பாஜக வுடன் கூட்டணி இல்லை, நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தாக்கப்படும் மீனவர்கள்:

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” சிந்தனை சிற்பியின் புகழை போற்றும் வகையில் அதிமுக ஆட்சியில் மணிமண்டபமும், ஒரு ஆண்டும் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் பரிசு தொகையும், எட்டு கிராம் தங்கமும் கொண்ட விருது வழங்கவும் ஆவணம் செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து நாளில் இருந்து மீனவ மாவட்டங்கள் தொடர்ந்து சொல்வேனா துயரத்துக்கு ஆளாகி வருகிறது. இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.

போதை பொருள் நடமாட்டம்:

கடந்த நான்காம் தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். 20 மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மீனவர்களை விடுவிக்க மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவற்றை கண்டு கொள்ளாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு ஒழிக்காமல் கரும்பு கரம் காட்டுவதால் தான் தமிழகத்தில் போதை கஞ்சா கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா போதை வஸ்துகள் ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காததால் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது, போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும்.

சந்திப்பு ஏன்?

பாஜக உடன் கூட்டணி இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டோம். பாஜக கூட்டணிக்கு அதிமுக கதவு எப்போதோ அடைக்கப்பட்டது. நீட் விவகாரத்தில் மோசடி பேர்வழி திமுக. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி உள்ளது திமுக. சட்டமன்றத்தில் நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர்” என தெரிவித்துள்ளார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…