தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனியை நினைத்து முருகனிடம் வேண்ட முத்துப்பாண்டிக்கு கனியின் அப்பா அம்மா குறித்த தகவல் தெரிய வந்த நிலையில், இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி மற்றும் சனியன் என மூவரும் கன்னியாகுமரிக்கு கிளம்ப, இதைப் பார்த்த பாண்டியம்மா “எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்க, பாக்கியமும் இசக்கியும் போகும்போது எங்க போறன்னு கேக்குறீங்க எனத் திட்டுகின்றனர்.

பிறகு சௌந்தரபாண்டி “முக்கியமான விஷயமா வெளிய போறோ,ம் அக்கா வரதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும், அதுவரைக்கும் நீ வீட்ட பார்த்துக்க, நீ இல்லன்னா அந்த சண்முகம் இங்க வந்துடுவான்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் செல்ல, இசக்கி “அவங்க வரவரைக்கும் நீங்க தனியா என்கிட்ட சிக்கி இருக்கீங்க, ஏதாவது பண்ணீங்க அவ்வளவு தான்” என எச்சரிக்கிறாள்.

இதையடுத்து மறுபக்கம் சண்முகம் தூங்கிக்கொண்டே இருக்க, பரணி அவனை கிளினிக்கில் விடச் சொல்ல, அவன் “முடியாது ஆட்டோவில் போ” என சொல்கிறான். வைகுண்டமும் அவசரமா இருந்தா ஆட்டோல போவோமா என சொல்ல அவன் கனியை நினைத்து கவலையில் இருக்க, “நானும் இல்லனா ரொம்ப கவலைப்படுவான் அதனால நான் கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல பிறகு வைகுண்டம் சண்முகத்தை எழுப்பி அனுப்பி வைக்கிறார்.

இருவரும் வண்டியில் வந்து கொண்டிருக்க எதிரே வரும், சௌந்தரபாண்டி “டாக்டருக்கு படிச்சிட்டு உனக்கு இதெல்லாம் தேவையா, எதுக்கு இப்படி கஷ்டப்படுற?” என்று கேட்க பரணி அதுக்கு பதிலடி கொடுக்கிறாள். பிறகு சண்முகத்தை “ஒரு தங்கச்சி உன்ன விட்டு பிரிஞ்சிட்டா, கூடிய சீக்கிரம் இன்னொரு தங்கச்சியும் உன்ன விட்டு போய்டுவா. எல்லா தங்கச்சியும் உன்னை விட்டு போன பிறகு பரணியும் பிரிந்து போய் விடுவா” என சொல்ல பரணி “ஒரு நாளும் நான் சண்முகத்தை பிரிய மாட்டேன்” என பதிலடி கொடுக்கிறாள்.

பிறகு சண்முகத்தை கூட்டி வந்து டீக்கடையில் உட்கார வைத்து அவனிடம் காதலுடன் பேசுகிறாள். அடுத்ததாக முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி, கனியன் என மூவரும் கன்னியாகுமரிக்கு வந்து இறங்குகின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கனியின் அப்பா, அம்மா தகவலை தெரிந்து கொள்கின்றனர். உடனே கிளம்பி கனியின் அப்பா அம்மாவைப் பார்க்க வருகின்றனர். ஒரு பெரிய பணக்கார குடும்பம் தான் கனியின் குடும்பம் என தெரிய வருகிறது. மேலும் அம்மாவின் பெயர் மீனாட்சி அப்பாவின் பெயர் வேலு மாணிக்கம் எனவும் தெரிய வருகிறது.

இவர்கள் இந்த வீட்டுக்கு வரும் நேரத்தில் ஒரே கூட்டமாக இருக்க, என்ன விஷயம் என்று விசாரிக்க, “காணாமல் போன இவங்க பொண்ணோட பிறந்தநாள், இந்த நாள்ல எல்லாருக்கும் சாப்பாடு போட்டு துணிமணி பணம் கொடுத்து கோலாகலமா கொண்டாடுவாங்க” என்று சொல்ல சௌந்தரபாண்டி “எப்பேர்பட்ட குடும்பத்தில் வாழ வேண்டியவ எங்க வந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா” எனக் கூறுகிறார்.

பிறகு மீனாட்சி கனியை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் குடும்பப் பாடலை பாடி முடித்ததும் சௌந்தரபாண்டி வேலு மாணிக்கத்தை கூப்பிட்டு “உங்க பொண்ணு இருக்கும் இடம் எனக்கு தெரியும்” என்று சொல்ல, அதைக் கேட்டு எல்லோரும் ஷாக் ஆகின்றனர். “நீங்க உண்மையா தான் சொல்றீங்களா? இந்த விஷயம் மட்டும் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா” என்று சொல்லித் திரும்ப பின்னாடி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சி மயங்கி விழுகிறாள்.

அவளுக்கு தண்ணீர் கொடுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்த பிறகு சௌந்தரபாண்டியை கையெடுத்து கும்பிட்டு “என் பொண்ண கண்டு பிடிச்சு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என சொல்கிறாள். இங்கே கனி தூங்கிக் கொண்டிருக்க திடீரென யாரும் தூக்கிச் செல்வது போல கனவு கண்டு மிரண்டு எழ, சண்முகம் விபூதி பூசி மடியில் படுக்க வைத்து கொள்கிறான். கனி தன்னை விட்டுப் பிரிந்து விடுவாளோ என கவலைப்படுகிறான்.

மறுநாள் காலையில் மீனாட்சி, வேலு மாணிக்கம் ஆகியோர் கனியை பார்ப்பதற்காக பூஜை போட்டு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் இந்த வார அண்ணா சீரியல் எபிசோட்கள் நிறைவடைகின்றன.