இளையராஜாவிடம் இருந்து பாதிக்கப்பட்டு தான் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் “ரோஜா”. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். டிஜிட்டல் இசையை தமிழ் சினிமாவில் புகுத்தி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார். இசைப்புயல் என அன்போடு அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளர்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகளை இரண்டு பிரிவுகளில் வென்றார். உடனே மேடையில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “எல்லா புகழும் இறைவனுக்கே” என தமிழில் சொன்னது இன்றைக்கு கேட்டாலும் புல்லரிக்கும். அப்படிப்பட்ட ரஹ்மான் கிராமத்து இசையோ, நகரத்து இசையோ என பிரித்து மேய்ந்து விடுவார். இப்படியான ஏ.ஆர்.ரஹ்மான் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்டு வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். எங்கு இளையராஜாவை பார்த்தாலும் பழைய நிகழ்வுகளை மறக்காமல் நடந்து கொள்வார். தொழில் முறை போட்டியாளர்கள் என சொல்லப்பட்டாலும் இருவருக்குள்ளும் அப்படி ஒரு உறவு உள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜா பற்றி பேசிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.

கேள்வி: இளையராஜாவிடம் இருந்து இந்த ஒரு விஷயத்தை கத்துக்கிட்டேன். எனக்கு வாழ்க்கையில ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. அப்படி என்றால் எதை சொல்வீர்கள்?

பதில்: இசைக்கலைஞர் என்றால் தண்ணி அடிப்பான், போதைப்பொருட்கள் பயன்படுத்துவான், பெண்களோடு சுற்றுவான் என கேரக்டர்களை விமர்சிக்கும் சில பேர் இருக்கிறார்கள். இதனால் இந்த துறையில் சாதிக்க நினைப்பவர்களை அந்த பக்கம் எல்லாம் போகாதீர்கள் என எச்சரிப்பார்கள். ஆனால் அந்த கூற்றை முதல் முதலில் இளையராஜா உடைத்தார். அவர் கிட்டதட்ட ஒரு சாமியார் மாதிரி உட்கார்ந்திருப்பார். குடிக்க மாட்டார், புகை பிடிக்க மாட்டார் என வேறு கெட்ட பழக்கங்களும் அவருக்கு கிடையாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் இசை தான். அதன்மேல் இருக்கும் மரியாதை காரணமாக அப்படி இருக்கும் இளையராஜாவின் செயல்கள் உள்ளே என்னை வெகுவாக பாதித்தது. அவரே பார்த்தால் நடுங்குவார்கள். எதற்காக என்றால் அவரின் கேரக்டருக்காக தான் என ஏ.ஆர்.ரஹ்மான் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார்.

மேலும் படிக்க: Nadhiya: "கிஸ் பண்ணிடுவேன்" நதியாவை மிரட்டிய பிரபல மலையாள நடிகர் – எதற்கு தெரியுமா?