Maharastra: துப்பாக்கிச் சூடு நடத்திபின், காயத்துடன் 30 கி.மீ தொலைவுக்கு காவல் நிலையம் நோக்கி பேருந்தை ஓட்டுநர் கோம்தேவ் ஓட்டிச் சென்றிருக்கிறார்.
30 கி.மீ வரை காயத்துடன் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்:
மகாராஷ்ரா மாநிலம் மாவட்டம் புல்தான மாவட்டத்தில் செகாவன் நகரில் இருந்து நாக்பூரை நோக்கி மினி பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் சொந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த பேருந்தை கோம்தேவ் கவாடே என்பவர் ஓட்டிச் சென்றார்.
அமராவதி தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், கார் ஒன்று பேருந்தை பின்தொடர்ந்து வந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருக்கும்போது, நந்தகாவன் என்ற பகுதியில் அந்த கார் பேருந்தை ஓவர்டேக் செய்தது. இரண்டு முறை முந்திக் செல்ல வழி கிடைத்தும், அந்த கார் பேருந்தை முந்திச் செல்லவில்லை. நந்தகாவன் பகுதியில் தான் கார், பேருந்தை முந்திச் சென்றது.
இந்த நிலையில், பேருந்தை முந்திக் சென்ற காரில் இருந்து சில நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பேருந்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால், பேருந்தில் உள்ளவர்கள் பதற்றம் அடைந்தனர். தொடர்ந்து, மூன்று முறை இதுபோன்ற காரில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நான்காவது முறை காரில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஓட்டுநர் கையில் குண்டு பாய்ந்தது. அப்போதும், அவர் பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார். 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு காவல்நிலையம் நோக்கி பேருந்தை ஓட்டினார். தியோசா காவல்நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார்.
மகாராஷ்டிராவில் சுவாரஸ்யம்:
இதன்பின், காரில் இருந்தவர்கள் தப்பித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஓட்டுநரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு, பேருந்தில் இருந்த 3 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களையும் போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயம் ஏற்பட்டும் 30 கி.மீ வரை பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கோம்தேவை போலீசார் பாராட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறையாக இருக்கும் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஓட்டுநர் கோம்தேவ் கூறுகையில், ”அமராவதியிலிருந்து வரும் போது, எங்களுக்குப் பின்னால் ஒரு பொலேரோ கார் வந்துக் கொண்டிருந்தது. அந்த கார் எங்களைப் பின்தொடர்ந்து வந்தது. காரின் பதிவு எண் எனக்கு நினைவு இல்லை. நான் அவர்களுக்கு இரண்டு முறை முன்னால் செல்ல இடம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் முந்தவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் என்னோட கையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும் காண