Aryan Khan: நீங்க நம்பலன்னாலும் இதுதான் நிஜம்.. பிரேஸில் நாட்டு மாடலுடன் ஷாருக்கான் மகனுக்கு காதலா?

பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான லாரிஸா போனேஸூம், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யன் கான்

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். இவருக்கு தற்போது 26 வயது ஆகிறது. கலிஃபோர்னியாவில் பட்டப்படிப்பை முடித்த ஆர்யன் கான் D’ yavol என்கிற தன் சொந்த பிராண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.

பல்கேரிய மொழியில் இதற்கு டெவில் என்று பொருள் . ஆண்களுக்கான அழகு சாதனங்கள், தங்களுடைய சொந்த தயாரிப்பில் உருவான விஸ்கி,வோட்கா  ஆகியவற்றை உருவாக்கி வருகிறார்.

பிஸ்னஸ் தவிர்த்து தந்தை ஷாருக்கான் நடித்த கபி குஷி கபி கம், படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தவிர லயன் கிங் , இன்கிரெடிபிள்ஸ் போன்ற படங்களுக்கு இந்தி டப்பிங் செய்திருக்கிறார். தனது தந்தையைப்போல் ஆர்யன்கான் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குநராவதே தன்னுடைய லட்சியம் என்று ஆர்யன் கான் தெரிவித்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமா துறையை பின்னணியாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

போதைப்பொருள் வழக்கு

2021-ஆம் ஆண்டு மொத்த ஊடக கவனமும் ஆர்யன் கான் மீது திரும்பியது. அதற்கு காரணம் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் போதை பொருள் கடத்தலில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தன்னுடன் சேர்ந்து ஆறு பேர் உட்பட கைது செய்யப்பட்டார் ஆர்யன்.

4 முறை ஜாமின் மறுக்கப்பட்டு 25 நாட்கள் மும்பை மத்திய சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்தார். 2022-ஆம் ஆண்டும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் மீதிருந்த வழக்குகள் நீக்கப்பட்டன. இந்த வழக்கை முன்னெடுத்த சமீர் வான்கடே என்கிற அதிகாரி ஷாருக் கான் மீது இருந்த தனிப்பட்ட பகையினாலும் அவரை மிரட்டி பணம் பறிக்க ஆர்யன் மீது பொய் குற்றம் சாட்டியதாக தெரியவந்தது.

பிரேஸில் நாட்டு மாடலுடன் காதல்

தற்போது ஆர்யன் கான் பிரேஸில் நாட்டு மாடல் மற்றும் நடிகையான லாரிசா போனேசி என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆர்யன் கானின் ஆடை விளம்பரத்தில் லாரிஸா நடித்துள்ளதாகவும் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் உலா வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஆர்யன் லாரிஸாவின் அம்மாவின் பிறந்தநாள் அன்று பரிசு வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. லாரிசா தெலுங்கு படம் ஒன்றிலும், இந்தியில் ஒரு படத்திலும் கூட நடித்துள்ளாராம். மேலும் இருவரும் ரகசிய திருமணம் செய்திருக்க கூட வாய்ப்பிருக்கலாம் என வதந்திகளும் தற்போது கிளம்பியுள்ளன.

Source link