Brindha Sivakumar shares her memories about how her friends were craze about suriya | Brindha Sivakumar: சூர்யாவை சைட் அடிப்பியா? ப்ரெண்ட்ஸ் கேள்வியால் அதிர்ந்த பிருந்தா


1960 காலகட்டத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். அவரின் அபாரமான நடிப்பு திறமையால் திரையுலகின் மார்க்கண்டேயன் என அழைக்கப்பட்டவர். அவரின் வழியிலேயே மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். 
சூர்யா தங்கை: 
அந்த வகையில் நடிகர் சிவகுமாரின் ஒரே மகள் பிருந்தாவும் திரைதுறையில் தற்போது ஒரு பாடகியாக, டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார். பான் இந்தியன் படமாக பாலிவுட்டில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் மூலம் திரைத்துறையில் இணைந்தார் பிருந்தா. ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நடிகை ஆலியாவுக்கு  டப்பிங் பேசி இருந்தார் பிருந்தா. சோசியல் மீடியா மூலம் பிருந்தாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.  
 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய அண்ணன்களை பற்றி பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வந்தார். அப்படி அவர் பேசுகையில் “சூர்யா அண்ணன் படத்தில் நடிக்க ஆரம்பிச்ச போது நான் பிளஸ் 1 படிச்சுட்டு இருந்தேன். என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் அண்ணனை தெரியும். உங்க அண்ணன் ரொம்ப குட் லுக்கிங். நாம வேணும்னா வீட்ல போய் நோட்ஸ் இல்லனா புக்ஸ் ஏதாவது கலெக்ட் பண்ணிட்டு வரலாமா? அப்படினு அப்போ எல்லாருமே என்கிட்ட கேப்பாங்க. அப்படியே சிரிச்சு போயிடுவேன். 
என்னோட மாஸ்டர்ஸ் டிகிரி வந்து லயோலா காலேஜில் பண்ணேன். சண்டேஸ் மட்டும் தான் காலேஜ். அங்க யாருக்குமே நான் சூர்யா தங்கச்சின்னு சுத்தமா தெரியாது. போட்டோ எதுவுமே போடமாட்டேன். யாருக்குமே என்னை தெரியாததால நான் நல்லா என்ஜாய் பண்ணுவேன். ஒரு பக்கம் சித்தி சீரியல் பத்தி பேசிட்டு இருப்பாங்க. ஒரு பக்கம் காக்க காக்க படம் பத்தி பேசிட்டு இருப்பாங்க. அதை எல்லாம் கேட்டு நான் என்ஜாய் பண்ணுவேன்.
 

கிண்டல் செய்த ப்ரண்ட்ஸ்:
ஒரு நாள் திடீரென உன்னோட வீடு எங்க இருக்குனு தற்செயலா கேட்டாங்க. நான் தி. நகரில் இருக்கேன்னு சொன்னேன். அப்புறம் தெரு பேரெல்லாம் கேட்டாங்க. நான் சொன்னவுடனே அங்க தான் சூர்யா வீடு கூட இருக்கு. எதுக்கு வம்பு ஆமா அங்க தான் பக்கத்துல இருக்கு அப்படின்னு சொல்லிட்டேன். நீ அவர பாத்து இருக்கியா?  சைட் அடிச்சு இருக்கியா? அப்படின்னு கேட்டாங்க. சைட் எல்லாம் அடிக்க மாட்டேன் அவர் எனக்கு அண்ணன் மாதிரி அப்படின்னு  சொன்னேன். அதை கேட்டுட்டு சூர்யாவை போய் அண்ணன் மாதிரின்னு சொல்றா பாருயா அப்படினு என்னை கிண்டல் பண்ணுவாங்க என்றார் தன்னுடைய காலேஜ் டேஸ் மெமரிஸ் பகிர்ந்தார் சிவகுமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் தங்கையுமான பிருந்தா.

மேலும் காண

Source link