ் குன்று உள்ளிட்ட பகுதிகள் நேற்று ஆரஞ்சு நிறமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிர்ச்சியடைந்தனர்.

The sky in Piraeus now.

🎥 Daphne Tolis, #Greece pic.twitter.com/cuelsWxH53

— Daphne Tolis (@daphnetoli) April 23, 2024

பார்ப்பதற்கு செவ்வாய் கிரகத்தை காண்பது போல இருந்த ஏதென்ஸ் நகரம் இப்படி காட்சியளிக்க என்ன காரணம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கமளித்துள்ளது. அதாவது, “வட ஆப்பிரிக்காவில் இருந்து மேக கூட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் கிரீஸ், மாசிடோனியா, சிப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நகர்வது இயற்கையான ஒன்று தான். இந்த மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் புழுதி புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்நகரம் ஆரஞ்சு கலரில் தெரிந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகரம் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க: Everest MDH Masala Ban: எவரெஸ்ட்,எம்.டி.ஹெச். மசாலாவிற்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை! ஏன்?

கார் பந்தய போட்டியில் பயங்கரம்.. பார்வையாளர்கள் மீது மோதிய ரேஸ் கார்.. இலங்கையில் அதிர்ச்சி!
Car Race Accident: இலங்கையில் நடந்த கார் பந்தய போட்டியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் தியாதலாவா பகுதியில் கார் பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ஸேர் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் மீது மோதியது.
கார் பந்தய போட்டியில் விபத்து:
இந்த துயர சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை காவல்துறை தரப்பு கூறுகையில், “ஐந்து ஆண்களும் ஒரு சிறுமியும் விபத்தில் உயிரிழந்துள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேர் பந்தய நிகழ்வில் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்தவர்கள். மேலும் இருவர் பார்வையாளர்களிடையே இருந்த பொதுமக்கள்” என்றார். விபத்து குறித்து இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “உயிரிழந்த சிறுமிக்கு 8 வயதாகிறது” என்றார்.
இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்:
பந்தய போட்டியில் ரேஸ் கார் ஒன்று ஓடுபாதையில் விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 பேரில் 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The Fox Hill Super Cross 2024 accident death toll has risen to 7. The rest of the races at the event have been cancelled.🛑Sensitive Video 🛑pic.twitter.com/ApkEd1KGFV#LKA #SriLanka #FoxHill #Diyathalawa According to sources, after one car crashes, spectators rushing in…
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) April 21, 2024இந்த விபத்து காரணமாக தியாதலாவா பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மற்ற அனைத்து கார் பந்தய போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தியாதலாவா காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
தெற்காசிய நாடுகளில் இம்மாதிரியான கார் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கார் பந்தய போட்டியின்போது தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடுமையான விதிகள் பின்பற்றப்படும். ஆனால், தெற்காசிய நாடுகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.மேலும் காண

Global Military ExpendtureIndia is 4th largest military spender after US, China & russia | Global Military Expendture: போர் பதற்றம்
Global Military Expendture: கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்திற்காக உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக 2,443 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளன.
உலகளவியா ராணுவ செலவினம்:
உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காஸா என இரண்டு போர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் இடையேயும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. இந்நிலையில், உலகளாவிய ராணுவச் செலவினம் அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில், ராணுவத்திற்கான செலவினம் 2023 ஆம் ஆண்டில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, கடந்த ஆண்டு உலக நாடுகள் ராணுவத்திற்காக 2,443 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளன. இதில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடதில் உள்ளது.
ராணுவ செலவில் டாப் 10 நாடுகள் பட்டியல்:
1. அமெரிக்கா – 916 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. சீனா – 296 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. ரஷ்யா – 109 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. இந்தியா – 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சவுதி அரேபியா – 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
6. இங்கிலாந்து – 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
7. ஜெர்மனி – 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
8. உக்ரைன் – 65 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
9. பிரான்ஸ் – 61 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
10. ஜப்பான் – 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
இந்த பட்டியலில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுடன் பாகிஸ்தான் 30-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் ராணுவ செலவினம்:
நாட்டின் ராணுவ நவீனமயமாக்கல், அதன் 14 லட்சம் வீரர்களின் பெரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டணங்கள், பலவீனமான பாதுகாப்பு-தொழில்துறை தளம் மற்றும் முறையான இடை-சேவையுடன் ராணுவத் திறன்களை முறையாகக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான நீண்டகாலத் திட்டங்கள் ஒப்பீட்டளவில் இல்லாதது ஆகியவற்றால் தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முதல் நவீன காலாட்படை ஆயுதங்கள், டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் இரவு நேரச் சண்டை திறன்கள் வரையிலான பல பகுதிகளில் இந்திய ஆயுதப் படையில் பெரும் செயல்பாட்டு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வறிக்கையின்படி, இந்தியா கடந்த ஆண்டு 89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 7 லட்சம் கோடி ரூபாயை பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளது.
வலுவாகும் சீனா:
இந்தியாவின் செயல்பாட்டிற்கு நேர் எதிராக, சீனா தனது 20 லட்சம் பேர் அடங்கிய ராணுவத்தை நிலம், காற்று மற்றும் கடல் மற்றும் அணுசக்தி, விண்வெளி மற்றும் சைபர் போன்ற பாரம்பரிய களங்களில் விரைவாக நவீனமயமாக்குகிறது. அந்நாட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பின்படி, சீன ராணுவம் தொடர்ச்சியாக 29 வது ஆண்டாக உயர்த்தப்பட்ட பட்ஜெட்டை பெற்றுள்ளது. இது இந்தியாவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். தைவான், தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் அமெரிக்கா தலைமையிலான தலையீட்டைத் தடுப்பதற்கு சீனாவின் ராணுவச் செலவுகள் பெரிதும் உதவுகின்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்படையின் இருப்பை படிப்படியாக அதிகரிக்கிறது.
அதிகரிக்கும் அசாதாரண சூழல்:
அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-ஓசியானியா ஆகிய ஐந்து புவியியல் பகுதிகளிலும் ராணுவச் செலவு அதிகரித்தது 2009க்குப் பிறகு இதுவே முதல் முறை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ செலவினங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவிலான உயர்வானது, அமைதி மற்றும் பாதுகாப்பில் உலகளாவிய சரிவுக்கான நேரடியான பிரதிபலிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காண

Taiwan Earthquake 80 earthquakes hit Taiwan overnight – watch video
தைவானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், நேற்று இரவு முதல் 80க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தைவானில் நேற்றிரவு 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. அதேபோல், அதிகாலை 2.55 மணிக்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.
ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம்:
கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர், தைவானில் மீண்டும் நேற்றிரவு முதல் அதிகாலை வரை ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இவற்றில் மிகவும் சக்திவாந்த நிலநடுக்கமாக 6.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை உணரப்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதன் மையப்பகுதி ஹுவாலியன் நகருக்கு தெற்கே 28 கிலோமீட்டர் (17.5 மைல்) தொலைவில் 10.7 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மற்ற நிலநடுக்கங்கள் 4.5 முதல் 6 ரிக்டர் வரை பதிவானதாக தெரிகிறது. இதன் காரணமாக, கட்டிடங்கள் ஆங்காங்கே குலுங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More than 80 #earthquakes, the strongest of 6.3 magnitude, struck #Taiwan ‘s east coast starting Monday night and into the early hours of Tuesday (April 23) and some caused shaking of buildings in the capital #Taipei . pic.twitter.com/DGcO7p8WMF
— Smriti Sharma (@SmritiSharma_) April 23, 2024இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹூவாலியன் கிராமப்புற கிழக்கு மாகாணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அதாவது இரண்டு வாரங்களுக்கு முன்பு தைவானின் கிழக்குக் கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 14 பேர் உயிரிழந்த நிலையில், 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, தைவானில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றன. இதையடுத்து, தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும். கடந்த 1999ம் ஆண்டு தைவானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TAIWAN UPDATE:Example: This is a 4.1 earthquake from last night. We have had dozens over the past 24 hours. I have no idea how many. 80+???Many 5’s and two 6’s. I cannot relax or live life with so many earthquakes back to back. How long is this going to continue???This is… pic.twitter.com/79oiIg3gwE
— Gretchen Smith🇺🇸 (@MAGAgpsmith) April 23, 2024கடந்த ஏப்ரல் 3ம் தேதி நிலநடுக்கத்திற்குப் பிறகு ஒரு ஹோட்டல் மோசமாக சேதமடைந்ததாகவும், நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்த ஹோட்டல் மேலும் சாய்ந்ததாகவும் தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்த கட்டிடத்தில் ஹோட்டல் இயங்கவில்லை. எனவே, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது..?
இதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள, பூமியின் கட்டமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியானது டெக்டோனிக் தட்டுகளில் அமைந்துள்ளது. அதன் கீழே திரவ எரிமலை மற்றும் டெக்டோனிக் தட்டுகள் மிதக்கின்றன. பல சமயங்களில் இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. மீண்டும் மீண்டும் மோதுவதால், சில சமயங்களில் தட்டுகளின் மூலைகள் வளைந்து அதிக அழுத்தம் ஏற்படும் போது, இந்த தட்டுகள் உடையும். அத்தகைய சூழ்நிலையில், கீழே இருந்து வெளிப்படும் ஆற்றலே நிலநடுக்கமாக உருவெடுக்கிறது.
மேலும் காண

malaysia Ten people have died after two navy helicopters collided in mid-air during a military rehearsal | மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது விபத்து
மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கோலாலம்பூரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pelo menos 10 pessoas morreram depois que dois helicópteros militares colidiram no ar em Lumut, na Malásia. pic.twitter.com/hPv4qhNOQY
— André GAP 🇧🇷 (@AndreGA_Pe) April 23, 2024கோலாலம்பூரில் உள்ள பேராக்கின் லுமுட் என்ற இடத்தில் ராயல் மலேசியன் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே அனைவரும் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரண்டு ஹெலிகாப்டர்களிலும் தலா 5 பேர் என மொத்தம் 10 கடற்படை வீரர்கள் இருந்த நிலையில், இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.
பயிற்சியின்போது விபத்து:
ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பேராக்கின் லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் கடற்படை தளத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி கொண்டது.
BREAKING: 🇲🇾 2 military helicopters crash after mid-air collision in Malaysia, killing all 10 people on board pic.twitter.com/ckiEaqnd4R
— Megatron (@Megatron_ron) April 23, 2024விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் AgustaWestland AW139 மற்றும் Eurocopter Fennec ஆகும். இரண்டு ஹெலிகாப்டர்களும் 3-5 மே 2024 அன்று நடைபெறவிருக்கும் கடற்படை பிறந்தநாள் நிகழ்ச்சியில் சாகசம் செய்ய பயிற்சி செய்து கொண்டிருந்தன. விபத்து தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதியவுடன் சீட்டுக்கட்டு போல தரையில் விழுந்ததை அந்த வீடியோவில் தெளிவாக காணலாம்.
விசாரிக்கக் குழு அமைப்பு:
மலேசியக் கடற்படையின் 90வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ராயல் கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்ததாக மலேசியன் ஃப்ரீ பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது . இதற்கிடையில், HOM (M503-3) ஹெலிகாப்டர் Fenech ஹெலிகாப்டரின் ரோட்டருடன் மோதியது. விபத்திற்குப் பிறகு, ஃபெனெக் ஹெலிகாப்டர் அருகிலுள்ள நீச்சல் குளத்திலும், மற்றொரு ஹோம் ஹெலிகாப்டர் லுமுட் கடற்படைத் தளத்தின் மைதானத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இந்த மோதல் எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் தெளிவாக வெளியாகவில்லை. முழு விபத்து குறித்து விசாரிக்க குழுவொன்று செயல்பட்டு வருவதாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்திலும், மலேசியாவின் கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ஹெலிகாப்டர் மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளானது. இது தவிர, பிப்ரவரி மாதத்திலும் சிலாங்கூர் நகரில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காண

Everest MDH Masala Ban in Hong Kong Singapore Due To Cancer Causing Chemicals Spice Brands
இந்தியாவின் எம்.டி.ஹெச். மற்றும் எவரேஸ்ட் ஆகிய நிறுவனங்களின் மசாலாப் பொருட்களில் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எத்திலீன் ஆக்ஸைடு என்ற பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டிருப்பதால் சிங்கபூர், ஹாங்-காங் ஆகிய நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய மசாலா தயாரிப்பு நிறுவனங்களாக எம்.டி.ஹெச். ( MDH Pvt.) எவரெஸ்ட் ( Everest Food Products Pvt) ஆகியவை தயாரித்த மசாலாப் பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்ஸைடு (ethylene oxide) என்ற பூச்சிக்கொல்லி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மீன் குழம்பு மசாலாவிற்கு தடை
சிங்கப்பூர் உணவு முறை எவரெஸ்ட் மீன் குழம்பு மாசாவில் அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தவுடன், அதன் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும், எவரெஸ்ட் மசாலாப் பொருட்களை கொள்முதல் செய்யவும் தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக சிங்கபூர் அரசு தெரிவித்துள்ள விளக்கத்தில், ‘ எத்திலீன் ஆக்ஸைடு உணவில் பயன்படுத்த அனுமதியில்லை. இது விவசாயப் பொருட்களுக்கு கிருமிநீக்கம் செய்யப்படும் ரசாயனம். எனவே, மக்கள் யாரும் இதை சமையலில் உபயோகிக்க வேண்டாம். இது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் உள்ள எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா பாக்கெட்கள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹாங்காங்
கடந்த வாரம் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது. அடுத்து, ஹாங்காங் நகரிலும் எம்.டி.ஹெச். மெட்ராஸ் சாம்பார் மசாலா, Curry மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் சந்தையில் விற்பனை செய்யப்பட்டும் எம்.டி.ஹெச். மெட்ராஸ் Curry மசாலா, சாம்பர் மசலாம், Curry பவுடர் உள்ளிட்டவற்றில் அதிகமாக எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதை ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு துறை சோதனையில் கண்டறிந்துள்ளது (The Centre For Food Safety of The Government).
இது தொடர்பாக ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” Tsim Sha Tsui பகுதியில் உள்ள மூன்று கடைகளில் இருந்து பெறப்பட்ட மசாலாப் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது மக்களின் உடல்நலனுக்கு கேடு என்று அறிந்ததும் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.”என்று தெரிவித்துள்ளது.
எத்திலீன் ஆக்ஸைடு என்றான் என்ன?
எத்திலீன் ஆக்ஸைடு (Ethylene oxid) என்பது ஓர் நிறமற்ற, எரியக்கூடிய வாயு. இது மற்ற வேதிப்பொருட்கள் கிடைப்பதற்கு குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுகிறது. ’antifreeze’ எனப்படும் வாகன எஞ்ஜின்களின் தட்பவெப்பநிலையை சீராக இயங்க உதவும் ஆயில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்பட்டால் விவசாயப் பொருட்களின் பூச்சுக்கொல்லியாக செயல்படும். கருத்தடை மருந்துகள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.
எத்திலீன் ஆக்ஸைடு மனிதனின் நரம்பியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கும். மேலும், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கிறது. மனிதர்கள் உண்ணும் உணவில் இதை சேர்ப்பது ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவரெஸ்ட் நிறுவனம் விளக்கம்
எவரெஸ்ட் நிறுவனம் Wion என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த விளக்கத்தில், நாங்கள் 50 ஆண்டுகால புகழ், பாரம்பரிய மிக்க ப்ராண்ட். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய இரண்டையும் உறுதி செய்த பிறகே எங்கள் தயாரிப்புகள் வெளிவருகின்றன; ஏற்றுமதி செய்யப்படுகின்றன.எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) ஆகியவற்றின் அனுமதி பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு எங்களது தயாரிப்புகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.
2023-ம் ஆண்டும் எவரெஸ்ட் நிறுவனம் தயாரித்த பொருட்களில் அதிகளவு ரசாயனம் இருந்ததால் ’Salmonella’ பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்கவில் எவரெஸ்ட் மசாலா பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் அந்நாட்டின் பாதுகாப்பு துறை தெரிவித்திருந்தது.
உணவுப் பொருட்களில் குறிப்பிட்ட அளவே எத்திலீன் ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டாலும் அதை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.மேலும் காண

Pakistan rakes up Kashmir issue with Iran in meet to repair strained ties months after airstrikes in january | Iran – Pakistan: ஜனவரியில் வான்வழித் தாக்குதல்
Iran – Pakistan: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானில், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் சென்ற ஈரான் அதிபர்:
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக, இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஈரான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் அதிபர் இடையேயான சந்திப்பு, ஆசிய பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Reliance Profit: 3 மாதங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.18 ஆயிரத்து 951 கோடி – ஆனாலும் நஷ்டமாம்..!
காஷ்மீர் பிரச்னையை பேசிய பாகிஸ்தான்:
இருநாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். ஆனால் அது பற்றி பேசும் முயற்சியை ஈரானிய அதிபர் தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக இப்ராஹிம் ரைசி, பாலஸ்தீன பிரச்சினை குறித்து பேசியுள்ளர். மேலும், அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஈரான் எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
விவாதிக்கப்படும் விவகாரங்கள் என்ன?
விரிசல் ஏற்பட்டுள்ள இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்செய்யும் முயற்சியில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, மதம், கலாச்சாரம், ராஜதந்திரம், முதலீடு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தொடர்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையும் இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு:
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பாக பேசிய இப்ராஹிம் ரைசி, “ இருநாடுகளுக்கு இடையே உயர்ந்த மட்டங்களில் உறவுகளை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக அளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக அளவை 10 பில்லியன் டாலராக அதிகரிக்க முதல் கட்டமாக முடிவு செய்துள்ளோம்” என கூறினார். தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பேசுகையில், “நாங்கள் இருவரும் எதிர்கொள்ளும் சவால்களை மீறி இந்த உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். அதனால் பாகிஸ்தானும் ஈரானும் செழிக்கும். நமது எல்லைகள் முன்னேற்றத்தைக் காண முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு தற்போது சற்று தணிந்துள்ளது.மேலும் காண

மக்களவை தேர்தலை விடுங்க! இந்தியாவே உற்று நோக்கும் மற்றொரு தேர்தல் இதுதான்!

இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணியும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்தியா உற்று பார்க்கும் அண்டை நாட்டு தேர்தல்:

சொந்த நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கு இணையாக அண்டை நாட்டு தேர்தலையும் இந்திய மக்கள் உற்று கவனித்து வருகின்றனர். அது வேறும் எந்த நாடும் அல்ல, இந்தியாவுக்கு சமீப காலமாக குடைச்சல் தந்து வரும் மாலத்தீவுதான்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் முக்கியமான நாடாக இருப்பது மாலத்தீவு. இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அந்நாட்டுடன் இணக்கமான உறவை இந்தியா பேணி வருகிறது. இதனால், மாலத்தீவில் பல திட்டங்கள், இந்தியாவின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்த அதிபர் முகமது சோலி, மாலத்தீவு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

சீன ஆதரவு அதிபருக்கு செக் வைக்கப்படுமா?

இந்தியாவுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றினார். இதை தவிர, பல்வேறு விவகாரங்களில் இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

மாலத்தீவு நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் 93 உறுப்பினர்களை கொண்டது. இதற்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது அதிபரை தேர்வு செய்தவற்கான தேர்தல் அல்ல. மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல்.

இந்த தேர்தலின் முடிவுகள் என்னவாக இருந்தாலும் முகமது முய்சுவே அதிபராக தொடர்வார். ஆனால், அதிபரின் கொள்களை திட்டங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு தேவை. இந்த தேர்தல் முடிவுகளை வைத்தே அது அமையும்.

தற்போதைய அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மைனாரிட்டி கூட்டணி அரசை நடத்தி வருகிறது. இந்திய ஆதரவாளராக பார்க்கப்படும் முன்னாள் அதிபர் முகமது சோலியின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. அக்கட்சிக்கு 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தனது கொள்கை முடிவுகளை அமல்படுத்த முய்சு முயற்சித்த போதிலும், அது இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

Maldives Parliamentary Elections: மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி..!

‘மஜ்லிஸ்’ எனப்படும் 93 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) 86 இடங்களில் 66 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

மஜ்லிஸ் என்றால் என்ன..?

மக்கள் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பாகும். மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் மஜ்லிஸுக்கு அதிகாரம் உள்ளது.

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்:

மாலத்திவீன் 20வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, 93 தொகுதிகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கிட்டதட்ட 66 இடங்களில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியது. இது நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும், பிஎன்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் எட்டு இடங்கள் மட்டுமே இருந்தன.

இதையடுத்து, தற்போதைய தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த எம்.டி.பி.க்கு பெரும் அடியாக அமைந்ததுடன், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத முயிஸ்ஸூவின் அரசுக்கு பலம் அளிக்கிறது.

முகம்மது முய்சு:

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, முகமது முய்சுவின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, முய்சு விரும்பிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் எளிதாக கொண்டு வர முடியபில்லை. முய்சு எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளின் தலையீட்டால் அது முடக்கப்பட்டது. இந்தநிலையில், 66 இடங்களில் தற்போது முய்சுவின் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற சூழ்நிலையில், அவர் நினைத்த சட்டங்களை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து, சீனாவுடன் நெருங்கி பழகி வந்தவர்தான் இந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த வெற்றிக்கு பிறகு முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகளவில் அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவு 800 கிலோமீட்டர் தொலைவில் 1192 சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 2,84,663 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்திய எதிர்ப்புக்கு ஆதரவா?

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சியான பிஎன்சியின் மகத்தான வெற்றி, அதிபரின் பதவிக்கு ஆதரவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்த காய் நகர்த்திய முய்சுவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்தியப் படைகள் தீவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்திருந்தார். முய்சுவின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.

தான் அதிபரான பிறகு இந்திய ராணுவம் தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முய்சு கோரினார். தொடர்ந்து, இதுகுறித்து நாடாளுமன்ற தேர்தலில் முய்சு பிரச்சாரமும் செய்தார். அதன் தொடர்ச்சியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகும், சமீபத்தில் இந்தியாவை விமர்சித்து வந்த முய்சு, இந்தியா நெருங்கிய நண்பராக இருக்கும் என்று கூறி ஆச்சரியம் அளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பிஎன்சி உறுப்பினர் மரியம் ஷிவுனா உட்பட இரண்டு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் .

ahead of india visit elon musks Tesla To Lay Off 14,000 Workers Globally Citing “Duplicate Roles”: Report | Tesla Layoff: இந்தியா வரும் முன் எலான் மஸ்க் அதரடி
Tesla Layoff: மின்சார கார் உற்பத்தி நிறுவனமானடெஸ்லா, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு சொந்தமானதாகும்.
14,000 பேரின் வேலை பறிப்பு?
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலியான பணியிடங்களை கண்டறிந்து அகற்றுவதன் மூலம், அநாவசிய செலவுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முடிவு நிறுவனம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால், சுமார் 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அனுப்பியதாக வெளியான ஒரு மின்னஞ்சலில், ” நிறுவனத்தின் அபரிவிதமான வளர்ச்சி போலியான பணியிடங்களுக்கு வழிவகுத்துள்ளது. எனவே, நிறுவனத்தில் போலி பணியிடங்களை ஒழிப்பதோடு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செலவுக் குறைப்பு நடவடிக்கையும் அவசியம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாங்கள் நிறுவனத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்துள்ளோம். அதன்படி, உலகளவில் நமது பணியாளர்களின் எண்ணிக்கையை 10% க்கும் அதிகமாக குறைக்கும் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான் வெறுக்க எதுவும் இல்லை, ஆனால் அது செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெஸ்லா கண்ட சரிவு:
டெஸ்லா நிறுவனம் தனது மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்க, சந்தையில் அடுத்து அதன் விலையில் பல்வேறு சலுகைகள் வழங்கின. ஆனாலும் அந்நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் தான், டெஸ்லாவில் இருந்து பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்கின் இந்திய வருகைக்கு முன்பு, இந்த தகவல்கள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் எலான் மஸ்க்:
ஏப்ரல் மாதத்தின் நான்காவது வாரத்தில் எலான் மஸ்க் இந்தியா வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியை காண ஆவலுடன் உள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திப்பின்போது, இந்திய சந்தையில் டெஸ்லா கார்கள் விற்பனையை தொடங்குவது, உள்நாட்டிலேயே சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து உற்பத்தி ஆலையை தொடங்குவது என்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்த பிறகு, மின்சார வாகனங்களின் இறக்குமதி மீதான வரிகளை கிட்டத்தட்ட 85 சதவ்கிதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் ₹ 4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படு. அப்படி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.மேலும் காண

Singapore Prime Minister Lee To Resign On May 15, Deputy PM Wong Set To Succeed in tamil | Singapore PM: போதும், எனக்கு வயசாயிடுச்சு..! பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர் லீ
Singapore PM Resign: லீயின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை பிரதமரான வோங், புதிய பிரதமராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் ராஜினாமா..!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பிரதமர் பதவிய ஏற்று சுமார் 20 ஆண்டுகள் ஆன பிறகு, வரும் மே 15 ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவிதுள்ளார். கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வாரிசு திட்டங்களில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, லீ திட்டமிட்டதை விட தாமதமாக ஆட்சியை விட்டு வெளியேறுகிறார். 72 வயதான லீ, ஆகஸ்ட் 12, 2004 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு:
தனது ராஜினாமா தொடர்பான சமூக வலைதள பதிவில், “கடந்த நவம்பரில், 2025ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். அதன்படி, மே 15, 2024 அன்று எனது பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகுவேன், அதே நாளில் DPM (துணைப் பிரதமர்) லாரன்ஸ் வோங் அடுத்த பிரதமராக பதவியேற்பார். எந்த நாட்டிற்கும் தலைமை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்க தருணம். லாரன்ஸ் மற்றும் 4G குழு (நான்காம் தலைமுறை) மக்கள் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைத்துள்ளனர், குறிப்பாக தொற்றுநோய்களின் போது.
ஃபார்வர்டு சிங்கப்பூர் பயிற்சியின் மூலம், அவர்கள் பல சிங்கப்பூர் மக்களுடன் இணைந்து நமது சமூகத் தொடர்பைப் புதுப்பிக்கவும், புதிய தலைமுறைக்கான தேசிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கவும் பணியாற்றியிருக்கிறார்கள். இவை எப்போதும் அரசாங்கத்திற்கு முதன்மையானதாக இருக்கும். லாரன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உங்களின் முழு ஆதரவை வழங்குமாறும், சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் அனைத்து சிங்கப்பூரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என லீ ச்யென் தெரிவித்துள்ளார்.
யார் இந்த லீ சியென்:
70 வயதிற்கு மேல் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று லீ, கடந்த 2012 ஆம் ஆண்டு அறிவித்தார். அதைதொடர்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ப்தவ்யை ராஜினாமா செய்துள்ளார். இவர் சிங்கப்பூரின் முதல் பிரதம மந்திரி லீ குவான் யூவின் மூத்த மகனாக 1952 இல் பிறந்தார் , பள்ளியில் கணிதவியலாளராக சிறந்து விளங்கினார். 1974 இல் கணித டிரிபோஸில் மூத்த ரேங்லராக பட்டம் பெற்றார் (முதல் வகுப்பு கௌரவங்களுக்கு சமமானவர்). அவர் கணினி அறிவியலில் டிப்ளமோ பட்டமும் பெற்றிருந்தார். 80-கள் மற்றும் 90-களின் முற்பகுதியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமர் வோங்:
சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) அரசியல் வாரிசு, துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் அடுத்த பிரதமராக கடந்த 2018ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 60 வயதன அவர் தனது வயதை காரணம் காட்டி, கடந்த ஏப்ரல் 2021 இல், பிரதமர் பதவி வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார். இதையடுத்து ஒரு வருட ஆலோசனைக்குப் பிறகு, நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் துணைப் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூர PAPகட்சி மட்டுமே ஆட்சி செய்து வருகிறது எனட்து நினைவுகூறத்தக்கது.மேலும் காண

Papua New Guinea faced magnitude 6.2-6.5 of earthquakes
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சமீபகாலமாக உலக நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தைவான் நாடு வெகுவாக பாதிக்கப்பட்டது. அங்கிருக்கும் கட்டடங்கள் சீட்டுக்கட்டுப் போல சரிந்த வீடியோக்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படியான நிலையில் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே பப்புவா நியூ கினியா என்ற தீவு உள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் தான். அதனால் எந்த நேரத்திலும் மக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான எச்சரிக்கையுடன் வாழுவர். இங்கு கடந்த 2018ல் ரிக்டர் அளவுகோலில் 7.5 என்ற அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 125 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து எப்போது நிலநடுக்கம் ஏற்பட்டாலும் மக்கள் தங்கள் உயிரை தற்காத்து கொள்வதில் கவனமுடன் இருந்து வருகின்றனர்.
NO TSUNAMI THREAT: A 6.5 magnitude earthquake occurred at 10:57 am HST today (4/14) in the New Britain region of Papua New Guinea. There is NO tsunami threat to Hawaiʻi. More info at https://t.co/jNf5IZ3AdC pic.twitter.com/jEhPGiaKut
— Hawaii EMA (@Hawaii_EMA) April 14, 2024சமீபத்தில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6.56 மணியளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான நிலையில், நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த விவரம் எதுவும் வெளிவரவில்லை. அங்கு கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Israel- Iran War: இஸ்ரேல் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரம்! சாம்சன் திட்டம் பற்றி தெரியுமா?
மேலும் காண

Indian Student Shot Dead Inside His Audi In Canada South Vancouver | காரில் வைத்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்! கனடாவில் தொடரும் மர்மம்
கனடாவில் முந்தைய காலங்களை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருமளவும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது.
குறிவைக்கப்படுகிறார்களா கனடா வாழ் இந்தியர்கள்?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டாவாவில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். சமீப காலமாக, கனடா வாழ் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இப்படியான நிலையில், மீண்டும் அங்கு ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வான்கூவர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “ஏப்ரல் 12 ஆம் தேதி, இரவு 11 மணியளவில் கிழக்கு 55வது அவென்யூ மெயின் ஸ்ட்ரீட்டில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
காரில் இந்திய மாணவர் மர்ம மரணம்:
சம்பவ இடத்திற்கு சென்றபோது, அப்பகுதியில் சிராக் அன்டில் (24) என்பவர் வாகனத்திற்குள் இறந்து கிடந்தார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார். சிராக் அன்டிலின் சகோதரர் ரோனிட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலையில் தொலைபேசியில் பேசியபோது சிராக் மகிழ்ச்சியாகத் தெரிந்தார். பின்னர், வெளியில் செல்ல வேண்டும் என கூறிவிட்டு தனது ஆடி காரை எடுத்து சென்றார். அப்போதுதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார். கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் தேசிய மாணவர் சங்க தலைவர் வருண் சௌத்ரி இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், “கனடாவின் வான்கூவரில் சிராக் அன்டில் என்ற இந்திய மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவசர கவனம் தேவைப்படுகிறது.
விசாரணையின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து நீதி விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம். மேலும், இந்த கடினமான நேரத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
சிராக் ஆண்டிலின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அவரது குடும்பத்தினர் க்ரவுட் ஃபண்டிங் தளமான GoFundMe மூலம் பணம் திரட்டி வருகின்றனர். கடந்த 2022ஆம் செப்டம்பர் மாதம், வான்கூவருக்கு வந்தவர் சிராக் ஆன்டில். கனடா வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்த அவர் சமீபத்தில் பணி அனுமதியைப் (Work Permit) பெற்றார்.மேலும் காண

Israel Iran War Reason What is The Conflict Between Iran and Israel EXPLAINED in Tamil | Israel Iran War Reason: இடத் தகராறில் ஆரம்பித்தது இருநாட்டு போராக உருவெடுப்பு.. இஸ்ரேல்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாம் உலக போரை கூட உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ஜென்ரல் உள்பட 12 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் உறுதியாக சொல்லுகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று இரவு வடக்கு இஸ்ரேலை நோக்கி சுமார் 200க்கு அதிகமாக ட்ரோன் மற்றும் ஏவுகணை அனுப்பியது. இருப்பினும், இந்த தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இருப்பினும், அடுத்த 24 முதல் 48 மணிநேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மிகப்பெரிய பதிலடி தாக்குதலை நடத்தும் என்று நம்பப்படுகிறது. ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், ஈரானுக்கு ஈராக், சிரியா, லெபனான், துருக்கி, கத்தார், ஜோர்டான் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானுக்கு – இஸ்ரேலுக்கு என்ன நடக்கிறது. எதனால் இந்த சண்டை மூண்டது என்ற அனைத்து தகவலையும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு நீண்டகால புவிசார் அரசியல் போராட்டமாகும்.
ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த ஈரான், இஸ்ரேலுடன் இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. 1979 இல் அயதுல்லா கொமேனியின் கீழ் இஸ்லாமிய குடியரசைக் கொண்டு வந்த ஈரானியப் புரட்சியைத் (கடவுளின் கட்சி – ஹிஸ்புல்லா) தொடர்ந்து, ஈரான் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்து கொண்டது. இந்த ஈரானியப் புரட்சி படையே ஹிஸ்புல்லா என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஈரானிய தலைமையால், இஸ்ரேலுக்கு எதிரான உணர்வுகளாலும், பாலஸ்தீனிய விடுதலை இயக்கங்களுக்கான ஆதரவாலும் தூண்டப்பட்டு, இஸ்ரேலிய அரசின் எதிரியாக உருவெடுக்க தொடங்கியது ஈரான்.
தொடங்கிய மோதல்:
கடந்த1978ம் ஆண்டு தெற்கு லெபனானை இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்ததை எதிர்த்தது ஹிஸ்புல்லா அமைப்பு. அன்று உருவெடுத்த போராட்டம் இன்று வரை தொடர்கிறது. அதனை தொடர்ந்து ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பு வெளிநாடுகளில் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு கடந்த 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ரூட்டில் உள்ள அதன் மரைன் தலைமையகத்தை அழித்து 241 வீரர்களை கொன்றது. அதை தொடர்ந்து, மீண்டும் கடந்த 1983ம் ஆண்டு அமெரிக்கத் தூதரகம் மற்றும் 1984 இல் அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு கொடூர தாக்குதல் நடந்தது. இது அனைத்திற்கும் ஹிஸ்புல்லா அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டது. அன்றுமுதல் அமெரிக்கா, ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருத தொடங்கியது. அதன் காரணமாகவே, இஸ்ரேலுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தது அமெரிக்க வெள்ளை மாளிகை.
தொடர்ந்து, 1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் உள்ள யூத சமூக மையம் ஒன்றில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது குண்டுவெடிப்பு என அனைத்தும் ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2000ம் ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பிறகும், அது ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு முடிவிலா போரை நடத்தியது. இந்த மோதலின்போது ஹிஸ்புல்லா அமைப்பு சுமார் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் எல்லைக்குள் வீசி அச்சுறுத்தியது.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி எப்படி கிடைக்கிறது…?
ஈரானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு முக்கியமான ஆயுதங்கள், பயிற்சிகள் மற்றும் நிதியுதவிகளை ஈரான் வழங்குகிறது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அனுப்புகிறது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில்தான், ஈரானின் முழுமையான ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் காண

Israel Iran War News in Tamil Israel Iran War who will win america support Israel
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் மற்றும் ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றின் மத்தியில், இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 6 நாடுகள் அங்குள்ள தங்கள் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், இந்த இரு நாடுகளுக்கும் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறது. இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களில் ஈரான் 100 ட்ரோன்கள் மற்றும் 12 ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போதைய தாக்குதலுக்கு காரணம் என்ன..?
கடந்த 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், இரண்டு ஈரானிய தளபதிகள் உட்பட மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேலை பழிவாங்கும் முயற்சியாக நேற்று இரவு டிரோன் மற்றும் ஏவுகணைகள் அனுப்பியதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவை தலைவிட வேண்டாம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா:
ஈரான் இஸ்ரேலை நேரடியாக தாக்குதலை நடத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, சீனா, துருக்கி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் பேசி, ஈரானை தாக்க வேண்டாம் என்று வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மறுபுறம், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கேமரூனும், ஈரான் வெளியுறவு அமைச்சரை அழைத்து, சர்ச்சை மேற்கொண்டு எடுத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானுடன் எந்த நாடுகள் உள்ளன..?
ஈரானுடன் ஈராக், சிரியா, லெபனான், துருக்கி, கத்தார், ஜோர்டான் போன்ற நாடுகள் ஆதரவாக இருக்கும் என்பதால், ஈரான் இஸ்ரேலை தாக்கினால், மீண்டும் ஒரு பெரிய போர் மத்திய கிழக்கில் வெடித்து, முழு உலகமும் பாதிக்கப்படலாம். மேலும், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏற்கனவே அறிவித்திருப்பதால், குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.
ரஷ்யா ஏற்கனவே ஈரானின் இராணுவ கூட்டாளியாக இருந்து வருகிறது. உக்ரைன் போரின் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது. எனவே, ரஷ்யா தனது நாடுகளான சீனா மற்றும் வடகொரியாவை ஈரானுக்கு ஆதரவாக அணி திரட்டலாம். பாகிஸ்தான் ஈரானை எதிரி நாடாக கருதுவதால் இஸ்ரேலுக்கு துணை நிற்கலாம். அதே நேரத்தில் இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகிக்கும்.
மேலும், ஈரான் தனது பினாமி அமைப்புகளான ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரிய போராளி குழுக்களை பயன்படுத்தலாம். ஈரான் கடந்த காலங்களில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு உதவி செய்து அவர்களை பினாமி போர்களை நடத்த வைத்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் யார் கை ஓங்கும்..?
இஸ்ரேலில் பாதுகாப்பு பட்ஜெட் – 24.2 பில்லியன் டாலர்கள்
ஈரானின் பாதுகாப்பு பட்ஜெட் – 9.9 பில்லியன் டாலர்கள்
இஸ்ரேல்- 612 விமானங்கள்
ஈரான் – 551 விமானங்கள்
இஸ்ரேல் – 2200 டாங்கிகள்
ஈரான் – 4071 டாங்கிகள்
இஸ்ரேல் – 67 போர்க்கப்பல்கள்
ஈரான் – 101 போர்க்கப்பல்கள்
இஸ்ரேல் – 1.73 லட்ச பாதுகாப்பு வீரர்கள்
ஈரான் – 5.75 லட்ச பாதுகாப்பு வீரர்கள்
இஸ்ரேல் – 4.65 லட்சம் ரிசர்வ் ராணுவ வீரர்கள்
ஈரான் – 3.50 லட்சம் ரிசர்வ் ராணுவ வீரர்கள்மேலும் காண

Iran Israel Conflict: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. அமெரிக்காவையும் எச்சரித்த ஈரான்.. என்ன நடக்கிறது..?

இஸ்ரேல் நாட்டின் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா விலகியே இருக்க வேண்டும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நாளுக்குநாள் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று இரவு ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது அமெரிக்கா சில ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

The clearest video of the moments when Iranian missiles hit the targets

Iranian missiles successfully pass through the Iron Dome in Hebron pic.twitter.com/Dl07YVki12

— IRNA News Agency (@IrnaEnglish) April 13, 2024

இதற்கு ஒருநாள் முன்னதாக ஓமன் வளைகுடாவில் இருந்து ஹோர்மஸ் கணவாய் வழியாக இந்தியா வந்த சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் சிறை பிடித்தது. அந்த சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் 17 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் படையினர் சிறைபிடித்த கப்பலில் உள்ள 17 இந்திய மாலுமிகளை விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லி மற்றும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகங்கள் மூலம், இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் இந்தியா கொண்டு சென்றுள்ளது. விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு மீட்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இஸ்ரேலில் நேற்று இரவு திடீரென சைரன்கள் ஒலிக்க தொடங்கின. தொடர்ந்து, அடுத்தடுத்து வெடி சத்தங்கள் நிகழ்ந்துள்ளது. இதில், இதுவரை உயிர்ச்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஈரானில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரானின் ஆணவத்துக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளதாகவும், பல ஆண்டுகளாக ஈரானின் நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஸ்ரேலுடன் அமெரிக்கா நிற்பதையும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல நாடுகளின் ஆதரவையும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராக நாங்கள் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். கடவுளின் உதவியோடு நாம் ஒன்றுபட்டு நிற்போம். நம் எதிர்கள் அனைவரையும் வெல்வோம்.” என்று தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு:

தகவலின்படி, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து நிற்பதாக உறுதியளித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜெனரல் அமோஸ் யாட்லின், ஈரானிய ட்ரோன்கள் ஒவ்வொன்றும் 20 கிலோகிராம் (44 பவுண்டுகள்) வெடிபொருட்களுடன் ஆயுதம் ஏந்தியிருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் தாக்குதல் நடத்தியது ஏன்..?

கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஜெனரல் அதிகாரி உட்பட ஏழு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் குற்றம் சாட்டியது.

17 Indians among 25 crew on board container ship seized by Iran near Strait of Hormuz
பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்:
போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையிலும், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் ஒன்றை ஈரான் பாதுகாப்பு படை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கப்பலானது இத்தாலி – சுவிஸ் நாட்டை சேர்ந்த எம்எஸ்சி நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியர்கள் சென்ற கப்பலை பறிமுதல் செய்த ஈரான்:
அதுமட்டும் இன்றி, கப்பலில் சென்ற 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எம்எஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றபோது எம்எஸ்சி ஆரிஸ் கப்பலில் ஈரானிய அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி, பறிமுதல் செய்தனர்.
அந்த கப்பலில் 25 பணியாளர்கள் உள்ளனர். மேலும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், கப்பலைப் பாதுகாப்பாகத் திரும்பப் பெறவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முயற்சி எடுத்து வருகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை தவிர்த்து பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 4 பேர், பாகிஸ்தானியர் ஒருவர், ரஷிய நாட்டை சேர்ந்த ஒருவர், எஸ்டோனியா நாட்டை சேர்ந்த ஒருவரும் கப்பலில் பயணம் செய்துள்ளனர். இந்திய பணியாளர்களை விடுதலை செய்வதற்காக இந்திய அரசு, ஈரான் அரசை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Iranian Revolutionary Guard Corps have seized a Portuguese civilian cargo ship, belonging to an EU member, claiming Israeli ownership.The Ayatollah regime of @khamenei_ir is a criminal regime that supports Hamas’ crimes and is now conducting a pirate operation in violation…
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) April 13, 2024மேற்கத்திய நாடுகளுடன் உடனான மோதல் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை பறிமுதல் செய்வதையும் தாக்குதல் நடத்துவதையும் ஈரான் வாடிக்கையாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண

Australia terror attack: பெரும் பதற்றம் – ஆஸ்திரேலியாவின் சிட்னியில் திவிரவாதிகள் தாக்குதல்
Australia terror attack: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டது மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வணிக வளாகம் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோவில், தனிநபர் ஒருவர் தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், கட்டடத்திற்குள் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர். தகவலறிந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பலரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிலர் உயிருக்கு போராடி வருதாக கூறப்படுகிறது. இதனிடையே, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
#BREAKING: The Sydney Morning Herald is reporting that at least four people have been killed and many more are critically injured in a shooting, stabbing attack in Bondi Junction, Australia.Prayers for affected pic.twitter.com/sdJOIDpRkB
— Baba Banaras™ (@RealBababanaras) April 13, 2024
Stabbing attack in Sydney, Australia. Fears of multiple deaths. Several people still trapped inside the shopping centre. A witness reported seeing an injured baby. One suspect shot dead by police. https://t.co/aEm5Sukh1o
— Justiça (@grace4justice) April 13, 2024
@9NewsSyd Here is the attacker. #auspol #Australia#Sydney #bondiattack https://t.co/53jrAphM7Z
— BatFat (@MonkeyManZone) April 13, 2024
This is shocking. two dozen people stabbed at a Westfield Bondi Junction shopping centre in Sydney, Australia. Firing sound also being heard. Security personnel reached the incident sites. …this is still ongoingIs this a terrorist attack ? Prayers pic.twitter.com/qOhfElJHUv
— Politicspedia ( मोदी जी का परिवार ) (@Politicspedia23) April 13, 2024மேலும் காண

Iran Israel Clash: இந்தியர்களே உஷார்..! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியது ஈரான் ஆதரவு அமைப்பு

Iran Israel Clash: ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பான ஹெஸ்பொல்லா கத்யுஷா ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ள்து.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்:

ஈரான் ஆதரவு போராளிக்அள் அமைப்பான, ஹெஸ்புல்லா இஸ்ரேலிய பீரங்கி தளங்கள் மீது டஜன் கணக்கான கத்யுஷா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டஜன் கணக்கான கத்யுஷா ராக்கெட்டுகளுடன் எதிரிகளின் பீரங்கி நிலைகளை குறிவைத்தோம். தெற்கு கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. " என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விளக்கம்:

தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெபனான் பிரதேசத்திலிருந்து ஏறத்தாழ 40 ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் சில தடுத்து நிறுத்தப்பட்டன. காயம் ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக லெபனான் பிராந்தியதில் இருந்து வந்த ஹெஸ்புல்லா அமைப்பின் இரண்டு ஆளில்லா விமானங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தாக்குதல்கள்:

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ், தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியதில் இருந்து ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலிய ராணுவமும் அடிக்கடி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றன. இது காஸாவில் மோதலுக்கு வழிவகுத்தது. எல்லைக்கு அருகில் உள்ள பல கிராமங்களையும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. போரின் விளைவாக லெபனானில் குறைந்தது 363 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஹெஸ்பொல்லா போராளிகள் ஆவர். பொதுமக்கள் 70 பேரும் இதில் அடங்குவர். இஸ்ரேல் தரப்பில் 10 ராணுவ வீரர்கள் மற்றும் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை:

பதற்றமான சூழலை தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே எப்போது வேண்டுமானலும் போர் தொடங்கும் சூழல் நிலவுகிறது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அச்சுறுத்தியுள்ளது. அந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் இந்தியர்கள், தூரகங்களை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படைகளை அனுப்பும் அமெரிக்கா:

ஈரான் விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு படைகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தவும், அமெரிக்க படைகளுக்கு படை பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கிய பின்னர் தெஹ்ரானில் இருந்து "பழிவாங்கும்" வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் போடும் மெகா திட்டம்.. அலறும் உலக நாடுகள்!
Iran Attack: காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.
ஈரானை சீண்டும் இஸ்ரேல்:
குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில் 33,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் தொடக்கத்தில் கூறி வந்தது. இருந்தபோதிலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
உலக நாடுகள் மத்தியில் பதற்றம்:
இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு, இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், “இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான திட்டம் உச்சபட்ச தலைவர் முன் முன்மொழியப்பட்டது. தாக்குதலால் ஏற்படும் அரசியல் அபாயம் குறித்து அவர் ஆலோசித்து வருகிறார்” என்றார்.
மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அமைதி காக்கும்படி ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. மேற்காசியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படட்டுள்ளது. அமெரிக்காவும் பிரான்சும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இதேபோன் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது.
இதையும் படிக்க: மண்ணை கவ்வும் ரிஷி சுனக்.. திமிறி எழுந்த தொழிலாளர் கட்சி.. பிரிட்டன் கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஷாக்!மேலும் காண

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொந்தளிப்பான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள்:
பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
காசா போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையிலும், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. இதுகுறித்து ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறுகையில், “இஸ்ரேலுக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும். இது ஈரான் மண்ணின் மீதான தாக்குதலுக்கு சமம்” என்றார்.
பதற்றத்தை ஏற்படுத்தும் இஸ்ரேல் தாக்குதல்:
ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக பிராந்தியத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அமைதி காக்கும்படி ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் பிரான்சும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இதேபோன் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது. முன்னதாக, ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியாவில் ஈரான் நாட்டு தூதரக வளாகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்து கொள்கிறோம்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வன்முறைகள், உறுதியற்ற தன்மையைத் தூண்டும் செயல்களால் இந்தியா வருத்தமடைந்துள்ளது. சர்வதேச சட்டத்தின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரான செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தது.
மேலும் காண

Russian spacecraft almost obliterates Nasa satellite in 10 metre near miss
ரஷ்யா மற்றும் நாசா ஆகிய நாடுகளின் இரு செயற்கைக்கோள்கள் 10 மீட்டர் அருகருகே வந்த கடந்து சென்றது.
பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள்:
பூமியின் கண்காணிக்கவும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமியை தவிர இதர கோள்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு நாடுகளும், அதன் தேவைக்கேற்ப, அவ்வப்போது செயற்கைக்கோள்களை அனுப்புகின்றனர். இவ்வாறு விண்வெளியில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படும்தன்மை கொண்டது. இதையடுத்து, அங்கு குப்பைகளாக வலம் வருகின்றன. இந்நிலையில் பல வருடங்களாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது, விண்வெளியில் சுற்றி கொண்டு வருவதால், ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் சூழல் உள்ளது. மேலும், செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள் மீது மோதினால், பெரும் சேதத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புகள் :
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் இரு செயற்கைக்கோள்கள் அருகருகே வந்து சென்றது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மோதல் ஏற்பட்டிருந்தால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க செயற்கைக்கோளும் ரஷ்ய செயற்கைக்கோளும் ஒன்றோடொன்று 10மீ தொலைவு வரை அருகே சென்று கடந்து சென்றது. மோதல் நடந்தால் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், ஆயிரக்கணக்கான புல்லட் வேகமான குப்பைகள் பூமியைச் சுற்றி கொண்டிருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் நாசா முன்னாள் விண்வெளி வீரர் கர்னல் மில்ராய் தெரிவிக்கையில், பூமியின் வளிமண்டலத்தை கண்காணிக்கும் நாசாவின் Timed (Thermosphere Ionosphere Mesosphere Energetics and Dynamics) செயற்கைக்கோள் பூமியை சுற்றி கொண்டிருக்கிறது. “பாதை 10 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில், ரஷ்யாவின் செயற்கைக்கோள் இருந்தது என்பதை நாங்கள் அறிந்தோம்.
செயலிழந்த ரஷ்ய உளவு செயற்கைக்கோள் காஸ்மோஸ் கிட்டத்தட்ட நாசாவின் செயற்கைக்கோளை மோதும் அளவுக்கு வந்து கடந்து சென்றது. இரண்டு செயற்கைகோள்களும் மோதியிருந்தால், மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தார். இரண்டு செயற்கைக்கோள்கள் மோதியிருந்தால் ஆயிரக்கணக்கான துண்டுகள் சிதறி விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும். இதனால், பல விளைவுகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறினார்.
. இரண்டு செயற்கைக்கோள்களும் மோதியிருந்தால், விண்வெளியில் குப்பைகள் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 10,000 மைல் வேகத்தில் சிறிய துண்டுகள் சென்றிருக்கும்.
இந்த வேகத்தில் பயணிக்கும் துண்டுகளானது மற்றொரு விண்கலத்தில் துளையிட்டு இருக்கும். இது மனித உயிர்களை ஆபத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Also Read: Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம் – ரத்து செய்ய ரஷ்ய நீதிமன்றம் மறுப்ப
Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?

Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர் குழப்பம் அடைந்தனர்.

சமூக வலைதளங்களின் வளர்ச்சி:

வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டுடன் அந்த எண்ணிக்கை 5.85 பில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 143 நிமிடங்கள் வரை சமூக வலைதளத்தை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Russian court rejects Google’s appeal against 400 crore fine over Ukraine content | Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்
Google Russia: உக்ரைன் போர் தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதாக, 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்:
உக்ரைன் போர் பற்றிய போலித் தகவல் என்று ரஷ்யா கருதுவதை நீக்கத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபார் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் வழக்கு தொடர்ந்து. ஆனால், அபராதத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் தரப்பிலிருந்து, எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
உக்ரைன் – ரஷ்யா போர்:
உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரமடைந்தது. அததொடர்ந்து வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வெள்யிடும் தரவுகள், தகவல்கள், செய்திகள் மற்றும் சென்சார்ஷிப் ஆகியவற்றில் பெரும்பாலும் முரண்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டதாக, கூகுள் நிறுவனத்திற்கு டகான்ஸ்கை மாவட்ட நீதிமன்றம் அபராதம். ஆனால், எதிர்த்து மாஸ்கோ நகர நீதிமன்றத்தில் கூகுள் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட அபராதம், ரஷ்யாவில் கூகுளின் வருடாந்திர வருவாயின் ஒரு பங்காக கணக்கிடப்பட்டுள்ளதுது. முன்னதாக 2021 இன் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிளும், ஆகஸ்ட் 2022-இல் 21.1 பில்லியன் ரூபிளும் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் அதிரடி நடவடிக்கைகள்:
தீவிரவாத உள்ளடக்கத்தை அகற்ற கூகுள் தவறியதற்காகவும், LGBT தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து தவறான செய்திகளை வெளியிட்டதாகவும் அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்யா ஊடகங்கள் தெரிவித்தன. ஆல்பாபெட்டின் குழுமத்தின் யூடியூப் ரஷ்ய அரசின் கோபத்திற்கு ஒரு குறிப்பிட்ட இலக்காக உள்ளது. ஆனால் ட்விட்டர் மற்றும் மெட்டாவின் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை போன்று , கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யாவில் இதுவரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த சகோதரர் – கைது செய்து சிறையிலடைத்த போலீசார்
ரஷ்யா மட்டுமின்றி ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், கூகுள் ந்றுவனம் தொடர்ந்து வழக்குகளில் சிக்கி அபராதம் செலுத்தி வருகிறது. வ்திகளை மீறுதல், பயனாளர்களின் தரவுகள் கசிவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூகுள் நிறுவனம் மீது தொடர்கிறது.
மேலும் காண

குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்? கனடாவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன?
Canada Murder: இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் கனடாவும் அமெரிக்காவும் முதன்மையாக இருக்கிறது.
குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்?
ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு செல்பவர்கள், அந்நாட்டு கிரீன் கார்டை (நிரந்தர குடியுரிமை அட்டை) பெற்று கொண்டு, அந்நாட்டு குடிமக்களாக மாறுவதும் வழக்கமாகி வருகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடாவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக இந்தியர்களுக்கு எதிராகவும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
2024ஆம் ஆண்டில், அமெரிகாகவில் மட்டும் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை:
கட்டுமான நிறுவனத்தை சொந்தமாக கொண்டுள்ள பூட்டா சிங் கில் கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள கட்டுமான தளத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், “சீக்கிய கோயிலின் முக்கிய நிர்வாகியாக கில் உள்ளார். பஞ்சாபி சமூகத்துடன் வலுவான உறவுகளைக் கொண்டிருந்தார்” என்றார்.
சொகுசு வீடுகளை கட்டி தரும் கில் பில்ட் ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனம், பூட்டா சிங் கில்லுக்கு சொந்தமானதாகும். இதுகுறித்து காவல்துறை தரப்பு எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “பொது பாதுகாப்பு குறித்து உடனடி கவலைகள் எதுவும் இல்லை.
கவானாக் Blvd SW மற்றும் 30 அவென்யூ SW பகுதியைத் தவிர்க்குமாறு குடிமக்களைக் காவல்துறை கேட்டுக்கொள்கிறது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். கொலை விசாரணை அதிகாரிகள் இந்த விசாரணையை வழிநடத்துவார்கள். கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு பதிவில், “யார் மீதும் இன்னும் சந்தேகம் எழவில்லை” என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கில் குறித்து நகரின் முன்னாள் கவுன்சிலர் மொஹிந்தர் பங்கா கூறுகையில், “பல ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். கட்டுமான தளத்தில் தனது தொழிலாளர்களை பார்க்க செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
எந்த சூழ்நிலையிலும் உதவி தேவைப்படும் எவருக்கும் உதவ அவர் தயாராக இருப்பார். செயின்ட் ஆல்பர்ட் டிரெயிலில் உள்ள எங்கள் சீக்கியர் கோவிலில் அவர் முக்கிய நிர்வாகியாக இருந்தார்” என்றார்.
கவானாக் பகுதியில் மற்றொருவரும் கொல்லப்பட்டுள்ளார். பட்டப்பகலில் கொல்லப்பட்ட அவர் யார் என்று தெரியவில்லை.மேலும் காண

Crime: 14 வயது என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு.. சிக்கிய இளம்பெண்.. என்ன நடந்தது?

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை சிறுமி என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் வசிக்கும் அலிசா ஆன் ஜிங்கர் என்ற 23 வயது பெண் தான் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் பொருட்டு தனது வயது 14 என சொல்லி அறிமுகமாகியுள்ளார்.

முன்னதாக பள்ளி மாணவர் ஒருவருடன் தகாத உறவு பற்றிய உரையாடலில் ஈடுபட்டதை கொண்டு கடந்தாண்டு நவம்பர் மாதம் அலிசா தம்பா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதேசமயம் மாணவர் ஒருவருடன் 30க்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், பலருக்கும் ஆபாச வீடியோக்களை அனுப்பியதற்காகவும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அபராதத் தொகை செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அலிசாவின் குறிக்கோள் எல்லாம் வீட்டில் ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவர்களை நோக்கி இருந்துள்ளது. அவர்களிடம் சமூக வலைத்தள ஊடகங்களில் ஒன்றான ஸ்நாப்சாட் வழியே அறிமுகமாகி பின்னர் தனது வீடியோக்களை அனுப்பி கவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்படியான வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவர் தனது பாலியல் ஆசைக்காக அணுகியுள்ளார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அலிசாவை கைது செய்துள்ளனர். இவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்த பின், மேலும் 4 சிறுவர்கள் அவரால் பாதிக்கப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்க வந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அலிசாவின் வலையில் விழுந்த பள்ளி மாணவர்களின் வயது 12 முதல் 15 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 11 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலிசாவின் செயல் புளோரிடா மாகாண மக்களிடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயதில் மூத்தவர், தன்னை விட இளம் வயதினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட இச்சைகளுக்கு இரையாக அவர்களை நினைத்திருக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அலிசாவால் பாதிக்கப்பட்டிருக்கும் யாராக இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகாரளிக்கலாம். அவர்களுக்கு தம்பா காவல்துறை உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலிசா போன்ற நபர்களால் யாரேனும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தை பொறுத்தவரை அங்கு பாலியல் உறவுக்கான வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அலிசா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

UK Murder: பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை.. 200 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்த கணவன்..

UK Murder: ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் எந்தளவுக்கு நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த இளம்பெண் ஷ்ரத்தா கொலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் பிரிட்டனில் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பிரிட்டனை அதிரவிட்ட இளம்பெண் கொலை:

நிக்கோலஸ் மெட்சன் என்பவர் தனது மனைவி ஹோலி பிராம்லியை 200 துண்டுகளாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்திருந்தாலும் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹோலி பிராம்லியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதை சமையலறையில் யாருக்கும் தெரியாமல் ஒரு வாரம் மறைத்து வைத்துள்ளார். பின்னர், தனது நண்பரின் உதவியோடு வெட்டப்பட்ட உடல் பாகங்களை ஆற்றில் அப்புறப்படுத்தியுள்ளார்.

கொலை செய்துவிட்டு காவல்துறை அதிகாரிகளை ஒரு வருடமாக ஏமாற்றி வந்தது அம்பலமாகியுள்ளது. படுக்கையறையில் வைத்து அவரது மனைவியை பலமுறை கத்தியால் குத்தியதும் குளியலறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இளம்பெண்ணின் தாயார் பரபரப்பு வாக்குமூலம் :

பின்னர், அந்தத் துண்டுகளை பிளாஸ்டிக் பைகளில் போட்டு, பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். கொலை நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு தனது நண்பரின் உதவியோடு உடலை அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக, தனது நண்பருக்கு 50 யூரோக்களை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடைபயிற்சிக்கு செல்பவர் ஒருவர், விடம் ஆற்றில் பிளாஸ்டிக் பைகள் மிதப்பதை கண்டுள்ளார். ஒரு பையில் மனித கையும், மற்றொரு பையில் பிராம்லியின் வெட்டப்பட்ட தலையும் இருந்துள்ளது. ஆனால், 224 உடல் பாகங்கள் இன்னும் மாயமாகவே உள்ளது. மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உடல் வெட்டப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்,

நீதிமன்றத்தில் பிராம்லியின் தாயார் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். தனது மகளுக்கு திருமணமாகி 16 மாதங்களே ஆனதாகவும் அந்த கொடூரன் (கணவன் மெட்சன்) தன்னை சந்திக்க விடாமல் தனது மகளை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

செல்லப்பிராணிகளை துடிதுடிக்க கொலை செய்த கொடூரன்:

இருவரும் பிரியும் தருவாயில் இருந்ததாகவும் அந்த சமயத்தில்தான் தனது மகனை மெட்சன் கொலை செய்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். பிராம்லியின் செல்லப்பிராணியான எலியை மெட்சன் மிக்ஸியில் போட்டு துடிதுடிக்க கொன்றுள்ளார். பின்னர், அதை மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

அதுமட்டும் இன்றி, பிராம்லியின் நாய்க்குட்டிகளை வாஷிங் மெஷினில் போட்டு கொன்றுள்ளார். இதை அறிந்த பின், பிராம்லி தனது முயல்களுடன் வீட்டில் இருந்து தப்பி சென்று காவல்துறை உதவியை நாடியுள்ளார். இதை விசாரிக்க காவல்துறை அதிகாரிகள், மெட்சனின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, தனது மனைவிதான் தன்னை கொடுமைப்படுத்தியதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கணவரிடம் இருந்து தப்பிக்க பிராம்லி பல முறை முயற்சி செய்துள்ளார். இறுதியில்தான், கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. மனைவியை கொலை செய்ததற்காக மெட்சனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Alarm bells ring over H5N1 bird flu Experts warn of pandemic Worse then Covid
உலகளவில் பரவி வரும் ’h5n1’ பறவைக்காயச்சல் கொரோனா பெருந்தொற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் ’H5N1’ வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு புதிய தகவல்களை வெளிட்டு வருகின்றனர். அதன்படி, டெய்லி மெயில் (Daily Mail) வெளியிட்ட அறிக்கையின்படி, பறவைக்காய்ச்சலின் H5N1 ரக வைரஸ் கொரோனா வைரஸை விட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த்ம் என்று எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதும் வேகமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இதை ‘பெருந்தொற்று’ என்று அறிவிக்கும் அளவுக்கும் நிலமை மோசமாகலாம் என்பதாலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்டார்டிக் பகுதியில் ஏராளமான பென்குயின்கள், ஜார்ஜியா கடற்கரையில் ’black Skuna’ பறவைகள் இறந்து கிடந்தன. இவை ‘HPAI’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ’H5N1’ வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நோய் தொற்றின் தீவிரத்தை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பசு, பூனை ஆகியவைகளும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன தெரிய வந்துள்ளது. இதனால், நிபுணர்கள் இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் அதிக வேகமாக உருமாற்றம் அடையும் தன்மை கொண்டிருப்பதால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ’H5N1’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சராசரி 52% ஆக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா தொற்றால் உயிழந்தவர்களின் சராசரி இதைவிட குறைவாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளது.
2020-ல் இருந்து ’H5N1 பறவைக் காய்ச்சலால் 30 சதவீதம் நபர்கள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது.
பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
பயோநயாகரா மருந்து தயாரிப்புத் துறை ஆலோசகர் ஜான் ஃபுல்டன் தெரிவிக்கையில்,” இந்த பறவைக் காய்ச்சல் கொரோனா பெருந்தொற்றை விட 100 மடங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து. இதன் உருமாற்றம் தீவிர வேகத்தில் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுயன்சா (Bird flu or avian influenza) என்னும் தொற்றுநோய் முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது. பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவமாக ’H5N1’ உள்ளது.இந்த வைரஸ் பொதுவாக மனிதனிடமிருந்து மனித தொடர்பு மூலம் பரவாது என்றாலும், மனித காய்ச்சல் வைரஸ்கள் மற்றும் H5N1 (Human flu viruses and H5N1) ஆகியவை சக மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு புதிய வைரஸ் தொற்றை உருவாக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்:
காய்ச்சல் – மிக அதிகமாக இருக்கும்.
தசை வலி
கடுமையான முதுகு வலி (முதுகின் மேல் பகுதி)
தலைவலி
இருமல் மற்றும் மூச்சுத் திணறல்
வயிற்றுப்போக்கு
வயிற்று வலி
சளியில் ரத்தம் இருப்பது
மார்பில் வலி
மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தப்போக்கு
கண்களில் நீர் வடிதல்
தலைச்சுற்றல்அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
தொற்று அபாயத்தில் இருப்பவர்கள், இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் அல்லது சுவாசக் கோளாறுகள் இருந்தாலோ அருகில் உள்ள சுகாதார மையம் அல்லது மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு
இறந்த பறவைகள், நோய் பாதிப்பு உள்ள பறவைகள் ஆகியவற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவுவது நல்லது.
தன் சுத்தம் பேணுதல் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும்.உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் இந்த வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்துகள் இருப்பதாகவும் இன்னும் சில மருத்துவ நிறுவனங்கள் மருந்து தயாரிப்பதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் காண

Canada Accuses India Of Interfering In Its Elections External Affairs Ministry Response
Canada India: காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக கனட அரசாங்கம் மீது இந்தியா தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் நாட்டில் புகுந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனட அரசு பதில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
இந்திய கனட உறவில் மேலும் விரிசல்:
இப்படிப்பட்ட சூழலில், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு தெரிவித்தது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய – கனட உறவு சுமூகமாக இல்லாத நிலையில், நிஜ்ஜார் கொலை சம்பவம் இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை உண்டாக்கியது.
இச்சூழலில், இந்திய அரசு மீது கனடா மீண்டும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தான் மீதும் சரமாரி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. கனட நாட்டு தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாக கனடா தெரிவித்துள்ளது.
கனட தேர்தலில் இந்திய உளவுத்துறை தலையீடா?
கனட தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருந்ததாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டு தங்களுக்கு சாதகமான வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முயற்சித்ததாக கனட உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கனட பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனட தேர்தலை தங்களுக்கு சாதமாக மாற்ற இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டு சேர்ந்து வேலை பார்த்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு அல்லது காலிஸ்தான் இயக்கத்தின் மீது அனுதாபம் கொண்டதாக நம்பப்படும் இந்திய வம்சாவளியினர் வாழும் மாவட்டங்களை குறி வைத்து 2021 கனட தேர்தலில் இந்திய உளவுத்துறை வேலை செய்ததாக கூறப்படுகிறது.
தங்களுக்கு சாதகமாக வேட்பாளர்களுக்கு சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து தேர்தலை அவர்களை வெற்றி பெற வைக்க முயற்சி நடந்துள்ளது. அதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டு, கனட அரசியலில் பாகிஸ்தான் நலன் சார்ந்தவர்களை வெற்றி பெற வைக்க ரகசியமாக முயற்சி நடந்ததாக சொல்லப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனட அரசு தலையிடுவதாக பதில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. மற்ற நாட்டு தேர்தலில் தலையிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த பிப்ரவரி மாதமே விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் படிக்க: தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி – பகீர் ரிப்போர்ட்மேலும் காண

NASA Astronaut Loral O’Hara Returns to Earth from space station video | Video: விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய வீரர்கள்
ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையம்:
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமிக்கு அப்பால் சுமார் 360 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வரும் விண்கலமாகும். இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்று, பல நாட்கள் தங்கி ஆய்வு செய்வது வழக்கம். அங்கு சென்ற விண்வெளி வீரர்கள், வானியல் குறித்தான பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிப்பர்.
பூமியை வந்தடைந்த விண்வெளி வீரர்கள்:
ரஷியாவின் நோவிட்ஸ்கி மற்றும் பெலாரஷியன் மெரினா வாசிலெவ்ஸ்கயா ஆகியோர் சோயுஸ் விண்கலத்தில் கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றிருந்தனர். கடந்த செப்டம்பர் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்க விண்வெளி வீரர் லொரல் இருந்துள்ளார். இவர் சுமார் 200 நாட்கள் பூமியைச் சுற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு இன்று( ஏப்ரல் 06 ) திரும்பினர். இவர்கள் மூலம் விண்கலம் மூலமாக பாராசூட்டின் உதவியுடன் கஜகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கி விண்வெளியின் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தனர்.
இந்நிலையில் மூன்று நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பியதையடுத்து, அவர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் உடல்நிலை குறித்து பரிசோதனை நிகழ்த்தப்படும் என கூறப்படுகிறது
இவர்கள் மூவரும் தரையிறங்கும் காட்சியை ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனமும், அமெரிக்காவின் நாசா விண்கலமும் வெளியிட்டன.
With a safe landing at 3:17am ET (0717 UTC), a mission spanning 204 days in space, 3,264 orbits of the Earth, and 86.5 million miles comes to a close for NASA astronaut @LunarLoral. pic.twitter.com/SaUkEXRu8p
— NASA (@NASA) April 6, 2024மூன்று விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் (ஸ்பேஸ் கேப்ஸ்யூல்) இருந்து இழுக்கப்பட்டு கேமராக்களுக்காக புன்னகைக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
Watch live as a Soyuz spacecraft carrying @LunarLoral and her crewmates re-enters Earth’s atmosphere and parachutes to landing. Touchdown is expected at 3:17am ET (0717 UTC). https://t.co/nYiekDdVZb
— NASA (@NASA) April 6, 2024.
மேலும் காண

McDonald buys all Israeli franchise restaurants after boycott comes from Israel Palestine conflict | McDonald: உலகளவில் குவிந்த எதிர்ப்பு! இஸ்ரேலில் 225 உணவகங்களை சொந்தமாக்கிய மெக்டொனால்ட்ஸ்
McDonald buys all Israeli franchise: உலகளவில் மெக்டொனால்ட்சுக்கு எதிரான குரல் எழுந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள அனைத்து 225 ஃபிரான்ச்சைஸ் உணவகங்களை வாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
மெக்டொனால்ட்ஸ்:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவகமான மெக்டொனால்ட்ஸ், உலகளவில் மிகவும் பிரபலமான உணவகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், மெக்டொனாட்ஸுக்கு எதிராக உலக அளவில் பெரும் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள 225 ஃபிரான்ச்சைஸ் கடைகளை சொந்தமாக வாங்கும் முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 225 கடைகளில் பணிபுரியும் வேலையாட்களும் இனி மெக்டொனால்சின் ஊழியர்களாக செயல்பட உள்ளனர். எதற்காக மெக்டொனால்ட்சுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றும், இந்த தருணத்தில் இஸ்ரேலில் உள்ள கடைகளை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் பல்வேறு நாடுகளும் போரை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்த வந்த நிலையில், சில நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கும், சில நாடுகள் பாலஸ்தீனத்தை சேர்ந்தவருக்கும் ஆதரவாக குரல் எழுப்பின.
எதிர்ப்புக் குரல்:
இஸ்ரேலில் உள்ள மெக்டொனால்ட்ஸ் ஃபிரான்ச்சைஸ் உரிமத்தை அலோன்யால் என்ற நிறுவனம் வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ராணுவத்தினருக்கு இலவசமாக உணவுகளை வழங்கியது. இது பெரும் பேசும் பொருளானது. போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக மெக்டொனால்ட்ஸ் செயல்படுகிறது என விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.
குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்லாமிய நாடுகள், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் மெக்டொனால்ட்சுக்கு எதிராக குரல் கொடுத்தன. இதையடுத்து, மெக்டொனால்சுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு குரல் எழ ஆரம்பித்தது.
மெக்டொனால்டு ஒரு உலகளாவிய நிறுவனம். இந்நிறுவனமானது, உலகளவில் உள்ள பல்வேறு நாடுகளில் தனது நிறுவனங்களை ஃபிரான்ச்சைஸ் உரிமங்களை கொடுத்து செயல்பட அனுமதித்துள்ளன. ஃபிரான்ச்சைஸ் உரிமையாளர்கள் பெரும்பாலும் உள்நாட்டில், தன்னாட்சி முறையில் செயல்படுகிறார்கள்.
கடைகள் வாங்கல்:
இந்நிலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கூறுகையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக மத்திய கிழக்கின் நாடுகளிலும், இதர பல நாடுகளிலும் வணிகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனையடுத்து, இஸ்ரேலில் உள்ள நிறுவனத்திடம் உள்ள 225 ஃபிரான்ச்சைஸ் கடைகளை வாங்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக அதன் ஃபிரான்ச்சைஸ் நிறுவனம் செயல்பட்டதன் விளைவாக, மெக்டொனால்ட்ஸுக்கு எதிராக குரல்கள் எழுந்த வந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ஃபிரான்ச்சைஸ் கடைகளை நேரடியாக மெக்டொனால்ட்ஸ் கைப்பற்றியுள்ளது.
Also Read: Rich Person List: உலக பணக்காரர்கள் பட்டியல்; பெண்களில் யார் முதலிடம்; அம்பானி எந்த இடம்?
Crime In Cities: உலகின் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்கள் எது..? இந்தியாவில் இத்தனை நகரங்களா..? முழு விவரம்!

உலகில் அதிக குற்றங்கள் நடைபெறும் நகரங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் 20 இடங்களில் ஐந்து ஆப்பிரிக்க நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் 11 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும், குர்கான் 95வது இடத்தில் உள்ளது.

முதல் இடம் எந்த நகரத்திற்கு..?

numbeo.com இணையதளம் வெளியிட்ட பட்டியலின்படி, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கராகஸ் உலகிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களில் முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான பிரிட்டோரியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நகரங்களே அதிக இடங்களை பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜோகன்னஸ்பர்க் நான்காவது இடத்தில் உள்ளது. போர்ட் எலிசபெத் எட்டாவது இடத்தையும், கேப் டவுன் 18வது இடத்தையும் பிடித்தது.

துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் தென்னாப்பிரிக்க சமூகத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருவதாகவும், வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கிகள் எளிதாகக் கிடைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது

அறிக்கையின்படி, 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் சுமார் 7700 கொலைகள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலான கொலைகள் கோபம் மற்றும் தவறான புரிதலில் காரணமாக நடந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், 430 கொலைகள் கும்பல் தாக்குதலாலும், மீதமுள்ள 7340 கொலைகளில், 1116 கொலைகள் வாக்குவாதம், தவறான புரிதலில் காரணமாக நடத்துள்ளதாக தென்னாப்பிரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெக்கி செலே தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை அதிக குற்றங்கள் நடக்கும் பட்டியலில் தலைநகர் முதலிடத்தில் உள்ளது. numbeo.com இணையதளம் வெளியிட்ட தகவலின்படி அதிக குற்றங்கள் நடக்கும் 11 நகரங்களில் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும், குர்கான் 95வது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து, பெங்களூரு 102வது இடத்திலும், இந்தூர் 136வது இடத்திலும், கொல்கத்தா 159வது இடத்திலும், மும்பை 169வது இடத்திலும், ஹைதராபாத் 174வது இடத்திலும், சண்டிகர் 177வது இடத்திலும், புனே 184வது இடத்திலும் உள்ளன.

தேசிய குற்றப்பதிவுப் பணியகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் உள்ள ஒரு அரசாங்க அமைப்பாகும். இது கடந்த 2023ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தது.

தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 78.2 என்ற அங்கீகரிக்கப்பட்ட குற்ற விகிதத்துடன் (IPC) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள்

தரவரிசைகள்

நகரம்

ஐபிசி விகிதம்

1.

கொல்கத்தா

78.2

2.

சென்னை

178.5

3.

கோயம்புத்தூர்

211.2

4.

சூரத்

215.3

5.

புனே

219.3

6.

ஹைதராபாத்

266.7

7.

பெங்களூரு

337.3

8.

அகமதாபாத்

360.1

9.

மும்பை

376.3

10.

கோழிக்கோடு

397.5

மண்ணை கவ்வும் ரிஷி சுனக்.. திமிறி எழுந்த தொழிலாளர் கட்சி.. பிரிட்டன் கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஷாக்!

பிரிட்டனில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய உள்ளது.

பிரிட்டன் பொதுத் தேர்தல்:

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

ஆட்சியை பிடித்தாலும் பல சர்ச்சையில் சிக்கி மூன்று பிரதமர்களை மாற்றும் நிலைக்கு கன்சர்வேட்டிவ் கட்சி சென்றது. பாலியல் வழக்கில் சிக்கியவரை அரசாங்கத்தில் நியமித்தது, கொரோனா விதிகளை மீறியது என போரிஸ் ஜான்சனுக்கு எதிராக புகார் எழுந்த நிலையில், தனது பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

போரிஸை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக பதவியேற்ற 6 வாரங்களில் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் பல சவால்களை கடந்து அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை ஓடவிட்ட தொழிலாளர் கட்சி:

பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல் வெளியாகியுள்ளது.

யூகோவ் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மொத்தமுள்ள 650 இடங்களில் 403 இடங்களை கைப்பற்றி தொழிலாளர் கட்சி சாதனை படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 155 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில், கடந்த 27 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி சந்திக்க போகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டோனி பிளேயர் தலைமையிலான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி 165 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆட்சியை இழப்பதோடு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் இம்முறை தோல்வியை சந்திக்க உள்ளனர் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நிதியமைச்சர் ஜெரோம் ஹன்ட், அறிவியல்துறை அமைச்சர் மைக்கேல் டோனலன், வீட்டு வசதித்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் உள்ளிட்டோர் தோல்வியை சந்திக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கன்சர்வேட்டிவ் குழு தலைவராக பதவி வகித்து வரும் பென்னி மோர்டான்ட், முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் ஆகியோரும் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyber Attack: இஸ்ரேலில் சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பு .. மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை!

இஸ்ரேலில் சைபர் தாக்குதலில் இணையதள சேவைகள் பாதிக்கப்படக் கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலில் நடைபெற இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதலானது தொடங்கியது. இதற்கு பதிலடியாக காஸா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இதனிடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் அடிப்படையில் இவர்களில் சிலரை மீட்டுள்ளது. மீதமிருப்பவர்களை விரைவில் மீட்போம் என இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பூண்டுள்ளது தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களாக இருநாடுகளிடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இணையதள தாக்குதல் நடத்தப்பட கூடும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டின் அமைப்புகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெறலாம் என தேசிய இணையதள இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்

இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஜெருசேலம் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த தினம் கொண்டாடப்படும். இந்த தினத்தில் #OpJesusalam என்ற ஹேஸ்டேக் கீழ் அச்சுறுத்தலை ஏற்படுத்த அந்நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நாளில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக சைபர் தாக்குதலை நடத்த உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி இஸ்ரேலுக்கு எதிரான இணையதள தாக்குதலுக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது. மேலும் பொய்யான செய்திகள் பரவக்கூடும் என்பதால் மக்கள் கவனமுடன் செயல்படுமாறு இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Ghana Shocker 63 Year Old Priest Marries 12 Year Old Girl know more details here
குழந்தை திருமணத்திற்கு எதிராக பல உலக நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்றிய பிறகும், பல நாடுகளில் அந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. உலகில் 5இல் ஒரு சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.
தொடர்ந்து வரும் குழந்தை திருமணங்கள்:
இதை தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்த பிறகு கடந்த சில ஆண்டுகளாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு காரணிகளால் அது தடைப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் மோதல்கள், காலநிலை மாற்றம், கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை குழந்தை திருமணத்தை தடுத்து ஏற்படுத்திய முன்னேற்றத்தில் பின்னடைவை தந்துள்ளது.
இருப்பினும், 2030ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க ஐநா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுமியை வயதான ஆன்மீக தலைவர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் நுங்குவா பகுதியை சேர்ந்தவர் நுமோ போர்கெட்டி லாவே சுரு XXXIII.
சிறுமியை மணந்த 63 வயது ஆன்மீக தலைவர்:
நுமோ பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவராக உள்ளார். இவருக்கு வயது 63. அடையாளம் தெரியாத சிறுமி ஒருவரை இவர் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். கானாவில் சட்டப்பூர்வ திருமண வயது 18ஆகும். இதை மீறி இந்த திருமணம் நடந்துள்ளது.
திருமணம் நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்தின்போது, கணவருக்கு பிடித்தப்படி ஆடை அணியும்படி சில பெண்கள் அச்சிறுமியிடம் கூறுகின்றனர். அதுமட்டும் இன்றி, தாங்கள் பரிசாக கொடுத்த வாசனை திரவியங்களை கணவரை ஈர்க்கும் வகையில் பயன்படுத்தும்படி சிறுமிகளுக்கு சில பெண்கள் அறிவுரை வழங்கினர்.
இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருமணத்தை ரத்து செய்து ஆன்மீக தலைவரை விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், திருமணத்திற்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் சமூக தலைவரான போர்டே கோஃபி ஃபிராங்க்வா II, இதுகுறித்து குறிப்பிடுகையில், “மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் புரிந்து கொள்வதில்லை. இது எங்கள் பாரம்பரியம். பழக்க வழக்கம்” என்றார்.
இருப்பினும், கானா போலிசார் சிறுமியை அடையாளம் கண்டு, மீட்டுள்ளனர். அவர் இப்போது அவரது தாயுடன் காவல்துறை பாதுகாப்பில் உள்ளார். சர்ச்சைக்குரிய திருமணம் குறித்து கானா அரசு இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை.
மேலும் காண

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose
தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நிலநடுக்கம்:
இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன. பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே உள்ள நாடான ஜப்பான் நாட்டின் தெற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதி மக்களும், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையின் பகுதிகளில் 3 மீட்டர் வரை சுனாமி அலைகள் அடையும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது.
வைரலாகும் வீடியோ:
தைவான் நிலநடுக்கம் தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி முகமையில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மிகப்பெரிய கட்டடங்கள் இடிந்து உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும், கட்டிடங்கள் சரிந்து விழுந்து பல வாகனங்களையும் சேதமாக்கியுள்ளதை பார்க்க முடிகிறது.
#WATCH | A very shallow earthquake with a preliminary magnitude of 7.5 struck in the ocean near Taiwan. Japan has issued an evacuation advisory for the coastal areas of the southern prefecture of Okinawa after the earthquake triggered a tsunami warning. Tsunami waves of up to 3… pic.twitter.com/2Q1gd0lBaD
— ANI (@ANI) April 3, 2024மற்றொரு வீடியோவில், சிடிசி என்னும் செய்தி நிறுவனத்தில், செய்தியாளர் வாசித்து கொண்டிருக்கும்போதே, அங்கிருக்கும் தொலைக்காட்சிகள், மின் விளக்குகள் மிகப்பெரிய அசைவுக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது.
Video shows moments Taiwan hit by powerful earthquake#taiwan #earthquake #tsunamiSource: CTV News pic.twitter.com/92XpdXXOBE
— Pranjal Vyas (@pranjaIvyas) April 3, 2024
Now again 🚨 – TAIWAN – Earthquake Taiwan in the swimming pool #Taiwan #Earthquake #Tsunami #TaiwanEarthquake #China #ishigaki #Hualien #Japan #Terremoto #OKINAWA #landslide pic.twitter.com/WRbz145Lmq
— Sandeep Khasa (@SamKhasa_) April 3, 2024மற்றொரு வீடியோவில், நீச்சல் குளத்தில் ஒருவர் இருக்கும் வீடியோவில், நீரானது பல அடிக்கு எழுந்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தான தகவல் வெளியாகவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என ஏ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

Comet comes close to earth it visible in the skies know more details
வரும் ஜூன் மாதத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்கி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வால் நட்சத்திரம்:
வானியலின் அற்புத நிகழ்வாக அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் பல நிகழ்வுகள் நடக்கும். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் முன்பே கணித்து தெரிவிக்கின்றனர். அதில் சில நிகழ்வுகளை நாம் வெறும் கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கிறது. சிலவற்றை தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில், 12 பி பான்ஸ்-புரூக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட வால் நட்சத்திரமானது சுமார் 30 கி.மீ அளவிலான மைய பகுதியை கொண்டுள்ளது. இது 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.வால் நட்சத்திரமானது விண்வெளியில் உள்ள பனி, தூசு மற்றும் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இவை சூரியனுக்கு அருகிலோ, வளிமண்டலத்தில் வரும் போது வெப்பம் காரணமாக பனித்துகள் ஆவியாகிறது. அப்போது வெளிப்படும் வெப்ப ஒளியானது, நமக்கு ஒளி காட்சியாக தெரிகிறது.
12 பி பான்ஸ்-புரூக்ஸ் நட்சத்திரமானது, ஜூன் மாதத்தில் பூமிக்கு அருகே வர உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெறும் கண்களுக்கு தெரியுமா என்பது குறித்தான தகவல் இல்லை. ஆனால், சிறந்த தொலைநோக்கி இந்த அற்புத நிகழ்வை காணலாம்.
12 பி பான்ஸ்-புரூக்ஸ் நட்சத்திரமானது, வியாழன் குடும்ப நட்சத்திரம் என்றும் சிலர் கருதுகின்றனர். ஏனென்றால் வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால், இந்த நட்சத்திரம் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
வானில் தென்பட்ட நிகழ்வு:
இதற்கு முன்பு, இந்த வால் நட்சத்திரமானது, 1385 ஆம் சீனாவிலும், 1457 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்தும் பார்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த வால் நட்சத்திரமானது , தற்போது வரும் ஜூன் மாதத்தில் பூமிக்கு அருகே வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
A wide field look at the alignment of Comet 12P/Pons-Brooks with M33 and M31 galaxies near the horizon on March 27th, 2024 in #tucson #arizona #comet #photography #astrophotography pic.twitter.com/LpCKjfqcea
— Sean Parker (@seanparkerphoto) April 3, 2024பூமிக்கு அருகே நெருங்கி வரும்போது, இதை பூமியின் வட அரைக்கோளத்தில் இருந்து பார்ப்பது சாத்தியம் குறைவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களில் நட்சத்திரத்தை எங்கு இருந்து பார்க்கலாம் என்பது குறித்தான தகவலும் , வெறும் கண்ணால் பார்க்கலாமா என்பது குறித்தான தகவலும் விஞ்ஞானிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும்.
இதையடுத்து, இந்த வால் நட்சத்திரமானது வரும் 2095 ஆண்டுதான் தெரியவரும் கூறப்படுகிறது.
Also Read: Taiwan Earthquake: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய தைவான் நாடு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Strongest Earthquake In 25 Years Hits TaiwanTsunami Warning Issued
தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இயற்கை பேரிடர்களில் மிகவும் அபாயகரமானதாக நிலநடுக்கம் கருதப்படுகிறது. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகும்போது மேற்பரப்பு தட்டுகள் நகர்ந்து ஒன்றுடன் ஒன்று உராசுவதால் நிலநடுக்கமானது ஏற்படுகிறது. இது ஆழ்கடலில் நிகழும் போதும் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. கண நேரத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் நிலநடுக்கம் என்றாலே அனைவரும் பதற்றமடைந்து விடுகின்றனர்.
Massive Earthquake of 7.5 Magnitude Hit Taiwan. Here’s a Dashcam video of Earthquake#Taiwan #Tsunami pic.twitter.com/ctWHsx7H0L
— चाचा कामदेव (Parody) (@Chacha_Kamdevp) April 3, 2024இந்நிலையில் தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 35 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைவான் நாட்டின் பல பகுதிகளிலும் மின் இணைப்பானது துண்டிக்கப்பட்டது. கிழக்கு நகரமான ஹூவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிக்கு ஓடி வந்தனர். தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
#tsunami #Taiwan #Earthquake #Tsunami #TaiwanEarthquake #China #ishigaki #Hualien #JapanCCTV footage captures the scene on the Taipei Metro during the Taiwan earthquake. The passengers remains composed and brave, with no signs of panic. pic.twitter.com/05Qi4tEWtW
— Gillani Syed (@Syed_GiLLaniG) April 3, 2024நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரயில்கள் குலுங்கியபடி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சில இடங்களில் கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளது. இதில் எவ்வித சேதம் ஏற்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முழுவீச்சில் தைவான் நாட்டின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 25 ஆண்டுகளில் தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 1999 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுமார் 2,400 மக்கள் உயிரிழந்தனர். தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு 3 மீட்டர் உயரத்துக்கு கடலில் அலைகள் எழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண

Prime Minister Justin Trudeau has launched a national school meal program for school children in Canada
கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார்.
As a teacher, I know kids learn better on a full stomach. Our new National School Food Program will make sure kids aren’t going to school hungry – and will give every student a fair shot at doing their best in the classroom.
— Justin Trudeau (@JustinTrudeau) April 1, 2024இது தொடர்பான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டம் சேர்க்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் பட்ஜெட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் அமைச்சர் ஜென்னா சுட்ஸ் ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடோ இன்று டொராண்டோவில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இத்திட்டம் ஆண்டுக்கு 4,00,000 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வியானது கூட்டாட்சி அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றாலும், மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூட்டுசேர்வதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகள் பள்ளி மதிய உணவுகளுக்கு நிதியை ஒதுக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இத்தகைய திட்டத்தை தொடங்குவதாக உறுதியளித்தது.
We heard from parents, advocates, educators, and most importantly children.A National School Food Program will ensure kids across Canada can focus on learning, not being hungry. pic.twitter.com/ImAAfdi997
— Jenna Sudds (@JennaSudds) April 1, 2024இந்நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற்போதைய பள்ளி உணவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண

Pakistan Imran Khan and His Wife’s 14-Year Jail Term Suspended In Toshakhana Corruption Case | Imran Khan: இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan), அவரது மனைவி புஷ்ரா பீவி (Bushra Bibi) இருவருக்கும் விதிக்கப்பட்ட 14 ஆண்டு கால சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புஷ்ரா பீவி வழக்கு
இம்ரான் கான் – புஷ்ரா பீவி இருவரும் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். 2017-ம் ஆண்டில் கவார் பிரீத்தும் புஷ்ரா பீவியும் விவாகரத்து பெற்றனர். இஸ்லாம் திருமண விதிகளின்படி கணவரை இழந்த அல்லது விவாகரத்து செய்த பெண் உடனடியாக மறுமணம் செய்யக்கூடாது என்றிருக்கிறது. ( சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்கான காலம் ) ஆனால், புஷ்ரா இந்த காலம் நிறைவதற்கு முன்பே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக புஷ்ராவின் முன்னாள் கணவர் கவார் பிரீத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராயல்பிண்டி நீதிமன்றம் முஸ்லீன் திருமணம் விதிகளை மீறியதற்காக இம்ரான் கான், அவரது மணைவி புஷ்ரா பீவிக்கு இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைப்பு
திருமண விதிமுறைகளை மீறிய வழக்கின் விசாரணையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (Islamabad High Court (IHC) ) தலைமை நீதிபதி ஆமர் ஃபரூக் (Aamer Farooq) இருவரின் 14- ஆண்டுகால தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெருநாள் பண்டிகை விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதன் பிறகே, 14- ஆண்டுகால தண்டனை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபது தெரிவித்திருக்கிறார்.
தோஷாகானா வழக்கு
இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். பிறகு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.
நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு, கடும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.
இம்ரான் பதவிகாலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில் விற்றது, அரசின் முக்கிய ஆவணங்களை கசிய விட்டது, அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு உள்ளிட்டவைகளுக்காக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. .இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு நிரூபணம் ஆகியுள்ளது. ஊழல் குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கு முன்பு, இம்ரான் கான் மீதான வழக்கில் தீர்வு வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு, ஐந்தாண்டு காலம் அரசியலில் ஈடுபடுவதற்கும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
இந்நிலையில், இஸ்லாம் திருமணம் விதிகள் மீறப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அவர் சிறையிலிருந்து வெளி வரமுடியாது. அவர்மீது சுமார் 200 வழக்குகள் இருப்பதாலும் மூன்று வழக்குகளில் அவருக்கு 31 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Canada PM Justin Trudeau announces free contraceptives for Women know more details here | Free Contraceptives: அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள் இலவசம்
Free Contraceptives: விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்று கொள்ளவும், கர்ப்பத்தின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் குடும்ப கட்டுப்பாடு உதவுகிறது. இதில், கருத்தடை முறைகள் பெரும் பங்காற்றுகிறது. கருத்தடை தொடர்பான தகவல்கள், சேவைகளை பெறுவது ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை மனித உரிமை ஆகும்.
கருத்தடையின் நன்மைகள்:
திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பது மகப்பேறு தொடர்பான உடல்நலக்குறைவு மற்றும் கர்ப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. இளம் வயதில் குழந்தைகளை பெற்று கொள்வதால் பல பெண்கள் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.
இவர்களை தவிர, முதுமையான பருவத்தில் குழந்தையை பெற்று கொள்வதாலும் நிறைய சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. இம்மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்க குடும்ப கட்டுப்பாடு பேருதவியாக இருக்கிறது. திட்டமிடப்படாத கர்ப்பத்தின் விகிதங்களைக் குறைப்பதன் மூலம், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை குறைக்கலாம். தாய்மார்களிடமிருந்து பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பரவுவதையும் இது குறைக்கிறது.
பெண்களின் கல்விக்கு பயன் அளிப்பதோடு, ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு உள்பட சமூகத்தில் பெண்கள் முழுமையாக பங்கேற்கும் வாய்ப்புகளையும் இது உருவாக்குகிறது. பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கனடா அதிரடி அறிவிப்பு:
இந்த நிலையில், கனடா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைச் செலவில்லாமல் தேர்வு செய்ய சுதந்திரம் இருக்க வேண்டும். எனவே, கருத்தடை மருந்துகளை இலவசமாக வழங்க உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து டொராண்டோ நகரில் பேசிய கனட நாட்டு துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், “9 மில்லியன் இனப்பெருக்க வயதுடைய கனட பெண்களுக்கு IUD (கருத்தடை சாதனம்), கருத்தடை மாத்திரை போன்ற கர்ப்பத்தைத் தவிர்க்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்தும்” என்றார்.
Women should be free to choose the contraceptives they need without cost getting in the way. So, we’re making contraceptives free.
— Justin Trudeau (@JustinTrudeau) March 30, 2024கனடா அரசின் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில், அந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார திட்டமாக இலவச கருத்தடை உபகரணங்கள் திட்டம் அமையும். ஜப்பான், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளை காட்டிலும் கனடாவில் மருந்துகளுக்காக தனிநபர் அதிகமாக செலவிடுகின்றனர். இந்த திட்டத்திற்கு கனடா மாகாணங்களின் ஒப்புதல் தேவை. ஏன் என்றால், பொது சுகாதாரம் என்பது மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் காண

Billgates meets pm modi in delhi tutucorin pearls and some gifts and discuss ai and climatic condition | Billgates Modi: ”தூத்துக்குடி முத்துகள்” பில்கேட்ஸுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மோடி
Billgates Meets Modi: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளருமானவர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.
பில்கேட்ஸுக்கு பரிசளித்த மோடி:
இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது, காலநிலை மாற்றம் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து, பிரதமர் இல்லத்திற்கு வந்த பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.
அதன்படி, தூத்துக்குடி முத்துகள், களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாடு குதிரை பொம்மைகள், காஷ்மீர் சால்வை, குங்குமப்பூ, டார்ஜிலிங் தேநீர், நீலகிரி தேநீரை பரிசாக பில்கேட்ஸுக்கு வழங்கினார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ஊட்டச்சத்து குறித்த புத்தகங்களை வழங்கினார் பில்கேட்ஸ்.
’போஷன் உத்சவ்’ என்ற புத்தகத்தை கடந்த பிப்ரவரி மாதம் பில்கேட்ஸ் வெளியிட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு இன்று பரிசாக வழங்கினார். இவற்றையெல்லாம் பெற்றுக் கொண்ட இருவரும், ஒருவரைக்கொருவருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
சந்திப்பில் என்ன நடந்தது?
இருவருக்கும் இடையே நடந்த இந்த சந்திப்பு குறித்த வீடியோவும் பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்து வரும் டிஜிட்டல் புரட்சி குறித்தும் இருவரும் விவாதித்து உள்ளனர். இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சி குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைப் பாராட்டிய பில்கேட்ஸ், தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், அது உண்மையில் முன்னிலையில் இருப்பதாக கூறினார். பின்னர், இருவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து விவாதித்தனர். ஜி20 உச்சி மாநாட்டின்போது ஏஐ எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை பிரதமர் மோடி, பில்கேட்ஸிடம் விளக்கினார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்:
காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்போது, ஏஐ பயன்படுத்தி தனது இந்தி பேச்சை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்று கூறினார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் சவால்களையும், நன்மைகளையும் எடுத்துரைத்தார். அதன்படி, “இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் பயிற்சி இல்லாத, திறமையற்றவரிகளின் கையில் செல்லும்போது தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக என்னுடைய குரலே தவறான முறையில் பயன்படுத்தப்படலாம்.
இந்த டீப் பேக் வீடியோ அல்லது ஆடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டால் தான் புரிகிறது. இல்லையென்றால் மக்கள் அதனை நம்புகின்றனர். எனவே, ஏஐ தொழில்நுட்பம் மூலம் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை வரையறுக்க வேண்டும்” என்றார் மோடி.
இதற்கு பதிலளித்த பில்கேட்ஸ், “ஏஐ தொழில்நுட்பம் தற்பாது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் நன்மைகளும், தீமைகளும் உள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கக்கூடியது. ஆனால், அதில் பல சவால்களும் உள்ளன” என்றார்.மேலும் காண

Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து
Easter pilgrims: தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
45 பேர் பலியான சோகம்:
மாமட்லகலா அருகே உள்ள பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புகளின் மீது மோதி பாலத்தின் மீது இருந்து கவிழ்ந்து கீழே இருந்த பள்ளத்தில் சரிந்தது. தொடர்ந்து, தரையில் மோதிய வேகத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 165 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிருஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்:
முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. தென்னாப்ரிக்கா நாட்டின் மிகப்பெரிய சர்ச்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் சர்ச்சின் தலைமையகமான மோரியாவிற்கு, அவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. தென்னாப்பிரிக்கர்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாட்கள் வார இறுதிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த சோகம் ஏற்பட்டது.
https://t.co/vcCx2WqwN78-Year-Old Survives Bus Plunge Off Bridge That Left 45 People Dead.The bus, which was carrying people from Botswana to an Easter weekend pilgrimage in South Africa, fell 165 feet into a ravine.
— SNN (@STONENNEWS) March 29, 2024மீட்பு பணிகள் தீவிரம்:
விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, விபத்திற்கு தென்னாப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொடரும் விபத்துகள்:
உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகிலேயே அதிக சாலை இறப்பு விகிதங்களில் ஆப்பிரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது.
2022ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 12 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட சாலை இறப்புகள் நிகழ்ந்துள்ளன. தென்னாப்பிரிக்காவின் ஆட்டோமொபைல் அசோசியேஷன் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் போக்குவரத்து இறப்புகளை “தேசிய நெருக்கடி” என்று குறிப்பிட்டுள்ளது. சாலை பாதுகாப்பில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும், போக்குவரத்து சட்டங்களை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தி வருகிறது. மேலும், “இந்த இரண்டு பிரச்சனைகளும் தீர்க்கப்படாவிட்டால், நமது நாட்டின் மோசமான சாலை பாதுகாப்பு நிலைமை ஒருபோதும் மேம்படாது” என்று தென்னாப்பிரிக்காவின் ஆட்டோமொபைல் அசோசியேஷன் எச்சரித்துள்ளது.மேலும் காண

"உள்விவகாரங்களை நீங்க மதிக்கணும்" கெஜ்ரிவால் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச பிரச்னையாக மாறிய கெஜ்ரிவால் விவகாரம்:

கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த இரண்டு கைதுகளும் தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் கெஜ்ரிவால் கைதை கண்டித்துள்ளனர். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்:

கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த வழக்கிலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஜெர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "கெஜ்ரிவால் கைதை கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான, காலதாமதம் இல்லாத வகையில் வழக்கு நடத்தப்படும் என்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தற்காலிக தலைமை துணை தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதை தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களுக்கு அரசுகள் மரியாதை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சக ஜனநாயக நாடுகளின் விவகாரத்தில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் அது ஆரோக்கியமற்ற முன்னுதாரணங்களுக்கு வழிவகுக்கும். இந்தியாவின் சட்ட நடைமுறைகள், சுதந்திரமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை. எந்த வித பாரபட்சமும் இன்றி, சரியான நேரத்தில் முடிவுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அதை விமர்சிப்பது தேவையற்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baltimore Bridge Collapse 6 Missing Workers Presumed Dead As Rescue Operations Suspended in tamil
Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் நடந்த பால விபத்தில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்:
பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில், செவ்வாய்க்கிழமையன்று அந்த பாலம் இடிந்து விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய 8 பேரில் 2 பேர் மீட்கப்படுள்ளனர். மற்ற ஆறு தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் அவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
6 பேரும் பலியா?
தண்ணீரின் குளிர்ச்சியான சூழல் மற்றும் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான கடந்த கால நிகழ்வுகளின் அனுபவங்கள் அடிப்படையில், காணாமல் போன 6 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் மேரிலாந்து மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டபோது, பாலத்தின் சாலை மேற்பரப்பில் உள்ள பள்ளங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து பாலத்தின் மீது மோதுவதற்கு முன்பேமின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் பெரும்பாலும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
அதிபர் ஜோ பிடன் விரைவில் பால்டிமோர் நகருக்கு நேரில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் 1977 இல் திறக்கப்பட்டது மற்றும் உலகின் மிக நீளமான டிரஸ் பாலங்களில் ஒன்றாகும். இது அமெரிக்க தேசிய கீதத்தின் ஆசிரியரான “The Star-Spangled Banner” பெயரை கொண்டுள்ளது
பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவதன் மூலமும், சரக்கு மற்றும் பயணிகள் வழித்தடங்களை அடைப்பதன் மூலமும், பல மாதங்கள் சரக்கு பரிமாற்றங்கள் பாதிப்படையும் என கூறப்படுகிறது.
#WATCH | Drone visuals of the vessel and the Francis Scott Key Bridge in Baltimore. A 948-foot container ship smashed into a four-lane bridge in the U.S. port of Baltimore, causing it to collapse.(Source: NTSB) pic.twitter.com/WMuw2bR3uC
— ANI (@ANI) March 27, 2024பால்டிமோர் பால விபத்து:
சிங்கப்பூர் கொடியுடன் இலங்கைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், படாப்ஸ்கோ ஆற்றின் முகப்பில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது மோதியது. 1.6-மைல் (2.57-கிலோமீட்டர்) பாலத்தின் ஒரு பகுதி உடனடியாக நீரில் சரிந்து. இதனால், பாலத்தின் மீது இருந்த வாகனங்களும், மக்களும் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தனர். கப்பலில் ஏற்பட்ட மின்சார தடை காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்த படகு, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. நீர்வழி போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான உலக சங்கத்தின் 2018 அறிக்கையின்படி, 1960 மற்றும் 2015 க்கு இடையில் உலகளவில் 35 பெரிய பாலம் இடிந்து விழுந்ததில் கப்பல் அல்லது படகுகள் மோதியதன் விளைவாக மொத்தம் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காண

Donald Trump is one of world 500 richest people His net worth 6 point 5 billion dollar
Donald Trump: நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்:
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்புக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபார் டிரம்ப் மீது நிதி மோசடி வழக்குகள் உள்ளது. தொழில் அதிபரான டிரம்ப் வங்கி, நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக தனது சொத்து மதிப்புகளை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.
இத்ந வழக்கில் 500 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று நியூயார்க் நீதிமன்றம் டிரம்புக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தபோது 175 மில்லியன் டாலர் செலுத்தினால் போதும் என்று நீதிமன்றம் உறுதிவிட்டது.
சொத்து மதிப்பு எவ்வளவு?
இப்படியான சூழல்களில் டொனால்டு டிரம்ப்பின் சொத்து மதிப்பு குறையும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால், நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, டொனால்டு டிரம்பின் நிகர மதிப்பு நேற்றைய வர்த்தகத்தின் நிறைவில் 4 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில், 6.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதன்முதலாக உலகின் பணக்கார பட்டியல்களில் 500 நபர்களின் வரிசையில் இணைந்துள்ளார் டிரம்ப்.
உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:
பெர்னார்ட் அர்னால்ட் (235 பில்லியன் டாலர்)
ஜெஃப் பெசோஸ் (192 பில்லியன் டாலர்)
எலான் மஸ்க் (1888 பில்லியன் டாலர்)
மார்க் ஜுக்கர்பெர்க் (169 பில்லியன் டாலர்)
லாரி எலிசன் (154 பில்லியன்டாலர்)
வாரன் பஃபெட்(154 பில்லியன் டாலர்)
பில் கேட்ஸ் (129 பில்லியன் டாலர்)
ஸ்டீவ் பால்மர்(123 பில்லியன்டாலர்)
லாரி பைஜ் (118 பில்லியன்டாலர்)
முகேஷ் அம்பானி (113.9 பில்லியன் டாலர்)மேலும், 11 ஆம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி தற்போது 113 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 10ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 15ஆம் இடத்திலும் உள்ளனர். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Baltimore Bridge Collapse: கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..மேலும் காண

Baltimore Bridge Collapse: கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் ஆற்றில் விழுந்தனர். பாலம் இடிந்த நிலையில் ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியது. ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

🚨🇺🇸BREAKING: BALTIMORE BRIDGE COLLAPSE – POSSIBLE MASS CASUALTY EVENT

A large container ship struck the Francis Scott Key Bridge in Baltimore, causing significant parts of it to collapse.

Emergency services are searching for multiple cars and people who may have fallen into… pic.twitter.com/WujjcEOMc7

— Mario Nawfal (@MarioNawfal) March 26, 2024

இந்த விபத்தை தொடர்ந்து பாலத்தின் இரு முனைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று அதிகாலை 1.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு படையினர் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் எதிர்ப்பாராத விதமாக நடந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The Francis Scott Key Bridge in Baltimore, Maryland which crosses the Patapsco River has reportedly Collapsed within the last few minutes after being Struck by a Large Container Ship; a Mass Casualty Incident has been Declared with over a Dozen Cars and many Individuals said to… pic.twitter.com/SsPMU8Mjph

— OSINTdefender (@sentdefender) March 26, 2024

UN resolution cease fire Passage of Gaza struggling US Israeli relationship.
காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, 14 நாடுகள் ஆதரவும் மற்றும் அமெரிக்காவின் முடிவை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்த தீர்மானம்:
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 107 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாவும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வருவது மற்றும் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பது உள்ளிட்ட அம்சங்கள் முக்கியமானவையாகும்.
UN Security Council passes resolution demanding immediate Gaza ceasefireRead @ANI Story | https://t.co/e96qZWKz5i#Gaza #Israel #Hamas #Palestine #UNSC pic.twitter.com/aTbU7R5RdY
— ANI Digital (@ani_digital) March 25, 2024அமெரிக்கா புறக்கணிப்பு:
இதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது, அமெரிக்கா தனது எதேச்சதிகாரத்தை ( வீட்டோ அதிகாரம்) பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலியர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என கூறி, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், நேற்று ( திங்கட்கிழமை ) ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 14 ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா ஆதரவாகவும் வாக்களிக்கவில்லை எதிராகவும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் காசாவில் உடனடியாக தீர்மானம் நிறுத்த வேண்டும். மேலும், பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐ. நா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
நட்பு உடைகிறதா?
இந்நிலையில், அமெரிக்காவுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால், எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் தீர்மானம் நிறைவேறி இருக்காது. இஸ்ரேல் நட்பு நாடாக இருந்த அமெரிக்காவின் இந்த முடிவு இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே விரிசல் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால், அமெரிக்காவுக்கு வருகை தர நினைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பயணத்தை ரத்து செய்தார். இதையடுத்து மிகவும் நெருங்கிய நட்பு கொண்ட நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன.

Princess Kate: இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! வைரலான வீடியோவில் உண்மை இல்லையா? அப்போ டீப் பேக்கா?

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்னாது அது ஏஐ வீடியோவா?

அதிலும், சமீப காலமாக டீப் பேக் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் இந்த பிரச்சினை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இதனை டீப் பேக் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தனக்கு புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்த வீடியோவில் நீல சட்டை அணிந்து, பார்க்கில் அமர்ந்தபடி இளவரசி கேத் மிடில்டன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் டீப் பேக் வீடியோ என்று கூறுகின்றனர்.

இந்த வீடியோவில் எந்த ஒரு அசைவும் இல்லை எனவும், இளவரசி கேத் மிடில்டனும் தலை, கை அசைவு எதுவுமின்றி பேசியுள்ளதாகவும் நெட்டிசன்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். எனவே, இது டீப் பேக் வீடியோவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.

என்னாச்சு இங்கிலாந்து இளவரசிக்கு?

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன்.

எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்தோம். புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்த போது எனக்கும் வில்லியம்ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜனவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நலம் மீண்டு வர நீண்ட காலம் ஆனது.

அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற முடியவில்லை. தற்போது சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் எங்கள் குழந்தைகளிடம் இப்பிரச்சினையை புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் தற்போது நலமாக இருக்கிறேன். நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் உடலளவிலும், மனதளவிலும் வலுப்பெற்று வருகிறேன்” என கேத் மிடில்டன் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது டீப் பேக் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கூறிவருகின்றனர்.

India extends ban on onion exports indefinitely ahead of lok sabha 2024
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை காலவரையின்றி இந்திய அரசு நீட்டித்துள்ளது
ஏற்றுமதிக்கு தடை
இந்திய நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வெங்காயம் மீதான அதன் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாட்டை காலவரையின்றி இந்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இது வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், சில சமயங்களில் விலை குறையவும், சில வெளிநாட்டு சந்தைகளில் விலையை அதிகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளர்களில் ஒரு நாடாக இந்தியா உள்ளது. வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், இந்திய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் 31 வரை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதையடுத்து, மார்ச் 31 ஆம் தேதியுடன் விதிக்கப்பட்ட தடை காலாவதியாக இருந்தது.இந்நிலையில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர் விலை பாதியாக குறைந்தது. மேலும், இந்த சீசனில் வெங்காயம் விளைச்சலும் உள்ளதால், இந்தத் தடை நீக்கப்படும் என்று வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையானது, மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்று இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
விவசாயிகள் கவலை:
இதனால் புதிய பருவப் பயிரிலிருந்து அதிகரித்து வரும் விளைச்சலால், பொருட்களின் விலை வீழ்ச்சி மேலும் ஏற்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சூழலில், ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு ஆச்சரியமளிக்கிறது மற்றும் முற்றிலும் தேவையற்றது” ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.அதிக அளவு வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் உள்ள மொத்த சந்தைகளில், டிசம்பர் மாதத்தில் 100 கிலோவுக்கு வெங்காயத்தின் விலை 4,500 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாக குறைந்துள்ளது. மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்றுமதிக்கு தடை நீக்கினால் வெங்காய ஏற்றுமதி அதிகாமகும். இதன் விளைவாக விலை அதிகரிக்கும். இது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் விலை உயர்ந்தால் அரசுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழும் என்று ஆளும் அரசு நினைப்பதால் தடையை நீக்கவில்லை என்று கருத்துகள் எழுந்து வருகிறது. மேலும், தடை நீட்டிப்பால் இந்திய விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தாக்கம்:
பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில், ஏற்றுமதிக்கான தடை நீட்டிப்பால் இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளில் விலைவாசி ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது .மேலும் காண

lunar eclipse March 24th 2024 where it visible and not visible
நிலவின் மூலமாக வானியலில் மிகவும் அற்புத நிகழ்வாக பார்க்கப்படும் சந்திர கிரகணம் நாளை ஏற்படவுள்ளது.
சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னர் சந்திரன் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்
சூரிய குடும்பம்:நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் உள்ளன. பூமி உள்ளிட்ட 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு கோளும், சூரியனை சுற்றி வரும் போது, பூமிக்கு அருகில் வரும்போது, அதை தொலைநோக்கியின் வழியாக காணலாம். நமது பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய் மற்றும் வெள்ளி கோளை சில நேரங்களில் வெறும் கண்களால் கூட பார்க்க இயலும். ஆகையால் , வானியல் நிகழ்வை, நமக்கு பார்க்கவே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும் உண்டாகும்.
பூமிக்கு ஒரு துணைக்கோள் உள்ளது. அதுதான், இரவில் குளிர்ச்சியான ஒளியை தரும் நிலவு. நிலவானது சந்திரன், திங்கள் உள்ளிட்ட பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. பூமி, சூரியனை சுற்றி வருவது போல நிலவானது பூமியை சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
சந்திரன்:
இந்நிலையில் சந்திரனின் பல நிகழ்வுகள் பூமியில் பெரும் பல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமாவாசை, பௌர்ணமி, ஓதங்கள், கடலலைகள் அதிகரிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றின் அமைவுகளால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல் பூமி மறைத்துக் கொள்கிறது. அதனால் நிலவின் மீது சூரிய ஒளி படுவதில்லை. இதனால் நிலவு நமக்கு தெரிவதில்லை, இந்த நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். கிரகணம் என்றால் இருள் அல்லது மறைந்துள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கிரகணம்:எப்போது?; எங்கு?படம்: சந்திர கிரகணம் தோன்றும் படிநிலை:
இந்நிலையில் நாளை சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் நிகழ்வு ஏற்படுகிறது. நிலவின் மீது படும் ஒளியை பூமியானது மறைப்பதால், நாளை சில மணி நேரங்களுக்கு நிலவின் ஒளி பூமியில் தெரியாது.
சரி, இந்த நிகழ்வை யாரெல்லாம் காணலாம் தெரியுமா?. இந்த நிகழ்வானது நாளை காலை 10.24 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நிகழும் என ஸ்பேஸ் டாட் காம் என்னும் வலைதளம் தெரிவித்துள்ளது.
ஆகையால், இந்த நிகழ்வு, இந்திய நேரப்படி பகலில் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. ஏனென்றால், பகலில் நிலவின் ஒளியை விட சூரிய ஒளி தாக்கம் அதிகம் இருப்பதால் நிலவு நமக்கு தெரிவதில்லை. ஆனால், இந்த தருணங்களில் இரவு பொழுது உள்ள நாடுகளில் சந்திர கிரகணத்தை காணலாம். வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள மக்கள் இதை கண்டு ரசிக்கலாம். ஆகையால், நேரடியாக காண இயலாதவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்தால், புகைப்படங்களை அனுப்ப சொல்லி பார்த்து மகிழுங்கள் அல்லது ஏபிபி நாடு தளத்தின் மூலமாகவும் கண்டு ரசிக்கலாம்.
இனி, அடுத்த சந்திர கிரகணம் எப்பொழுது என்பது குறித்து நாசா விண்வெளி நிலையம் தெரிவிக்கையில்,” இந்த வருடம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நிகழும் என தெரிவித்துள்ளது.
ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு:மார்ச் 21 அன்று ( வெள்ளிக்கிழமை ) மாஸ்கோவின் வடக்கு புறநகர்ப் பகுதியான க்ராஸ்னோகோர்ஸ்கில் உள்ள குரோகஸ் சிட்டியில் உள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை கோர்சான் மாகாணத்தைச் சேர்ந்த ஐஎஸ்எஸ் பயங்கிர்வாத அமைப்பு நடத்தியதாக பொறுப்பு ஏற்றுள்ளது. ஆனால், ரஷ்ய அரசு தெரிவிக்கையில் இத்தாக்குதலை நடத்தியவர்கள் உக்ரைனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா- யுக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில், அவர்கள் அண்டை நாட்டிற்குச் சென்று வருவதாகவும் கூறியுள்ளது.
இதற்கிடையில், இத்தாக்குதலை நடத்தியதாக ISIS-K அமைப்பு கூறியது நம்பகமானது என்றும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டுக்கு தொடர்பில்லை என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது . மாஸ்கோவில் கச்சேரிகள் உட்பட மக்கள் கூடும் கூட்டங்களை குறிவைத்து “தீவிரவாதிகள்” தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
11 people ‘directly’ involved in Crocus City Hall attack detained: Russian Security ServiceRead @ANI Story | https://t.co/5aezwo3Gp5#moscowattack #Russia pic.twitter.com/udYrwdRx7P
— ANI Digital (@ani_digital) March 23, 2024துப்பாக்கி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் துப்பாக்கி தாக்குதலை தொடர்ந்து இசை அரங்கில் இருந்து மக்கள் அலறியடித்து வெளியேறுகின்றனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் குறித்து மாகாண ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தகவல் கூறுகையில், “மாஸ்கோவில் பல ஆண்டுகளில் நடக்காத அளவுக்கு மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும் என தெரிவித்தா.
இந்நிலையில் மாஸ்கோ இசை கச்சேரி அரங்கில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தொடர்பு உடையதாக 11 பேரை இன்று ( சனிக்கிழமை ) கைது செய்யப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாகவும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது..
இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற உலக தலைவர்கள் பலரும் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர்.Also Read: Moscow Attack: உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்!
மேலும் காண

உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்.. 60 பேர் மரணம்!
Moscow Attack: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இசைக்கச்சேரி அரங்கு ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 60 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த 145 பேருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இசைக்கச்சேரி அரங்கில் நுழைந்த மர்ம நபர்கள்:
மாஸ்கோ அருகே கிராஸ்னோகோர்ஸ்க் நகரில் பிரபல குரோகஸ் சிட்டி ஹால் கான்சர்ட் அமைந்துள்ளது. இசைக்கச்சேரி நடத்த பயன்படும் இந்த இடத்தில் வணிக வளாகமும் அமைந்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர், இங்கு ஆயுதங்களுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.
மக்களை நோக்கி அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். இதனால், அங்கு தீ பரவியது. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், பின்னர், வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. மர்ம நபர்களின் தாக்குதலால் ஹாலின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட குரோகஸ் சிட்டி ஹாலில் பிக்னிக் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இசைக்குழுவை சேர்ந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அதிர்ச்சி:
இந்த தகவலை உறுதி செய்த ரஷிய அரசுதரப்பு வழக்கறிஞர் அலுவலகம், “குரோகஸ் சிட்டி ஹாலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கச்சேரி தொடங்குவதற்கு முன்பே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்” என கூறியுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து கான்சர்ட் ஹாலில் இருந்து மக்கள் அலறியடித்து வெளியேறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் குறித்து மாகாண ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தகவல் கூறுகையில், “மாஸ்கோவில் பல ஆண்டுகளில் நடக்காத அளவுக்கு மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
மக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு குழு அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 70 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்று நாற்பத்தைந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 60 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்” என்றார். இதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்ட தகவலில், “ரஷிய அதிபர் புதினுக்கு தாக்குதல் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளது.
மாஸ்கோ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “துக்ககரமான இந்த காலக்கட்டத்தில் ரஷிய அரசுடனும் அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது. தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் காண

Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்தோம். புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்த போது எனக்கும் வில்லியம்ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் ஜனவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நலம் மீண்டு வர நீண்ட காலம் ஆனது. அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற முடியவில்லை. தற்போது சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் எங்கள் குழந்தைகளிடம் இப்பிரச்சினையை புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் தற்போது நலமாக இருக்கிறேன். நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் உடலளவிலும், மனதளவிலும் வலுப்பெற்று வருகிறேன்” என கேத் மிடில்டன் கூறியுள்ளார். இந்த தகவல் இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காணாமல் போன இளவரசி

இளவரசி கேத் மிடில்டன், கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கேத் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவ தொடங்கியது. மேலும், அன்னையர் தினம் அன்று கேத் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இந்த புகைப்படத்துக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் கடந்த வாரம் லண்டனில் நடந்த செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிலர் சமூக வலைதளங்களில் இளவரசி இறந்து விட்டதாக தகவல் பரப்ப பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Deepfake: மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!

PM Modi: "140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை" பூடானின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி உருக்கம்!

பூடான் சென்ற பிரதமர் மோடி:

இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணாக பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பூடான் விமான நிலையத்தில் மலர்கள் மற்றும் வண்ணக் கோலங்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில், பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய் ஆரத் தழுவி வரவேற்றார். பின்னர், அந்நாட்டு ராணுவ மரியாதையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திம்புவில் உள்ள அவரது ஹோட்டலில் மக்கள் அவருக்கு நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத்தின் பாரம்பரிய உடையான காக்ரா-சோலி, பைஜாமாவை உடுத்தி, கர்பா நடனம் ஆடி அசத்தினர்.

பூடானின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி:

இந்த நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருதை அளித்தனர். இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி.

இந்தியா-பூட்டான் உறவுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி செய்த சிறப்பு பங்களிப்பையும், பூட்டான் நாட்டுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் அவர் செய்த சிறப்பான சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தரவரிசை மற்றும் முன்னுரிமையின் படி, ‘ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ’ விருது வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது.

பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இந்த விருதை அந்நாட்டின் நான்கு ஆளுமைகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் தான், பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருதை பெற்றிருக்கிறார்.

”140 கோடி இந்தியர்களின் பெருமை”

இந்த விருதை பெற்ற பிரதமர் மோடி, "இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள், பூடானின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருதும் சிறப்பானது தான். ஆனால் வேறு நாட்டிலிருந்து அந்நாட்டின் விருதைப் பெறும்போது, இரு நாடுகளும் சரியான பாதையில் செல்கின்றன என்பதை உணர்த்துகிறது.

இந்த விருது எனது தனிப்பட்ட சாதனையின் பெருமை அல்ல. 140 கோடி இந்தியர்களின் பெருமை. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்கள் சார்பாகவும் இந்த விருதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரஷியா தனது உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஆயுதப்படையின் ‘லெஜியன் ஆப் மெரிக் பை தி யு.எஸ். கவர்மென்ட்’ என்ற விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!
Italy PM: டீப் பேக் விவகாரம் சமீப காலமாகவே பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்கள்தான், இதனால் அதிகம் பாதிக்கப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பரபரப்பை கிளப்பும் டீப் பேக் வீடியோக்கள்:
இந்தியாவில் மட்டும் இன்றி பல நாடுகளில் இந்த பிரச்னை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இருப்பது போன்ற போலி ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டு, அது சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
ஒரு நாட்டின் பிரதமரையே தவறாக சித்தரித்து போலியான ஆபாச வீடியோ பரப்பப்பட்டது உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில், தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இத்தாலி பிரதமரின் போலி ஆபாச வீடியோவை உருவாக்கியது இரண்டு பேர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தந்தை, மகன் என்பதும் தெரிய வந்துள்ளது. வேறொருவரின் வீடியோவில் இத்தாலி பிரதமரின் முகத்தை எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.
இத்தாலி பிரதமரின் போலி ஆபாச வீடியோ வைரல்:
40 வயதுடைய நபர் மற்றும் அவரது 73 வயது தந்தை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், “போலி வீடியோவை பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் அவர்களை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த டீப் பேக் வீடியோ, அவர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2022 ஆம் ஆண்டுக்கு முந்தையது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இத்தாலியில் சில கிரிமினல் அவதூறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு சிறைத்தண்டனை கிடைக்கும். வரும் ஜூலை 2 ஆம் தேதி, நீதிமன்றத்தில் மெலோனி சாட்சியம் அளிக்க உள்ளார்.
மெலோனியின் போலி ஆபாச வீடியோக்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை, சில மாதங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மான நஷ்ட ஈடாக 1,09,345 டாலர்களை (90,57,300 ரூபாய்) தர வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியுள்ளார் மெலோனி. இதுகுறித்து மெலோனியின் வழக்கறிஞர் மரியா கியுலியா மரோங்கியு கூறுகையில், “அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், இம்மாதிரியான விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்த பயப்படக் கூடாது என்பதற்காகவே இழப்பீட்டுத் தொகையை கேட்டுள்ளார்.
கிடைக்கவிருக்கும் முழுத் தொகையையும் ஆண்களாக் தொடுக்கப்படும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக வழங்க உள்ளார் மெலோனி” என்றார்.
இதையும் படிக்க: Watch Video: 3ஆவது மாடியில் தந்தையின் கையில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தை.. ஷாப்பிங் மாலில் அதிர்ச்சிமேலும் காண

"இது ரொம்ப மோசம்" சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை சீண்டுகிறதா அமெரிக்கா.. நடந்தது என்ன?

அடுத்த மாதம், 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருதப்படும் சிஏஏ திருத்த சட்டத்தை அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 11ஆம் தேதி, குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

இஸ்லாமியர்களுக்கு எதிரானதா சி.ஏ.ஏ?

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக அடக்குமுறைக்கு உள்ளான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தவர், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வழிவகுக்கிறது.

எந்த வித ஆவணங்களும் இன்றி அவர்களுக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகளின்படி குடியுரிமை பெற ஆறு வகை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குள் குடியேறி இருக்க வேண்டும்.

பரபரப்பை கிளப்பிய அமெரிக்கா:

அனைவரையும் சமமாக கருதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் விதமாக சி.ஏ.ஏ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன.

சர்வதேச அளவிலும் இதற்கு எதிராக விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக, சி.ஏ.ஏ திருத்த சட்டம் குறித்து அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. அதற்கு இந்தியாவும் பதிலடி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா இதுகுறித்து மீண்டும் விமர்சனம் செய்துள்ளது.

சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட காலக்கட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி தலைவர் பென் கார்டின், "சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இந்திய இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகளால் நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

குறிப்பாக, புனித மாதமான ரம்ஜானின்போது இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த முற்படுவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இந்திய, அமெரிக்க உறவு ஆழமாகி வரும் நிலையில், மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைத்து தரப்பினரின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு நல்குவது முக்கியமானதாக கருதப்படுகிறது" என்றார்.

உலகுக்கு ரெட் அலர்ட்.. 2024இல் காலநிலை மாற்றத்தால் ஆபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!
Climate Change: உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
உலகை மிரட்டும் காலநிலை மாற்றம்:
கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு, காலநிலை பிரச்னைகள் மேலும் மோசமடையும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக, கடலின் வெப்பம் அதிகரிப்பது, கடலில் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவை மிகப் பெரிய பிரச்னைகளாக இருக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய காலநிலை அறிக்கையானது ஆண்டுக்கு ஒருமுறை ஐநாவின் உலக வானிலை அமைப்பால் வெளியிடப்படுகிறது. இந்தாண்டுக்கான காலநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்:
சராசரி வெப்பநிலை 174 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 1.45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடலின் வெப்பநிலை 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் 90 சதவிகிக கடல்பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு கட்டமைப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் செலஸ்டி சாலோ கூறுகையில், “உலகுக்கு உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட் அளிக்கிறது.
கடந்த 2023இல் நாம் எதிர்கொண்டது, குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவான கடல் வெப்பம், பனிப்பாறை உருகுவது, அண்டார்டிகாவில் கடல் பனி உருகி வருவது குறிப்பாக கவலைக்குரியவை. கடல் வெப்பம் குறிப்பாக கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அது, கிட்டத்தட்ட மீளமுடியாத அளவுக்கு நிலைமையை தலைகீழாக புரட்டி போடுகிறது.
இந்த போக்கு உண்மையில் மிகவும் கவலையளிக்கிறது. வளிமண்டலத்தை விட அதிக நேரம் வெப்பத்தை வைத்திருக்கும் நீரின் பண்புகளே இதற்கு காரணமாகும்” என்றார்.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் உந்தப்பட்ட காலநிலை மாற்றம், இயற்கையான எல் நினோவை (எல் நினோ என்பது கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதலை விவரிக்கும் ஒரு காலநிலை மாற்றமாகும்” உருவாக்குகிறது.
இதையும் படிக்க: காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு வேண்டுகோள்மேலும் காண

Arunachal Pradesh is part of china india slams through external affairs | Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசத்தை பங்கு போடும் சீனா: எதிர்க்குரல் எழுப்பிய இந்தியா
அருணாச்சல் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தமைக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் பயணம்:
பிரதமர் மோடி மார்ச் 9 ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அருணாச்சல் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, செலா சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பயணம் தூரம் குறையும் மற்றும் நேரம் குறைவதோடு, ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல ஏதுவாகவும் உள்ளது.
சீனா எதிர்ப்பு:
இந்நிலையில், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீன அரசு, அருணாச்சல் பிரதேசம் சீனாவின் அங்கம் என்றும் தெரிவித்தது. அருணாச்சல் பிரதேசத்தை செங்கம் என குறிப்பிட்டு, இது திபெத்தின் தென் பகுதி என்றும், இந்தியா சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது என்றும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
மேலும். இந்திய பிரதமர் மோடிக்கு வருகை தந்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தது சீன ராணுவம்.
India once again rejects China’s “absurd claims, baseless arguments” on Arunachal PradeshRead @ANI Story | https://t.co/RT7j8mVqXL#India #China #ArunachalPradesh pic.twitter.com/QaiWKofTPx
— ANI Digital (@ani_digital) March 19, 2024இந்தியா கண்டனம்:
இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், சீன வெளியுறவுத்துறை தெரிவித்த கருத்துக்களை அறிந்தோம். இது அபத்தமான கருத்து, இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியே தவிர சீனாவுக்கு சொந்தமானது இல்லை . மேலும், எங்கள் நாட்டில் உள்ள நிலபரப்புக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து கொண்டு இருப்போம். சீனா உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது. ஏற்கனவே தக்க பதிலடிகளை கொடுத்துள்ளோம் என்று கண்டனம் தெரிவித்தது.
இந்திய நிலப்பரப்பு பகுதியான அருணாச்சல் பிரதேசத்தை, சீனா உரிமை கொண்டாட முயற்சிப்பதும், எப்பொழுதெல்லாம் இந்திய தலைவர்கள் யாரேனும் செல்லும் பொழுது எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதும், இதற்கு இந்திய அரசாங்கமும் தக்க கண்டனம் தெரிவிப்பதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.
Also Read: US Election: 100 ஆண்டுகளில் முதல்முறை.. அமெரிக்க அதிபர் தேர்தலில் திரும்பும் வரலாறு.. பைடனுக்கு திருப்பி தருவாரா டிரம்ப்?

A powerful earthquake struck Afghanistan this morning registered 5.3 on the Richter scale
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவாகியுள்ளது.
Earthquake of Magnitude:5.3, Occurred on 19-03-2024, 06:05:24 IST, Lat: 29.77 & Long: 65.58, Depth: 130 Km ,Location: 632km SSW of Kabul , Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/rrvsA6X0cE@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/o785KyOe5h
— National Center for Seismology (@NCS_Earthquake) March 19, 2024அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் வீட்டில் இருந்த மக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
Earthquake of Magnitude:4.5, Occurred on 17-03-2024, 19:59:23 IST, Lat: 36.66 & Long: 71.43, Depth: 169 Km ,Region: Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/IuC0rzYAHv@KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/w50kk8HUmB
— National Center for Seismology (@NCS_Earthquake) March 17, 2024அதேபோல் நேற்று மாலை 8 மணியளவில் ஆப்கானிஸ்தான் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான் பகுதியில் நலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத சோகமான நினைவுகளை விட்டுச்சென்றது.
மேலும், 2024ஆம் ஆண்டு முதல் நாளிலேயே, ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் பகுதியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுகத்தில் 2000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கத்தில் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வர 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐக்கிய நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Indian student killed in america body found in forest | America Indian Student: தொடரும் மர்மம்! கொல்லப்பட்ட இந்திய மாணவர்
America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர் கொலை:
இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. 2024ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மாணவர் பருச்சுரி அபிஜித் (20). இவர் அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தார்.
அமெரிக்காவில் அதிர்ச்சி:
இந்த நிலையில், மாணவர் பருச்சுரி அபிஜித் அமெரிக்காவில் உள்ள வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் பணம் மற்றும் மடிக்கணினிக்காக அபிஜித்தை கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை எப்படி நடந்தது? யார் செய்தார்? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அபிஜித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர் அபிஜித்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு நேற்று மாலை அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, “பருச்சூரி சக்ரதர் மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகியோருக்கு ஒரே மகன் அபிஜித்.
அபிஜித் சிறுவயதிலிருந்தே சிறந்த மாணவராக இருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அபிஜித்தின் தாய் வெளிநாட்டில் படிக்கும் அவரது முடிவை ஆரம்பத்தில் எதிர்த்தாலும், அவரது எதிர்காலத்திற்காக அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். மாணவர் அபிஜித்தின் சடலம் நேற்று மாலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணம்:
பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா கடந்த ஜனவரி மாதம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு வாரமாக ஆச்சார்யாவை காணவில்லை என கூறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது ஆச்சார்யாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.
ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி ஜார்ஜியாவின் லித்தோனியாவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், அங்குள்ள கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீடற்ற ஜூலியன் ஃபாக்னர் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தஉணவு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று 25 வயதான பால்க்னருக்கு இலவச உணவு வழங்க மறுத்ததாகவும், இதனால் அவர் விவேக் சைனியை அடித்து கொன்றதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Russia President: மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்.. 87.8% வாக்குகளை பெற்று புதிய சாதனை..

ரஷ்யாவில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் அதிபராக விளாடிமர் புதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ரஷ்யாவில் இதற்கு முன் அதிக காலம் அதிபர் பதவி வகித்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை புதின் முறியடித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ஆனாலும் இங்கு மக்கள் தொகை 15 கோடி தான். அங்கே ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாய்றுக்கிழமை வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பாட்டு தேர்தல் நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மின்னஞ்சல் மூலமும் மக்கள் வாக்களித்தனர். ரஷ்யாவில் இருக்கும் 11 மண்டலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைந் நடைபெற்று வருகிறது. அதில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகளை புதின் பெற்றுள்ளதாகவும் மீண்டும் அவர் அதிபராக தேர்வாகியுள்ளதாக முதல் கட்ட தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் ஒருவருக்கு கிடைக்கும் அதிகபடச வாக்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற புதின் ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த காலங்களில் அதிக முறை ஆதிகாரத்தில் இருந்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை தற்போது புதின் முறியடுத்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்றும் வரும் நிலையில், ரஷ்யாவில் நடக்கும் அதிபர் தேர்தல் ஆகும். ஆனால் மேற்குலக நாடுகள் ரஷ்ய அதிபர் தேர்தலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதாவது அங்கு வலுவான எதிர்க்கட்சிகளை போட்டியிட முழு அனுமதி வழங்கப்படாது என்றும், சில கட்சிகளை மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் விமர்சனங்கள் முன்வைகப்படுகின்றன. இம்முறையும் அதிபர் புதினை எதிர்த்து வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததே, அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999 இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் அதிபர் பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார். அதன் பிறகு மீண்டும் 2012 இல் அதிபரான அவர், இந்தச் சட்டத்தை மாற்றினார். அப்போது அவர் அந்த விதியை மாற்றி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என கொண்டு வந்தார். மேலும் அதிபரின் பதிவிக்காலமும் 7 ஆண்டுகளாக நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Russia Election: ரஷ்ய தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்! மீண்டும் புதின் அதிபராக வாய்ப்பு? கருத்துக் கணிப்புகள் சொல்வது இதுதான்!

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரஷ்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

1 லட்சம் வாக்குச்சாவடிகள்:

நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள ரஷ்ய மக்கள் அந்த சிறப்பு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கின்றனர். அதேபோல் மின்னஞ்சல் முறையிலும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ரஷ்யாவின் 11 மண்டலங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

மீண்டும் அதிபராகும் புதின்?

இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 5-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வலுவான எதிர்கட்சி தலைவர் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் வாக்காளர்கள் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதின், ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 2030 வரை அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என புதின் தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க

CM MK Stalin: விஷ்வகுருவா?.. மவுனகுருவா?.. பிரதமர் மோடியை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு ஏற்காது – அமைச்சர் அன்பில் மகேஷ்

America on CAA: சிஏஏ விவகாரம்.. அமெரிக்கா பரபர கருத்து.. இந்தியா தந்த பதிலடி!

அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த திங்கள்கிழமை (மார்ச் 11ஆம் தேதி) குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

சி.ஏ.ஏ. என்றால் என்ன?

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், பார்சி இனத்தவர், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க குடியரிமை திருத்த சட்டம் வழிவகுக்கிறது.

ஆறு வகை ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குள் குடியேறி இருக்க வேண்டும்.

அமெரிக்க பரபர கருத்து:

இஸ்லாமியர்களை இந்த சட்டம் வஞ்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க அரசுகள் அறிவித்துள்ளன. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க இது தொடர்பாக பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியா தந்த பதிலடி என்ன?

அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இது தேவையற்ற கருத்து என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமையை வழங்குகிறது. குடியுரிமையை பறிப்பது அல்ல. இது நாடற்றவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது. மனித கண்ணியத்தை நிலைநாட்டுகிறது. மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்தை பொறுத்தவரை, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறான தகவல். தேவையற்ற கருத்து என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் நாட்டின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு பற்றி பெரிதாக அறியாதவர்கள் இதில் கருத்து தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்காமலேயே இருக்கலாம். இந்தியாவின் நட்பு நாடுகள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கையின் நோக்கத்தை வரவேற்க வேண்டும்" என்றார்.

அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சிறுபான்மையினருக்கு உதவுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Poorest Countries In The World South Sudan On Top With Dollor 492 GDP Per Capita
Poorest Coutries: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது.
முதலிடத்தில் சூடான்:
சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும், அன்றாட தேவைகளுக்காக செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஐஎம்எப் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தெற்கு சூடான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான், உலகின் மிக இளமையான நாடாக அறியப்படுகிறது. அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு சண்டை, உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லாதது போன்ற காரணங்களால் அந்த நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான், வறுமையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தெற்கு சூடான் உள்ளது. இந்த நாட்டில் தனிநபர் ஜிடிபியின் பங்கு என்பது 492.72 டாலராக உள்ளது. தெற்கு சூடானை தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் புருண்டி உள்ளது. இந்த நாட்டில் ஜிடிபியில் தனிநபரின் பங்கு 939.42 டாலராக உள்ளது. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு ($1,140), காங்கோ ஜனநாயக குடியரசு ($1,570), சொம்சாம்பிக் ($1,650), மலாவி ($1,710), நைஜர் ($1,730), சாட் ($1,860), லைபீரியா ($1,880), மடகாஸ்கர் ($1,990) உள்ளன.
என்ன காரணம்?
ஏழ்மையான நாடுகளாக இருக்கும் இந்த நாடுகளில் பொதுவான பிரச்னைகளே உள்ளன. நாட்டின் உள்கட்டமைப்பு பாதிப்பு, அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு மோதல், விவசாய பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் நாடுகள் கடுமையாக வறுமையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நாடுகளின் வறுமை, அங்குள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகங்களுக்கு அழைக்கு விடுக்கும் விதமாக இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது, பொருளாதார பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், அரசியல் ஸ்திரத்தன்மையை வளர்ப்பது ஆகியவை இந்த நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான ஒன்றாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை என்ன?
ஐரோப்பியா நாடான லக்சம்பேர்க் உலகின் பணக்கார நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியன் அடிப்படையில், இந்த நாடு பணக்கார நாடாக அறியப்படுகிறது. இந்த நாட்டின் தனிநபர் ஜிடிபியின் பங்கு 145,834 டாலராக உள்ளது. இதற்கிடையில், இந்தியா 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.89 டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க
Mlc Kavitha: தெலங்கானாவில் பரபரப்பு – முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை
Lok sabha Election: சந்தேகமே வேண்டாம்! பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி – ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்மேலும் காண

Joe biden to taken on Donald trump US president election 2024 interesting facts
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
எதிர்பார்ப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர் தேர்தல்:
அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்புக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பைடனும், டிரம்பும் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கின்றனர்.
ஜார்ஜியா, மிஸிஸிபி, வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பைடன், டிரம்ப் ஆகியோருக்கு எதிராக அவர்களின் கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. உட்கட்சி தேர்தலில் டிரம்ப், பைடன் ஆகியோர் பெற்ற பெரிய வெற்றி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராவதற்கான பெரும்பான்மையை அவர்களுக்கு பெற்ற தந்தது.
அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், மக்கள் மத்தியில் இருவர் மீதும் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இருவரின் வயதும் அவர்களுக்கு தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.
நேருக்கு நேர் மோதும் பைடன் டிரம்ப்:
81 வயதான பைடன், அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் ஆவார். அதேபோல, 77 வயதான டிரம்புக்கு எதிராக 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் டிரம்புக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 1912ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அதிபர்களாக இருந்தவர்கள் நேரடியாக மோதுகின்றனர். கடந்த தேர்தலில், பைடனின் வெற்றியில் கறுப்பினத்தவர் பெரும் பங்காற்றினர். கடந்த முறையை போன்று, இந்த முறையும் அவர் எந்தளவுக்கு கறுப்பின மக்களின் வாக்குகளை ஈர்க்கப் போகிறார் என்பது மிக பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
ஏன் என்றால், கடந்த முறை ஆதரவு அளித்த போதிலும், பதவியில் அமர்ந்த பிறகு, தங்களின் பிரச்னைக்கு பைடன் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கறுப்பினத்தவர் கருதுகின்றனர்.
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளில், கறுப்பினத்தவர் மத்தியில் பைடனுக்கான ஆதரவு குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. இது, ஜனநாயக கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஆனால், அனைத்து சவால்களையும் கடந்து கடந்த முறையை போல் இந்த முறையும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற பைடன் முனைப்பு காட்டி வருகிறார்.
இதையும் படிக்க: US Elections 2024: ரிப்பீட்டு.. அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை பழி தீர்ப்பாரா டிரம்ப்?மேலும் காண

Japan’s First Private Satellite Explodes Seconds After Launch video goes viral | Watch Video: ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்
Watch Video: ஜப்பானின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ்-ஒன் தயாரித்த ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது.
வெடித்து சிதறிய ராக்கெட்:
ஜப்பானிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் புதன்கிழமை வானை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நொடிகளிலேயே அந்த ராக்கெட் பல துண்டுகளாக வெடித்து சிதறியது. டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பானிய தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெறுவதை இலக்காக கொண்டிருந்தது. 18-மீட்டர் (60-அடி) உயரம் கொண்ட அந்த திட-எரிபொருள் கைரோஸ் ராக்கெட், மேற்கு ஜப்பானில் உள்ள வகயாமா மாகாணத்தில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சொந்த ஏவுதளத்தில் இருந்து, அரசாங்கத்தின் ஒரு சிறிய சோதனை செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Ouch the first Kairos rocket in Japan just, exploded after about 5 seconds. 😬The launch site at first glance seems ok… I think. pic.twitter.com/mddZrPgJ1e
— Marcus House (@MarcusHouse) March 13, 2024ராக்கெட் வெடிக்கும் காட்சிகள்:
திட்டமிட்டபடி ராக்கெட் புறப்பட்டு வான் நோக்கி பயணித்ததை, வானில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்தபடி சிலர் படம் பிடித்தனர். சரியாக அந்த ஹெலிகாப்டரை கடந்து சில மீட்டர்கள் மேலே சென்றதும் ராக்கெட்டானது பலத்த சத்தத்துடன் சுக்கு நூறாக வெடித்து சிதறியது. இதனால் அங்கு கரும்புகை மூட்டமும் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் அருகிலிருந்த மலையின் மீது விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பான தூரத்தில் பறந்து கொண்டிருந்ததால், ஹெலிகாப்டருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராக்கெட் வெடிக்க காரணம் என்ன?
கைரோஸ் ஏவப்பட்ட 51 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் என நம்பப்பட்டது. கேனான் எலக்ட்ரானிக்ஸ், ஐஎச்ஐ ஏரோஸ்பேஸ், கட்டுமான நிறுவனமான ஷிமிசு மற்றும் ஜப்பானின் அரசாங்கத்திற்குச் சொந்தமான டெவலப்மென்ட் வங்கி உள்ளிட்ட ஜப்பானிய தொழில்நுட்ப வணிகங்களின் குழுவால் ஸ்பேஸ் ஒன் 2018 இல் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப்பட்டாலும், எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு பின்னடைவு:
தற்போதுள்ள உளவு செயற்கைக்கோள்கள் செயலிழந்தால், தற்காலிக, சிறிய செயற்கைக்கோள்களை விரைவாக செலுத்த முடியுமா என்பதை அரசாங்கம் மதிப்பிட விரும்புகிறது. அதேநேரம், லாபகரமான செயற்கைக்கோள் ஏவுதள சந்தையில் நுழைவதையும் ஜப்பான் பரிசீலித்து வருகிறது. இந்த சூழலில் கைரோஸ் ராக்கெட்டின் தோல்வி, ஜப்பானின் முயற்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மற்றொரு ஜப்பானிய ராக்கெட்டும் சோதனையின் போது வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Who Is Aseefa Bhutto Zardari, Pakistan President’s Daughter Set To Become First Lady | Pakistan: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை
Aseefa Bhutto Zardari: அசீஃபா பூட்டோ சர்தாரி 2007 இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவை மணந்த ஆசிப் அலி சர்தாரியின் மகள் ஆவார்.
பாகிஸ்தான் குடியரசு தலைவர்:
பெரும் சர்ச்சைகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் வெளியான பிறகு, நீண்டகால இழுபறியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் செரிஃப் பொறுப்பேற்றார். அவரது ஆதரவுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, பாகிஸ்தானின் குடியரசு தலைவராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் ராணுவத் தலைவர்களைத் தவிர்த்து இரண்டாவது முறையாக அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சிவிலியன் வேட்பாளர் இவர்தான். இதற்கு முன், 2008 முதல் 2013 வரை பாகிஸ்தான் குடியரசு தலைவராக ஆசிப் அலி சர்தாரி பதவி வகித்துள்ளார்.
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை:
இதைதொடர்ந்து, அவர் தனது மகள் அசீஃபா பூட்டோவை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படி நடந்தால், வழக்கமான குடியரசு தலைவரின் மனைவிக்கு வழங்கப்படும், நாட்டின் முதல் பெண்மணி (FIRST LADY) என்ற அங்கீகாரம் அசீஃபா பூட்டோவிற்கு வழங்கப்படும். பாகிஸ்தானில் நாட்டின் முதல் பெண்மணி என்ற அங்கீகாரத்தை, குடியரசு தலைவரின் மகள் பெறுவதும் முதல்முறையாக இருக்கும். முதல் பெண்மணியின் பதவி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று அல்ல, அரசு சடங்கு கடமைகளை மட்டுமே கொண்டுள்ளது. ஆயினும்கூட, அரசு அமைப்பில் மிகவும் அறியப்படும் நிலையை வகித்துள்ளனர். முதல் பெண்மணியின் பங்கு பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: Khushbu: தாய்மார்களுக்கு ரூ.1,000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்கு கிடைக்குமா? – குஷ்பூ சர்ச்சை பேச்சு
யார் இந்த அசீஃபா பூட்டோ?
அசீஃபா பூட்டோ சர்தாரி 2007 இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவை திருமணம் செய்த ஆசிஃப் அலி சர்தாரியின் மகள் ஆவார். பிப்ரவரி 1993 இல் பிறந்த அசீஃபா, பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் பக்தவார் பூட்டோ சர்தாரிக்குப் பிறகு ஆசிப் அலி சர்தாரிக்கு பிறந்த இளைய மகள் ஆவார். அசீஃபா பூட்டோ ஜர்தாரி ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார். தொடர்ந்து, 2020ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) பேரணியில் பங்கேற்று தனது அரசியல் பயணத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. அசீஃபா பூட்டோ சர்தாரி போலியோ ஒழிப்புக்கான பாகிஸ்தானின் தூதராகவும் உள்ளார். கடந்த தேர்தலில் கூட தனது கட்சி வேட்பாளர்களுக்காக, ஆசீஃபா அலி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.மேலும் காண

Miss World 2024: How much does the luxurious crown cost, previous winner prize details Krystyna Pyszkova
Miss World 2024: உலக அழகி பட்டம் வெல்பவருக்கு அணிவிக்கப்படும், கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலக அழகிப் போட்டி:
மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உலக அழகிப் போட்டியானது, கடந்த 1951ம் ஆண்டு எரிக் மார்லி என்பவரால் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர் பெரும் புகழ் மற்றும் மரியாதையை பெறுவதோடு, உடனடியாக பெரும் பணக்காரராகவும் ஏற்றம் காண்கிறார். காரணம் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகை. அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த 2024ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில், செக் குடியரசைச் சேர்ந்த, கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை உள்ளிட்ட சலுகைகள் மற்றும் அணிவிக்கப்படும் கிரீடத்தின் மதிப்பு தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
What a shocker !!!!!!! These pageants are not for fainted heart…Miss Botswana 🇧🇼 is the real winner for me #MissWorld2024 pic.twitter.com/9fLHRg3Fwp pic.twitter.com/mQZCgcWxAg
— 𝐑𝐡𝐞𝐚 (@Rhea__Its_) March 9, 2024உலக அழகிக்கான பரிசுத் தொகை:
உலக அழகி பட்டத்தை வென்றவர், உலக அழகி கிரீடத்துடன் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறார். மனிதாபிமான பிரச்சினைகளை முன்வைப்பதற்காக உலகம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். இதில் தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவையும் அடங்கும். ஒரு வருடத்திற்கு ஒப்பனை மற்றும் முடியை அழகுபடுத்துவதற்கான பொருட்கள், காலணிகள், உடைகள், நகைகள் மற்றும் பலவற்றை வழங்கப்படும். தொழில்முறை ஒப்பனையாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட வசதிகளை அணுகலாம். வெற்றியாளருக்கு சிறந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். அவர் உலக அழகி அமைப்பின் பிராண்ட் தூதராகவும் இருப்பார். அதோடு, பெரும் பரிசுத்தொகையும் வழங்கப்படும். அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர், 10 கோடியை பரிசாக பெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா – வழக்கறிஞர் To பேரழகி
உலக அழகிக்கான கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு?
உலக அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு கிரீடதை முடிசூட்டும் வழக்கம், கடந்த 1955 இல் தொடங்கியது. அதன் பின்னர் கிரீடத்தின் வடிவமைப்பு பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. தற்போதைய வடிவமைப்பு 1972 இல் பயன்பாட்டில் இருந்ததை சார்ந்து இருக்கிறது. கிரீடத்தின் வடிவமைப்பில் 1978 முதல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிரீடத்தின் மதிப்பு சுமார் 6 கோடியே 21 லட்சம் என கூறப்படுகிறது. இது 4.3 அங்குல உயரம் மற்றும் அட்ஜெஸ்டபள் பேண்டை கொண்டுள்ளது. இது நீலம் மற்றும் டர்க்கைஸ் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உலக அழகி பட்டம் வென்ற இந்தியர்கள்:
ரீட்டா ஃபரியா பவல் 1966 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில், வெற்றி பெற்ற இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசிய பெண்மணியும் ஆவார். 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு டயானா ஹைடன், 1999ம் ஆண்டு யுக்தா முகி, 2000ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா, 2017ம் ஆண்டு மனுஷி சில்லர் என, மொத்தம் 6 இந்தியர்கள் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர்.மேலும் காண

world health mental survey Sapien Labs Releases the 4th Annual Mental State
உலக அளவில் 71 நாடுகளில் உள்ள 4,19,175 பேர்களிடம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களின் மனநல பாதிப்பு தொடர்ந்து நீடிப்பதாக சேப்பியன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இளைய தலைமுறையினர் பாதிப்பு:
இளைய தலைமுறையினரில், குறிப்பாக 35 வயதிற்குட்பட்டவர்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மனநலத்தில் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். ஆனால்,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீராகவே இருந்தனர்.
2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளைய தலைமுறையின் மனநல பாதிப்புக்கு இரண்டு முக்கிய காரணிகளை தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகிய இரண்டும் மன நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
A pioneering large-scale global study by Sapien Labs shows that the earlier a child uses a #smartphone, the worse their #mentalhealth is as an adult. While bad for both genders, the trend is worse for girls. https://t.co/BlTVjwB6f9 pic.twitter.com/2FKpiDh6Jr
— Sapien Labs (@sapien_labs) May 15, 2023அவசர தேவை:
முந்தைய ஆண்டுகளை போலவே, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் நாட்டின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளன.அதே நேரத்தில் செல்வந்த நாடுகளான லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த அறிக்கையானது, கோவிட் தொற்று நோய் ஏற்பட்ட காலத்தின் பிந்தைய நிலை குறித்து தெரிவிக்கிறது. இளைஞர்களின் மனநல கவலைக்குரிய வகையில் இருப்பதாகவும், அவசரத் தேவை இருப்பதாகவும் “ தெரிவிப்பதாக சேப்பியன் லேப்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி தாரா தியாகராஜன் தெரிவிக்கிறார்.
அறிக்கை:
இந்த உலகளாவிய மனநல ஆய்வானது, குளோபல் மைண்ட் ப்ராஜெக்ட்டின் ஒரு பகுதியாகும், இது Sapien Labs ஆல் நடத்தப்பட்ட உலகளாவிய மனநலம் பற்றிய ஒரு தொடர்ச்சியான கணக்கெடுப்பு ஆகும். 47 அம்சங்களை கணக்கில் கொண்டு தரவுப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Also Read: Pakistan: சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடாக மாறும் பாகிஸ்தான்! ஆசியாவிலே ஒரே நாடு! அதிர்ச்சி தரும் அறிக்கை!Check out below Health Tools-Calculate Your Body Mass Index ( BMI )Calculate The Age Through Age Calculator
மேலும் காண
Israel Palestine : 'போர் குற்றம்'.. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. பொளந்து கட்டிய ஐநா!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 5 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலையும் காசா:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இஸ்ரேல் மீது கடுமையான போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு மனித உரிமை மீறலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பாலஸ்தீன பகுதியான வெஸ்ட் பேங் மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ள ஐநா, போர் குற்றத்திற்கு இணையான செயலை இஸ்ரேல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வெஸ்ட் பேங்கில் ஏற்கனவே இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளுத்து வாங்கிய ஐநா:

கடந்த 2017ஆம் ஆண்டு, வெஸ்ட் பேங்கில் ஐநா மனித உரிமை அலுவலகம் கண்காணிப்பை தொடங்கியதில் இருந்து இந்தாண்டுதான் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களாகவே, புதிய கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்புகளை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறுகையில், "வெஸ்ட் பேங் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. இருப்பினும்கூட, இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைகளும் குடியேற்றம் தொடர்பான மீறல்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளன. பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளை இது ஆபத்தாக்குகிறது.

மூன்று பகுதிகளில் சர்வதேச விதிகளை மீறி 3,500 வீடிகளை கட்டி அதில் இஸ்ரேலியர்களை குடியற்ற இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதும் விரிவாக்கம் செய்வதும் இஸ்ரேல் தங்களின் சொந்த மக்களை அங்கு கொண்டு வருவதும் சர்வதேச விதிகளின் போர் குற்ற செயலாகும்" என்றார். ஐநா மனித உரிமைகள் சபையில் இந்த அறிக்கையை அதன் தலைவர் வோல்கர் டர்க் நேற்று சமர்பித்தார்.

ஏற்கனவே, போரால் நிலைகுலைந்துள்ள காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்தது. குறிப்பாக, உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், "எதுவும் மாறவில்லை என்றால் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படுவது நிச்சயம்" என்றார்.

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆசிப் அலி சர்தாரி. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை.
பாகிஸ்தான் அரசியல் சூழல்:
பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர்.
அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. மற்ற கட்சிகள் 34 இடங்களில் வெற்றிபெற்றனர். வேட்பாளர் இறந்ததால் ஒரு இடத்தில் தேர்தல் நடத்தபடவில்லை.
புதிய அரசை அமைக்க 133 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்தனர்.
பதவிகளை பகிர்ந்து கொண்ட பரம எதிரிகள்:
அதன்படி, பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிய பிலாவல் பூட்டோ, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு அளித்தார். ஆனால், தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியான ஆசிப் அலி சர்தாரிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பதவி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதில், சமரச உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் வேட்பாளராக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வாகியுள்ளார்.
மேலும் காண

Israel-Hamas war: 5 killed, many injured as parachute fails to open during aid drop in Gaza | Israel-Hamas war: விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள்
Israel-Hamas war: காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
5 பேர் உயிரிழப்பு:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடயேயான போரால். காஸாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இருதரப்பினர் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால், அங்குள்ள் மக்களுக்கு உணவும், நீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஐ.நா. உடன் சேர்ந்து எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காசாவிற்கு நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன. அந்த வகையில், காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
உயிர்களை காவு வாங்கிய பாராசூட்:
காஸா நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க அரசு அந்நாட்டு விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளன. அதாவது உணவு, தண்ணீர், உடைகள் மற்று மருந்துகள் அடங்கிய பெட்டகம், விமானத்தில் இருந்து தூக்கி வீசப்படும். அவை பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும். அப்படி வீசப்பட்ட பெட்டகங்களில் ஒன்றில் இருந்த பாரசூட் செயலிழந்துள்ளது. இதனால், அதிவேகமாக தரையிறங்கிய ஒரு பெட்டகம் , கீழே உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்தின் மீது விழுந்துள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
காஸா நிர்வாகம் கோரிக்கை:
நிவாரணப் பொருட்களால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, “வான் வழியாக நிவாரணங்களை வழங்குவது பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம். தற்போது அது உண்மையாகியுள்ளது. எனவே தரைவழியாக அகதிகள் முகாமிற்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என காஸா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்:
காஸாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதப்படையினர் கடந்த ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 200-க்கும் அதிகமானோர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில், காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் காஸா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் காண

Rupert Murdoch Marriage: 92 வயதில் 5வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்!

அமெரிக்காவில் 92 வயது தொழிலதிபர் 5வதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5வது திருமணம் செய்யும் 92 வயது முதியவர்:

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. ஆண் – பெண் சராசரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், திருமணத்தை தள்ளிப்போடுவது, வயது காரணம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் அமெரிக்காவில் 92 வயது நபர் முதியவர் 5வது திருமணம் செய்யப் போகிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக். 92 வயதான இவருக்கு தனது ஊடக உரிமையை மகன் லாச்லனிடம் கடந்த நவம்பர் மாதம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ரூபர்ட் முர்டோக் திருமணத்துக்கு தயாராகியுள்ளார்.

அவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜூகோவாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 67 வயதான மணப்பெண் ஜூகோவா ஒரு ஓய்வுப்பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். இருவருக்குமிடையே வயது வித்தியாசம் 25 ஆண்டுகளாக இருக்கும் நிலையில் இந்த திருமணமானது கலிஃபோர்னியாவில் உள்ள பங்களாவில் நடக்கவுள்ளது. இந்த திருமணம் ரூபர்ட் முர்டோக்கின் 5வது திருமணமாகும்.

ரூபர்ட் முர்டோவின் குடும்ப வரலாறு

தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்வின் பெடிர்கா புக்கர் என்ற பெண்ணை முதலில் 1956 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமான பணிப்பெண்ணான இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு அனாடெவா என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் முர்டோக் 2வதாக திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு பிரிந்தனர். மூன்றாவதாக வென்டி டங்க் என்பவரை 1999 ஆம் ஆண்டு 3வதாக மணம் முடித்தார். அவரை 2013 ஆம் ஆண்டு பிரிய 2016 ஆம் ஆண்டு ரூபர்ட்டுக்கு 4வது திருமணம் நடைபெற்றது. ஜெர்ரி ஹால் என்ற பெண்ணை மணமுடித்த நிலையில் இவர்கள் 2022 ஆம் ஆண்டு பிரிந்தனர். இப்படியான தன்னுடைய 5வது திருமணத்துக்கு ரூபர்ட் முர்டோக் தயாராகி வருகிறார்.

Plane Wheel Comes Out During TakeOff Flattens Cars Parked Below
Watch Video: அமெரிக்காவில் விமானம் ஒன்று பறக்கும்போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழன்று விழுந்த விமானத்தின் டயர்:
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானுக்கு விமானம் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானம் ரன்வேயில் இருந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது.
அந்த நேரத்தில், திடீரென்று விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது. விமான நிலைய ஊழியர்கள் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் டயர் விழுந்து ஓடியது. இதில், அங்கிருந்த கார்கள் பல சேதம் அடைந்துள்ளன.
விமானத்தில் 249 பேர் பயணித்த நிலையில், விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் ஒரு சக்கரம் மட்டும் கழன்று விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் வெளியேற்றப்பட்டனர்.
வைரல் வீடியோ:
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் இருந்தது. விமானத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கோயிங் ரக விமானம் தொடர்ச்சியாக தரக்கட்டுப்பாடு பிரச்சைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கதவு உடைந்து கீழே விழுந்தது. இதனால், விமானம் அவசரமாக தரையிறங்கப்பட்டது.
இதுபோன்ற தரக்கட்டுப்பாட்டு சிக்கல்களை தீர்க்க 90 நாட்களில் செயல் திட்டத்துடன் வர வேண்டும் என்று அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டு இருந்து நிலையில், மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
Full HD video of United flight UA35 taking off from San Francisco and losing a wheel!😱👇Boeing always surprises us. Every day!🤪pic.twitter.com/U1m9vtiZV1
— ShanghaiPanda (@thinking_panda) March 8, 2024இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விமானம் வானத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்தது போன்று வீடியோவில் உள்ளது.
மேலும் படிக்க
Rajasthan Electric Shock: 14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!
இங்கிலாந்து பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் வாழ்த்துமேலும் காண

Philippines Powerful earthquake registers 6.1 on the Richter scale in the
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்:
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வடக்கு சுலவேசி பகுதியில் இருந்து சுமார் 91 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் துருக்கி- சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். கிழக்கு ஆசியா நாடுகளில் அவ்வப்போது, எரிமலை உருவாவது வழக்கமாக இருக்கும். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
பூமியின் மேல் அடுக்கில் உள்ள தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் உருவாவதற்கான முக்கிய காரணிகளாகும்
A magnitude 6.2 earthquake took place 128km NNW of Tibanbang, Philippines at 09:11 UTC (6 minutes ago). The depth was 135.6km and was reported by GFZ. #earthquake #earthquakes #Tibanbang #Philippines pic.twitter.com/Bzl91tZ5Yw
— Earthquake Alerts (@QuakeAlerts) March 8, 2024
.Also Read: Watch Video: திக் திக்! நடுவானில் கழன்று விழுந்த விமானத்தின் டயர் – 200 பயணிகளின் நிலை என்ன? பரபர வீடியோ!Published at : 08 Mar 2024 04:44 PM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண