தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியை மன்னிப்பு கேட்க வைத்த விஷயம் தெரிய வந்து தங்கைகள் பரணியிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ஷண்முகம் பசிக்குது என்று வீட்டிற்கு வர, சாப்பிட உட்கார்ந்த ஷண்முகத்திடம் தங்கைகள் “பரணி மீது எந்த தப்பும் இல்ல, அவ முத்துபாண்டியை சும்மா விடல, ஊர் ஜனங்கள் முன்னாடி முத்துபாண்டியை இசக்கி கிட்ட மன்னிப்பு கேட்க வைத்திருக்கா” என்று சொல்ல, ஷண்முகம் “அதுக்கு என்ன இப்போ?” என்று அசால்டாக எடுத்துக் கொள்கிறான்.

இதனையடுத்து பரணி இன்னும் சாப்பிடல என்ற விஷயத்தை சொல்ல, ஷண்முகம் அதையும் பெருசா எடுத்து கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு சாப்பிடாமல் கிடக்கும் பரணி அருகே சென்று ஏப்பம் விட்டு வெறுப்பேற்றுகிறான். இதனால் பரணி “இதுவரைக்கும் நான் நல்ல டாக்டரா தான் இருக்கேன், என்ன விஷ ஊசி போட்டு கொலை பண்ண வச்சிடாதே” என்று சொல்ல, ஷண்முகம் பயத்துடன் போர்வையை இழுத்துப் போத்தி படுக்கிறான்.

இங்கே இசக்கி முத்துப்பாண்டி ரூமில் படுத்துக் கொண்டிருக்க, அவன் இசக்கியிடம் மன்னிப்பு கேட்ட விஷயத்தை நினைத்து அவளை வம்பிழுத்து அடிக்க முயற்சி செய்ய, இசக்கி “அன்னைக்கு மாதிரி அடி வாங்கிட்டே இருக்க மாட்டேன்” என்று அரிவாள்மனையை எடுத்துக் காட்டி அதிர்ச்சி கொடுக்க, முத்துப்பாண்டி “நீ என் ரூம்ல படுக்க கூடாது” என்று வெளியே துரத்துகிறான். பாக்கியம் இங்கு வந்து “அப்படினா அவ என் ரூம்ல படுக்கட்டும், நான் உங்க அப்பாவை இங்க அனுப்பறேன்” என்று சொல்ல, முத்துப்பாண்டி “அந்த ஆளா வேண்டாம், இசக்கி இங்கயே இருந்து தொலையட்டும்” என்று சொல்கிறான்.

அடுத்து பரணி தூக்கம் வராமல் சாப்பிடப்போக எதுவும் இல்லாமல் இருக்க, தங்கைகள் அங்கு வந்து அவளுக்காக எடுத்து வைத்த சாப்பாட்டைக் கொடுக்க, பரணி சாப்பிடும் போது ஷண்முகம் அதைப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றதும் பரணி சண்முகத்தின் மீது இருக்கும் காதலைப் பற்றி சொல்கிறாள். “அன்னைக்கு நான் சண்முகத்தை புரிந்து கொள்ளல, இன்னைக்கு அவன் என்னை புரிந்து கொள்ளல. கண்டிப்பாக என் காதலை புரிய வைப்பேன்” என்று சொல்ல, அதைக் கேட்டு தங்கைகள் சந்தோசப்படுகின்றனர்.

மறுநாள் முத்துப்பாண்டி தன்னை அடித்த நான்கு பேரில் ஒருத்தன் வெட்டுக்கிளி தான் என்று தப்பாக நினைத்து அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அடித்து வெளுக்க, அவன் அது நான் இல்ல என்று சொல்லியும் முத்துப்பாண்டி விடாமல் அடிக்கிறான். இசக்கியை ஸ்டேஷனுக்கு சாப்பாடு கொண்டு வர சொல்கிறான். மறுபக்கம் ஷண்முகம் பரணி மற்றும் கனியை கூட்டிக்கொண்டு ஆட்டோவில் வெளியே செல்கின்றனர்.

இசக்கியும் இவர்களும் சந்தித்துக் கொள்வார்களா என்ற பில்டப்புடன் காட்சிகள் நகர இருவரும் பார்த்துக் கொள்ளாமல் மிஸ்ஸாகி விடுகிறது. இதையடுத்து இசக்கி ஸ்டேஷனுக்கு வர வெட்டுக்கிளியை போட்டு முத்துப்பாண்டி அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

“பிஸ்டலை எடுத்தது நீ தானு ஒத்துக்க, இல்லனா அந்த ஷண்முகம் தான் எடுத்ததுனு சொல்லு” என்று அடிக்க, முப்பிடாதி சண்முகத்துக்கு தகவல் கொடுக்க, அவன் ஸ்டேஷனுக்கு வந்து முத்துப்பாண்டி சட்டையை பிடிக்கிறான். இப்படியான நிலையில் இந்த வார அண்ணா சீரியல் எபிசோட்ஸ் நிறைவடைகிறது.