பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ்.
இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா புதுடெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கவுள்ளது.
> சீன அதிபர் ஷி ஜின்பிங்,
> ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,
> தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா,
> ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான்,

> எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி,
> எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது,
> இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ,
> ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்,
> பிரேசில் வெளியுறவுத் தலைவர் மௌரோ வியெய்ரா.
இவர்கள் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளிலிருந்து டெல்லியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களின் லிஸ்ட்.
இதைத் தாண்டி, இன்னும் பல நாடுகளிலிருந்து தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
























