சென்னையில் இன்று வேட்புமனு தாக்கலின் போது , ஒரு இடத்தில் அன்பு மழையும், மற்றொரு இடத்தில் மோதல் அலையும் நிகழ்ந்தது.
மக்களவை தேர்தல்:
மக்களவைத் தேர்தலானது ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது, ஜூன் 2 மற்றும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அன்பு மழை:
பாஜக கட்சி சார்பில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். இந்நிலையில், இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிலையில், ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். அப்போது, இருவரும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இரு மாற்று கட்சியினர் மரியாதையுடனும் , அன்புடனும் நாகரிகத்துடனும் இருப்பதை பார்த்து, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். – காரணம் என்ன?
மோதல் அலை:
இங்கு இப்படி இருக்க, அமைச்சர் சேகர் பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருவரும் தங்களது ஆதரவாளர்களுக்காக மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட சென்னை தொகுதியில் தி.மு.க.வின் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மனோ களம் இறங்குகிறார். இச்சூழலில், திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் சென்றனர்.
அப்பொழுது, யார் மனுக்களை முதலில் வழங்குவது என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் சேகர் பாபு மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரி இருவரையும் அழைத்து பேசியதின் அடிப்படையில், பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது. அதையடுத்து இரண்டு கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கலின் போது, இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு – ஜெயலலிதாவின் அரசியல் களம்