ட்ரம்ப்

‘அது போன வாரம்… இது இந்த வாரம்’ என்பது போல, அமெரிக்காவும், ஈரானும் ஈரான் போரில் பேச்சை மாற்றி மாற்றிப் பேசுகின்றன.

கடந்த வார இறுதியில், ஈரான், ‘எங்களின் 7 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அடுத்த 7 நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும்’ என்று வெள்ளைக் கொடி காட்டியது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில், ‘அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்’ என்று கூறினார்.

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்காக அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு ஈரான் குழு சென்றிருந்தது.

அங்கே ஈரானும், அமெரிக்காவும் கலந்துரையாடியது. எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

ட்ரம்ப்

மாறிய பேச்சுகள்

இடையில் என்ன ஆனதோ… ஏது ஆனதோ… ட்ரம்ப், ‘ஈரான் சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

நவம்பர் மாதத் தேர்தலுக்குப் பின், ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்தப்படும்’ என்று நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) சொல்லியிருக்கிறார்.

ஈரானுமே ட்ரம்பின் இந்தப் பேச்சிற்கு, ‘நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்தான். ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் மீண்டும் தாக்குவோம்’ என்று பதிலளித்துள்ளது.

ஈரானும், அமெரிக்காவும் போடும் போர், இரு நாடுகளுக்குள் முடிந்துவிடுவதாக இல்லை. இந்த இரு நாடுகளும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்துச் சூதாடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துத் தடம். இது மூடப்பட்டால், என்ன ஆகும் என்பதைத்தான் இந்த ஏழு மாதங்களாகப் பார்த்து வருகிறோம்.

ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகள் மீது இந்தப் போரில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவும் எண்ணெய் சந்தையை ஆட்டம் காணச் செய்தது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

இந்தப் போரை வெறும் அரசியல் ரீதியாக மட்டும் அணுகாமல், பொருளாதார ரீதியாக அணுகத் தொடங்க வேண்டும். அதுவும் உடனடியாக.

காரணம், வெள்ளம் கரை வரை வந்துவிட்டது. எப்போது கரையைத் தாண்டி, நிலத்திற்கு வரும்… ‘இப்போதோ… அப்போதா…’ என்கிற நிலையில் இருக்கிறோம்.

இதற்கான சரியான உதாரணம்…

அமெரிக்காவின் 10 ஆண்டுகால கருவூலப் பத்திரத்தின் வட்டி விகிதம் 5 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. இந்த வட்டி விகிதம் கடைசியாக 2007-ம் ஆண்டில் தொட்டது.

நன்றாக யோசித்துப் பார்த்தால், அது உலகமே நிதி நெருக்கடியைச் சந்தித்த காலக்கட்டம்.

பணவீக்கம் அதிகரிப்பு அச்சுறுத்தல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு, அமெரிக்காவில் வெளியாகும் பொருளாதார தரவுகள் போன்றவை கருவூலப் பத்திரத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

கருவூலப் பத்திரத்தின் உயர்வு நம் கண்முன்னே ஒளிந்துவிளையாடும் பணவீக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

வட்டி விகிதம் அதிகரித்திருக்கிறது என்று அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் பின், முதலீட்டாளர்கள் செல்வார்கள்.

ஈரான் கச்சா எண்ணெய்
ஈரான் கச்சா எண்ணெய்

தங்களிடமிருந்து முதலீட்டாளர்கள் சென்றுவிடக்கூடாது என்றும், அவர்களைத் தக்கவைக்க வேண்டும் என்றும் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரிக்கும்.

பொருள்கள் வணிகம் ஆவது… வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்வதற்கெல்லாம் உயிர்நாடி, ‘எரிபொருள்’. இப்போது அதன் விலை உயர்ந்து… அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், பணவீக்க அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவி வருகிறது.ஆக, அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் போட்டியைச் சமாளிக்கவும், பணவீக்க அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இதனால், மக்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால்…

இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு அமெரிக்க டாலர் நிச்சயம் தேவை. இதனால், அந்நிய செலாவணி கையிருப்பைத் தக்கவைக்க இந்திய அரசு மக்களைத் தங்கம், வெள்ளி வாங்குவதைக் குறைக்கச் சொல்லியிருக்கிறது.

ஈரான், அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க அந்நிய செலாவணி இந்தியாவிற்கு இன்னும் அதிகத் தேவையாக மாறுகிறது.

இன்னொரு பக்கம், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம்

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்கிறது என்கிற போதே, இந்தியாவில் பணவீக்கத்திற்கான அச்சுறுத்தல் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிடுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஈரான் போர் மீண்டும் தொடருமோ என்கிற அச்சத்தால் தற்போது நிப்டியும் 23,000-க்குக் கீழ் இறங்கி வர்த்தகமாகிறது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது, இந்திய ரிசர்வ் வங்கியும் முதலீட்டாளர்களைத் தக்கவைக்க வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

இந்த வட்டி விகித உயர்வு மக்கள் வாங்கியுள்ள கடனிலும் எதிரொலிக்கும். இதெல்லாமே நம்மை அலர்ட் ஆக்கும் விஷயங்கள்.

இந்தியாவை நாம் வெறும் உதாரணமாக மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட இதே நிலை, பெரும்பாலான உலக நாடுகளுக்குமே பொருந்தும்.

ஆக, அமெரிக்காவும், ஈரானும் ஹார்முஸைப் பணயம் வைத்து ஆடும் சூதாட்டத்திற்கு உலகப் பொருளாதாரம்தான் பலி?!

Source link


Latest News

View All

  1. Испарительный увлажнитель воздуха деликатно поддерживает комфортную влажность в квартире: вода естественно испаряется через картридж, а вентилятор равномерно разносит пар, не…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed