<p>திருமணத்திற்கு மீறிய உறவு என கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை மும்பை நீதிமன்றம் ரத்து செய்தது. </p>
<p>2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அந்த பெண், தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், இதனால் கணவனும் அவரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக 2022 ஆம் ஆண்டு சுர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்திய தண்டனைச் சட்டம் 498A (கணவன் மற்றும் அவரது உறவினர்கள் துன்புறுத்துவது), 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 323 (உடல் ரீதியாக துன்புறுத்துவது), 504 (அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொள்வது) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. </p>
<p>அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது கணவன் பழகி வந்த பெண் சார்பாக வழக்கறிஞர்கள் அபிஷேக் குல்கர்னி மற்றும் சாகர் வக்காளே ஆகியோர் அஜரானார்கள். அப்போது, கணவன் பழகி வந்த பெண் கணவனின் உறவினர் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது. பின் எஃப்.ஐ.ஆரில் தனது கணவன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகவும், இதனால் அடிக்கடி இருவருக்குள் சண்டை வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை குல்கர்னி சுட்டிக்காட்டினார். அப்போது புகார் அளித்த பெண் தரப்பில், கணவருக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து மெசேஜ் வருவதாகவும், தன்னை விவாகரத்து செய்ய அந்த பெண் வற்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p>
<p>இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ”கணவன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக மட்டுமே புகார் அளிக்கப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அந்த பெண் கணவரின் உறவினர் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கொடுமைப்படுத்தியதாக, கிரிமினல் வழக்கை போடுவது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது ஆகும்” என தெரிவிக்கப்பட்டு அந்த புகாரை ரத்து செய்தனர். </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
meilleurs casinos rtg Feel free to surf to my site; casino en ligne fiable acceptant les joueurs français (Fredrick)
Если вы ищете надежное решение для ограждения, обратите внимание на [url=https://www.vorota-otkatnyye-mekhanicheskiye-na-rolikakh.ru/]откатные механические ворота под ключ цены[/url], которые обеспечивают долговечность и…
Live football scores https://egyptsportguide.com match results and transfer news from around the world. Follow African football, women’s sport and esports…
gratis geld gokken Feel free to visit my web-site :: casino Anna paulowna
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

The demolished Railway Station Vinayagar Temple! Is Christian preacher Mohan C. Lazarus behind it?-இடிக்கப்பட்ட ரயிலடி விநாயகர் கோயில்!; பின்னணியில் கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி. லாசரஸா | ACTPnews.com
-

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!’ – சாடும் திமுக | ACTPnews.com
-

விஜய் அரசு 2 முக்கிய திட்டங்கள்: யாருக்கெல்லாம் என்ன சலுகை?|Vijay Delivers Two TVK Promises: Who Will Get the Benefits? | ACTPnews.com
-

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர் தகவல்! | ACTPnews.com



















Если вы хотите надежно оградить свой участок, обратите внимание на [url=https://www.zabor-dlya-dachi-iz-proflista.ru/]металлический забор из профлиста на дачу цена[/url] — это оптимальное…